புதன், 30 ஏப்ரல், 2014

நானும் அப்பாச்சியும் 2 .!

grand+.jpgநான் செய்யும் குறும்புகளுக்கு அளவே இருக்காது அப்படி குழப்படி சிறுவயதில் ஒவ்வரு நாளும் காயம் இல்லாமல் இரத்தம் சிந்தாமல் வீடு போனது கிடையாது அப்படி விளையாடி வரும் காயங்களுக்கு மருந்து போட்டு விடுவதில் இருந்து சுடுதண்ணீ ஒத்தனம் கொடுத்து பழைய நிலைக்கு வரும்வரை கிழவி உறங்காது .சும்மா பஞ்சி  பட்டு படுத்து இருந்தாலே கிழவி குழற தொடங்கிடும் ஒருநிமிடம் சும்மா இருக்க மாட்டான் இன்னும் எழும்பாமல் படுத்து இருக்கிறான் என்ன எண்டு கேளண்டி மகளே என்று அம்மாவை நச்சரித்து எடுக்கும் .

மாதுளம் பழம் மரத்துக்கு மாதுளைக்கு அணில் கடிக்காமல் அங்கர் பை எடுத்து கட்டி விடுவா பழம் நல்லா முற்றிய பின் பை இருக்கும் பழம் இருக்காது நானு ஆட்டையை போட்டு பள்ளிக்கூடம் கொண்டு போயிடுவன் ,அந்த நேரங்களில் யாரவது பக்கத்துக்கு வீட்டு பெடியள் வந்து போனா முடிச்சுது கதை அந்த பெடிவந்தது புடுங்கி கொண்டு போட்டுது கள்ள பெடி வீடுவாசளுக்கு எடுக்க கூடாது என்று பழி அங்க விழும் நாம சோகமா குந்தி இருந்து கதை கேட்பம் ஓமன ஆச்சி அவன் வர நீ என்ன செய்தனி பார்க்காமல் என்று இன்னும் கொளுத்தி போடுறது நம்ம வேலை பாருங்கோ .

அப்பாச்சியின் கைவந்த கலை ஓட்டப்பம் சுடுவது ஒரு 20வருடமா நான் இன்னும் அப்படி ஒரு அப்பம் சாப்பிடவே இல்லை உடைச்ச சட்டியில் ஊற்றி சிரட்டையால் மூடி எடுக்க அந்த அப்பத்தில் பல நூறு ஓட்டை இருக்கும் நல்ல தேங்காய் பாலும் சீனியும் கலந்து அதில் தொட்டு சாப்பிடும் ருசி வாழ்வில் இன்றைய தலைமுறைக்கு கிடைக்காத ஒரு காலமா போட்டுது .என்ன சமையல் செய்தாலும் வாசனை நாலுவீடு தள்ளி மணக்கும் கைப்பக்குவம் உள்ள ஆள் ஆச்சி என்னமோ தெரியல்ல அளவான பாசமும் கூடிய அன்பும் கொட்டி கொடுபதால் எனக்கு சுவையா இருந்து இருக்கும் என்று இப்பொழுது தோன்றுவது உண்டு .

உள்ள பனைமரம் எல்லாம் ஏறி கிளி பிடிக்க நெஞ்சு எல்லாம் உரிச்சு கை எல்லாம் கீறி கிழிபட்டு வீட்டுக்கு வருவன் அம்மா கண்டா ஓட ஓட அடி விழும் என்கிற பயத்தில் வீடுக்கு புறத்தால் செக்கல் பொழுதில் வந்து பதுங்கி இருக்கிறது அப்பாச்சி கோயிலா வரும்வரை வந்தபின்தான் ஓடிபோய் அவா பின்னாடி நின்று பாதுகாப்பை தேடி ஆயிரம் பொய் எல்லாம் சொல்லி அம்மாவை சமாளிச்ச பின்னே வீட்டுக்கு உள்ளே போகலாம் இல்லது கிளுவம் தடி முறியும் முன்னாடி போய் மாட்டினா பாருங்கோ .அம்மா அடிக்கவேணும் என்று முடிவு எடுத்தா இரவு பாய்க்கு கிழே தடி முறிச்சு வைத்து இருப்பா படுக்கைக்கு போக எட்டி கையில பிடிச்சு சுற்ற தொடங்கினா கொப்பளம் வரும்வரை விழும்   என்று தெரியும் ஆச்சிக்கு எனக்கு வேவு பார்க்கிறது கிழவிதான் அட பெடி அம்மா தடி முறிச்சவா பின்னேரம் நீ இன்று எனக்கு அருகில பேசாமல் படு அங்க போன நான் பிடிக்க வரமாட்டன் என்று முதலே தகவல் தந்துடுவா .


