வியாழன், 17 நவம்பர், 2011

தியாகம் ..!

யாருக்காக? ஏன் மடித்தார்கள்   இந்த தியாக சீலர்கள் தன்குருதியை எமக்காய் எதற்கு தரவேண்டும் கந்தக பொதி சுமக்கும் பொது உங்களை நம்பி நடை போட்டவர் தான் விட்டுபோகும் கால் தடத்தில் நீங்கள் எல்லாம் வருவிர்கள் என்ற நம்பிக்கை அன்றி வேறு இல்லை பிராபாகரம் என்னும் பெருமாயைக்குள் விழுத்து எதற்று நிங்கள் கிடக்குறியல் ஒரு நாடு தேசியம் ஒரு தனி மனித வரலாறு இல்லை எல்லோருடைய பங்களிப்பும் கட்டாயம் இருக்க வேணும். யாரவது ஒருவன் வருவான் அவன் தலையில் போட்டுவிட்டது நாங்கள் சுகமா இருப்பதற்கு எமக்கு பழகிபோட்டுது .



தேசம்காக்க சென்றவர் குருதியை விற்று பிழைக்கும் கூட்டம் தன்னை மக்கள் நீங்கள் தான் அழிக்கவேண்டும் மாவீரர் நாள் மகத்தான நாள் விடுதலையை நேசிக்கிற ஓவரு தமிழனும் அவர்களுக்கு தலை வணக்கவேணும்...! அது அவர்கள் போடும் மாவீரர் கடைகளில் அல்ல உங்கள் நெஞ்சில் குடிகொண்டுள்ள உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் வீட்டிலும் தீபம் ஏற்றலாம் என்தேசம் காக்கப்படும் எண்டு நம்பும் உங்களில் ஒருவன் .

நீங்கள் எல்லாம் காத்திருக்கும் அதே தலைவனுக்காய் நானும் காத்திருக்குறேன் ஒரு கோழையாய்.......!!!

ஞாயிறு, 6 நவம்பர், 2011

தடம் ..!

நான் பதித்து நடத்த கால் தடத்தில் என் பிள்ளை வரவேண்டும் எண்டு நான் நினைப்பதில் என்ன தவறு இருக்குறது ஆனால் பிள்ளை தான் ஒரு தடம் பதித்து நடப்பதாய் அடம் பிடிக்குறது சில வேலை என்னை மிச்ச அவன் யோசித்தனோ என்னமோ யாருக்கு தெரியும் அவன் சீதனம் வாங்கித்தான் கட்டுவன் எண்டு ஆதங்கம் ..!