நான் அடிக்கடி கிழவியின் சங்கிலி ...தோடு ..மோதிரம் .எல்லாம் நீனு செத்தா எனக்கு தானே என்று சொல்லுவன் இப்பவே ஒரு பேப்பர்ல எழுதி வை அல்லது மகனிட்ட சொல்லி வை என்று பகிடியா சொல்வது உண்டு அதுக்கு ஆச்சி சொல்லுவா நான் சாகிற காலம் நீ என்னை எப்படி பார்க்கிறாய் என்று பார்த்துதான் உனக்கு தருவன் அல்லது இல்லை என்று அப்படி அப்பாச்சி இறக்கும்போது 89 வயது கடைசி காலங்களில் கண் தெரியாமல் போயிட்டது குளிக்க தண்ணி நிறைத்து கொடுத்து, பேப்பர் வாசிக்கிறது; ஊர் புதினங்களை வந்து வக்கனையா சொல்லுறது ,எல்லாம் என்னுடைய வேலை அவியல் அப்படி இவையள் இப்படி அந்தபெடி அங்க நிக்கு யாரு யாரு கலியாணம் கட்டினம் யாரு தெருவில நின்று காதல் பண்ணினம் என்று கிழவிக்கு ஒன்றும் இல்லாமல் நான் வந்து சொல்லுவன் .

சிலவேளை தனிய இருப்பா வீட்டில் நான் வந்தா சத்தம் இல்லாமல் போய் மெதுவா சங்கிலியில் பிடிப்பன் என்ன செய்கிறா பார்ப்பம் என்று கிழவி சிரிச்சு போட்டு சொல்லும் உனக்குத்தான் கழட்டிக்கொண்டு போ என்று நான் பேசுறது இப்படி கள்ளன் வந்து செய்தா சத்தம் போடாமல் இப்படி சொல்லுவியா என்று அதுக்கு கிழவி சொல்லும் திருவாலி உன்னை தவிர எவனுக்கு என்னை தொடும் தைரியம் வரும் என்று ;யாருடைய மகள் என்று நினைச்ச என்று வீராப்பா சொல்லுவா .

சும்மா காச்சல் வந்தால் நான் அனுங்கி குனுங்கி கிடப்பேன் அண்ணன் சொல்லுவான் அவனுக்கு நெஸ்ட்மொட்  காச்சல் வந்திட்டு ஒன்று வாங்கி கரைத்து கொடுத்தா குளிசை போடாமல் மாறும் என்று நக்கல் பண்ணுவான் கிழவி தன்னிடம் உள்ள எல்லாம் புறக்கி செவினப் சோடாவும் .நெஸ்ட்மொட்டும் வாங்கி வந்து தலைமாட்டில் வைக்கும் உண்மைக்கும் இரண்டையும் கண்டால் கச்சல் போயிடும் எனக்கு :) பாசம் என்றால் என்ன என்று சொல்லி கொடுத்தவா ஆச்சி அப்படி வாழ்த்து காட்டி சென்றார் .


இப்பொழுது என்னுடைய கவலைகள் எல்லாம்  குடும்பம் என்றால் என்ன ?உறவு என்றால் என்ன ? அன்பை பரிமாறுவது எப்படி ...விட்டுகொடுப்பு ..புரிதல் ..நேசம் ..பாசம் என்று இப்பொழுது உள்ள தலைமுறைக்கு சொல்லி கொடுக்க அப்பாச்சிகள் ...அம்மம்மாக்கள் அருகில் இல்லையே திக்கு திசைகள் அற்று அனாதரவா வளர்த்து வரும் இளைய சந்ததி அப்பா அம்மாவைக்கூட வைத்து பார்க்குமா எதிர்காலத்தில் என்பது கேள்வி குறியே .

பர்வதத்தின் சிவலையன் .!



பர்வதம் ஆச்சி இரண்டுநாளா போன சிவலையை காணம் எங்க போனானோ..? ஒன்னும் தெரியாது யாருட்ட கேட்க..? தனிக்கட்டை எண்டு தெரியும் நேரகாலத்துக்கு வீட்டுக்கு வராமல் எங்க மேயுறான்...? வரட்டும் குறி இழுக்கிறன்.. என பேசியபடி களனித்தண்ணியை பழைய வாளியில் ஊறினார்.

சிவலை எப்படியாவது தன்னை பிணையெடுக்க கிழவி வரும் என்ற நம்பிக்கையில் கொடுத்ததை சாப்பிட்டபடி நின்றிருந்தான்... ஆனாலும் மனதில் நான் பரமர் வீட்டுப்பக்கம் போனது பிழைதான் என எண்ணி வேதனை பட்டபடி எவ்வளவு பணம் கட்டவேண்டி வருமோ தெரியல்லை ஆச்சி பாவம் என் யோசினையில் நின்று இருந்தான்...

அடே முனியாண்டி எங்கால போற..? வடக்கால போனால் இவன் சிவலை நிண்டா அனுப்பி விடு நேற்று பூரா தேடி களைச்சு போனன்.. இன்னும் வீடு வாசல் வராமல் என்ன உத்தியோகம் எண்டுதான் விளங்கவில்லை எனக்கு.

வழமையா கிழக்க போறவன் அவள் சரசு வீட்டில பெட்டையள் அதிகம் எண்டதால நான்தான் அங்கால போகவேணாம் என்று மறிச்சன்.. என்னுடைய பிழைதான்.. சரசு நம்ம சாதிசனம் ஒன்று என்றாலும் கதைத்து பேசி இருக்கலாம்.. இப்ப பாரு போனவனை காணம்.. நாளைக்கு பேரனை வரசொல்லி இருக்குறன் ஒருக்கா போலீசில் போய் ஒரு முறைப்பாடு போடுவம் எண்டு .

அப்பொழுது முருகேசர் எனை ஆச்சி சிவலை இரண்டுநாளா பிடிச்சு வைத்து இருக்கினம் நீ என்ன இங்க நின்று அலம்பிற..? போ இண்டைக்கு பிணை எடுக்காட்டி நாளைக்கு இடம் மாற்ற போறான்கள் போல.. கெதியா போனை.. ஆட்டோ சண்முகம் வீட்டுக்கு பக்கத்தில்தான் ஆறு ஏழுபேர் ஒன்றா வைத்து இருக்கு.. போகும்போது குடும்பகாட்டு கொண்டு போணை.. என சொல்லி கடக்க ஆச்சி ஒப்பாரி தொடங்கிச்சு.. நாசமா போவார் என்னட்ட காசை புடுங்க நிக்கினம் நல்லாவே வரமாட்டினம் வயிறு எரிஞ்சு சொல்லுறன் அவன் ஒரு பிரச்சினைக்கும் போகமாட்டான் எல்லோருடனும் பழகுவான் மெதுவா கூட்டி போயிட்டு இப்ப காசுக்கு நிக்கினம் போல வாறன் போய் நாலு கிழி கிழிச்சா சரிவரும்...

சிவலை உன்னை எடுக்க ஒருவரும் வரக்காணம் என்ன செய்ய போற என கேட்க.. சிவலை ஆச்சியின் சேலை கலரை கண்டு கண்களை அகல விரிக்க புரிந்தது அவருக்கு யாரவோ வருவது.. நேர வந்த பார்வதம் ஆச்சி சிவலையை கட்டி அணைத்து என்னடா ஆச்சு அடிச்சு போட்டங்களா படுபாவிகள் நல்லாவருவினம் கொழுப்பெடுத்து திரியுறவ.. என வசைபாட குறுக்கிட்டு பார்வதம் ஆச்சி சிவலை பரமரின் வேலி பாய்ந்து போய் இருக்குறான் அங்க நிண்ட இளசுகளை மொட்டு பூ எண்டு பாராமல் கடிச்சு வைத்து இருக்குறான் சும்மா விளங்காமல் கத்தாதை.

அதுக்கு என்னிடம் வந்து சொல்லாமல் எதுக்கு இங்க கொண்டு வந்தனியள் இரண்டுநாள் அன்னம் தண்ணி இல்லாமல் கிடக்கு பெடி வாடிபோனான் வேற.. சரி இப்ப என்ன நான் செய்யவேணும் பரமத்தான் எவ்வளவு கேட்கிறான் எண்டு கேட்டு சொல்லு எனக்கு ஆயிரம் அலுவல் இருக்கு .

சரியன ஆச்சி எல்லாமா இளம்கண்டு ..கச்சான் என்று ஒரு கால் ஏக்கர் மேய்ந்து இருக்கு 3000 ரூபா கொடுத்துட்டு மாட்டை அவிழ்த்திட்டு போ.. இனியாவது கட்டி வைத்து வள பயிர் செய்யும் நேரம் அவிழ்த்து விடாத பார்க்க ஆக்கள் இல்லை என்றால்.. என கூறி முடிக்க முந்தானை முடிச்சில் கொண்டுவந்த காசை எண்ணி கொடுத்து போட்டு சிவலையுடன் வெளியில் வந்தா பர்வதம் ஆச்சி மூணு..நாள் களனி தண்ணி இருக்கு தவுட்டோட கலந்தது தாரன் வடிவா குடிக்கலாம் என சிவலையுடன் பேசியபடி வீடுநோக்கு நடந்தார் கிழவி..

ஒரு பொழுது ரயிலில் .!

வேலையின் களைப்பு வீடு செல்லும் வேகத்தில் ரயில் தரிப்பிடம் நோக்கி வேகமா வந்து கொட்டாவி விட்டபடி கடிகாரம் பார்த்தேன் இன்னும் இரண்டு நிமிடம் வந்திடும் ரயில் சுற்றும் முற்றும் யாராவது தெரிந்த முகம் நிக்கும் என்னும் நினைவில் கண்களை எல்லா திசையிலும் சுழற்றி பார்த்த படி மனதில் நாட்டு நிலவரம் செய்திகளும் வந்து வந்து போனது அப்பொழுது பெரும் இரைச்சலுடன் தரிப்பிடம் வந்து நின்றது ரயில் .

ஏறி நடுப்பக்கம் ஒரு சீட்டில் இருந்து விட்டால் எழும்ப வேண்டிய தேவை இருக்காது என்று எண்ணி முண்டி அடித்து இடம் பிடித்து அமர்த்தேன் பக்கத்தில் ஒரு ஆபிரிக்க நாட்டு இளையன் அவனின் காதுகளில் மாட்டி இருந்த மார்க்கான கேட்போனில் இருந்து வந்த பாடல் இரைச்சல் என் காதுகளுக்கு வண்டுகளின் சத்தமா கேட்டது ...அப்படியே தலையை நிமிர்த்தி முன்னாடி பார்த்தேன்  உதட்டு சாயம் பளபளப்பா இருக்க தனது நாவால் ஈரம் கொடுத்து தன்னை சிறிய கண்ணாடியில் ரசித்தபடி ஒரு வெள்ளை கண்களை சிமிட்டி புன்சிரிப்புடன் அமர்த்து இருந்ததாள் நானோ ரயிலின் கண்ணாடி ஊடக வெளி உலகை வெறித்து பார்த்தபடி சேர்வாய் தலை சாய்த்து குறைக்கண்ணில் இருக்கையில் ..

அப்பொழுது பின்னாடி இருந்து இருவரின் உரையாடல் என் காதுகளுக்கு அண்மையா கேட்டது .
உங்களுக்கு விஷயம் தெரியுமே அக்கா அவள் கலா வட்டிக்கு கொடுத்தவன் காசை கொடுக்காமல் கொண்டு ஓடிட்டான் அவளின் திமிருக்கு இன்னும் வேணும் ...
ஓ ... நானும் கேள்வி பட்டனான் இவர் நவத்தாரின் மனுசியும் அவாவும் நல்ல கூட்டு இருவரும் சேர்த்துதான் மாறி மாறி கொடுக்கிறது ..
ஒருக்கா நான் காசு மாறி கேட்டதுக்கு உங்கட மனுஷன் ஒரு வேலை தான் செய்கிறார் எப்படி வட்டி தருவியல் எண்டு கேட்டவள் இப்ப பார்த்தியே ....என தங்களின் ஆதங்கத்தை கொட்டி தீர்த்தபடி அவர்களின் பயணம் தொடருது .....

முன்னாடி ஒரு தொலைபேசி ...அம்மா என்று அழைக்காத உயிர் இல்லையே ...என்னும் பாடலுடல் எனது மனதில் ஆள் புதுசா வந்து இருக்கு வெளிநாடு இன்னும் அம்மா நினைவு போகவில்லை வந்த புதிதில் நானும் இப்படியான பாடல்கள் கேட்பது அதிகம் என்பதால் மனதில் ஊகித்தபடி இருக்க போனை எடுத்து ஹலோ என்கிறான் அந்த வாலிபன் ..

ஓம் அம்மா வா ..சொல்லுங்கோ கேட்குது ..
என்னம்மா செய்ய இப்பவும் ஒரு வேலைக்குதான் போய் கேட்டுட்டு வாறன் ....
ம்ம்ம் ..அப்படியா சொன்னவர் ....இன்னும் எனக்கு வீசா சரிவரவில்லை அம்மா ...

ஆ ஆ இல்லை இருக்கிற ரூமுக்கு காசு கொடுக்கவே சரியான கஷ்டம் எனக்கு அம்மா .
ஒ ...வட்டி காசோட திருப்பி தரலாம் எண்டு சொல்லுங்கோ எப்படியும் நான் இந்தமாதம் வேலை தேடி எடுத்துடுவன் ஒரு முன்று மாதம் பொறுக்க சொல்லுங்கோ அம்மா .
என்னது இல்லையாமா ...சரி மாமாவிடம் கேட்டு பாருங்கோவன் ..அதுசரி அவர் பேசுவார்தானே வந்த காசே இன்னும் கொடுக்கவில்லை ...
சரி அம்மா நான் இங்க சிநேகித பெடியளிடம் கேட்டு பார்கிறேன் நீங்க கவலை படவேண்டாம் எப்படியும் மீட்டு எடுக்கலாம் அழவேணாம் அம்மா என்ன ...
தங்கச்சி சுகமே ஓகே உங்களுக்கு காசு நான் பிறகு காட் போட்டு எடுக்கிறேன் அம்மா வையுங்கோ போனை என்ன ஓகே ஓகே கவலை படாமல் இருங்கோ என்ன ஓகே ஓகே ..

என்றபடி துண்டிக்கப்பட்டது அவனின் உரையாடல் நிமிர்த்து பார்க்கிறேன் அவனின் கண்களில் நீ நிறைத்து இருந்தது குனித்தபடி நின்று இருந்தான் கண்கள் உடைவது பிறருக்கு தெரியாமல் இருக்க உரையாடல் கேட்ட எனது மனமும் கலங்கி போயிட்டு ஏன்?எமக்கு மட்டும் இப்படி ஒரு வாழ்க்கை என எண்ணியபடி இருக்க இடதுபக்கம் ஒரு பெரிய சத்தம் ...

வாட் வாட்  பாய்ஸ்  வாட் வாட் பாய்ஸ்... என்னும் அழைப்பு மணியுடன் வேறு ஒரு தொலைபேசி காது மாட்டி கொலுவியபடி டேய் ..மச்சான் சொல்லு எங்க நிக்கிற ....
இப்ப ஒரு ஐந்து நிமிடத்தில் வந்திடுவன் நில்லு என்ன பெடியள் எல்லாம் வந்திட்டங்களா இஸ் பொட்டுக்கு ....என்னவாம் அவர் அவருக்கு ஒரு பொண்டு பிளான் இருக்கு இண்டைக்கு போடுறன் காதை பொத்தி ..கண்டா சொல்லு வாறன் சுள்ளான் என்று ....மச்சி இண்டைக்கு ஏரியாவை ஒரு ஆட்டு ஆட்டுறம் ஓகே ...
பிறகு அவள் என்னவாம் ......விடு மச்சி அவள் ஒரு மொக்கை பிகர் அவளுக்கு நீ ஏன் அலையிற விடு விடு ..ஓகே ரயிலில நிக்கிறன் நேர சந்திப்பம் என்ன வாறன் வை .

திரும்பி பார்த்தேன் இன்னும் பால் மணம் கூட மாறவில்லை பூனை முடிகளாக இப்பதான் எட்டி பார்க்கும் தாடையில் சில ரோமம் ஓங்கி ஒரு அடி அடிச்சா செத்து போடும் இம்புட்டு சீனை போடுது ..நாதாரி என்று நினைத்து கொண்டு இருக்க ...

சவா (நலமா )சொல்லுங்க அம்மா.... கொச்சை தமிழ் எப்படியும் இங்க பிறந்த பிள்ளை போல இருக்கு ஓம் நான் கிளாஸ் முடிச்சு அங்க போயிட்டு இருக்கிறன் (ரயில் போகும் இடம் வேறு பிள்ளை சொல்லும் இடம் வேறு ).....ஓகே சுவார் (பின்னேரம் )வந்திடுவன் மாம் ஓகே முத்தத்துடன் கட்பண்ண பட்டது அம்மாவின் அழைப்பு .....அப்படியே ம்ம் சொல்லு நீ மாம் கால் பண்ணினா எங்க நிக்கிற என்று கேட்டா நான் மாறி சொல்லுட்டு வாறன் மைக்டொனட் போவமே அங்கதான் எங்கட ஆக்கள் வாறது குறைவு அந்த மைக்கில் மேல்மாடி இருக்கு அங்க போவம் என்ன ...ஓகே ரயிலில் எங்கட ஆக்களும் இருகினாம் நான் போனை கட் பண்ணுறன் இறங்கி மேல வந்திட்டு ரின்க் பண்ணுறன் ஓகே ம்ம் ...

முடியை கொத்தி கொத்தி விட்டபடி கழுத்துக்கு சுற்றுவதை அரைவாசி முகத்துக்கு சுற்றியபடி தான் எதோ பெரிய கெட்டிக்காரி என்னும் நினைப்புடன் ரயிலின் கம்பியை பிடித்தபடி ஒரு 17 வயது இருக்கும் அந்த பிஞ்சு முகத்தில் ஒருவித வெட்க சிரிப்புடன் பயணம் செய்தது ..

இந்த ஒரு பெட்டிக்குள் இவ்வளவு மனிதர்கள் ஒவ்வெரு சோகத்துடன் ..சந்தோஷத்துடன் ..பயணங்கள் தொடர்வதை எண்ணி இறந்த காலத்தை அசை போட்டபடி எனது போனை எடுத்து ..கடவுள் ஏன் கல்லானார் மானம் கால்லாய் போன மனிதர்களாலே ...என்னும் பாடலை போட்டு கேட்டபடி எனது பயணம் தொடருது .....
rayil_1066656f.jpg

ஏன் இவங்க இப்படி ..!

காலை வேலையை முடிச்சிட்டு மெட்ரோவில் பப்பரக்கா என்று முன்சீட்டு வரை காலை நீட்டி இருந்தது வந்தேன் ஒரு இடத்தில ஒரு அண்ணை ஏறினாறு அப்படியே வந்து என் முன்னாடி இருந்தாரு நானு காலை மடிச்சு மரியாதையா இருந்தேன் ..

காரணம் ஏறினவர் நல்ல அழகா உடை அணித்து  ஒரு உயர்தர வேலைக்கான மிடுக்குடன் அவ்வளவு அழகா இருந்தார் சிறிய புன்னைகையை தவழவிட்டபடி ..
ஒரு சிறிய அமைதியின் பின் பேச்சு கொடுத்தார் தம்பி நீங்க தமிழா நான் மனதில் (படிச்சபயல் நம்மகூட பேசுது )நினைத்தபடி ஆமா அண்ணே என்று சொல்லிட்டு இருக்க சொன...்னாரு உலகத்தில வன்முறை ;பயங்கரவாதம் தலை தூக்கி ஆடுது (ஒருவேளை இவன் ரகசிய போலீஸோ) இதில இருந்து மீள ஒருவழிதான் இருக்கு ..

நான் ஆவலா என்ன வழி அண்ணே நீங்கள்எல்லோரும் ஆண்டவரிடம் சரண் அடையவேணும் (இதுக்கு கோத்தா பருவாயில்லை )என்று தொடங்கி இந்தினையாவது அதிகாரத்தில் அவர் சொல்லுறார் பாவம் செய்யாமல் இருங்க என்று (என்னை கொடுமை படுத்துவது பாவம் இல்லையா )அன்பு செலுத்த சொல்லி ....

இப்படி உபதேசம் நீண்டு போகுது (இதுக்குத்தான் வெள்ளையும் சொள்ளையுமா உடுப்பு எவண்டா வேண்டி கொடுக்கிறான் ) நானு பொறுமை கடந்து ஆரம்பிச்சான் ஞானசம்மந்தர் முன்று வயதில் தேவாரம் பாடி இறைவனை தனது அன்பால் கட்டிபோட்டார் என்று தொடங்க ...அவரு சொன்னார் உமக்குள் சாத்தான் இருக்கு அது இப்படிதான் பேசசொல்லும் ஒருநாள் வந்து ஆண்டவரின் ஆசீர்வாதம் கிடைத்தா சாத்தான் உங்களை விட்டு அகன்று நீங்கள் ஒரு மறு பிறவி காணலாம் ...

நல்லூர் கந்தா அந்த வேல் இங்கின தா இவன் வாயில விட்டு சுத்தணும் போல இருக்கு எனக்கு ..அடபாவிகள் ஒரு அப்பத்துக்கும் வையினுக்கும் நான் உன்கூட வருவான் என்று நீ எப்படி முடிவு எடுப்ப ஒரு பீர் வாங்கித்தாறன் வாறியா என்றால் போயிருப்பன் என்ர கதிரமலையனே என் இப்படியானவை எல்லாம் என் கண்ணுல காட்டுற ,கண்ணை மூடிட்டு திறந்து பார்த்தா பின்சீட்டில ஒருத்தனுக்கு புத்தம் கொடுத்திக்கொண்டு நிக்கிறார் அவன் பாவம் யாரு பெத்த பிள்ளையோ ...

ஒரு மிஸ் கால் விபரீதம் ..(உண்மை கதை )

குறிப்பா புலம் பெயர்த்த ஈழ மக்கள் உங்களுக்கு இது உதவும் எவர் முதல் சொல்வது நம்ம கௌரவம் என்னாகும் மரியாதையை போயிடும் என்னும் சில அற்ப விசயங்களுக்கு பயந்து நீங்கள் உங்களுக்கு நடந்த இப்படியான சம்பவத்தை மறைத்து இருக்கலாம் ..

ஆகவே விழிப்பாய் இருங்கள் மோசடிகள் பல கோணத்தில் பல மாதிரி நடக்கு அதில் இதுவும் ஒன்று ஓகே பிரச்சினைக்கு வருவம் ..

(கற்பனை பெயர் அனைத்தும் )
வீட்டு தொலைபேசி அதிகாலை 5.30 மணிக்கு உறக்கத்தை கிழித்து அலறி தனது குரலை தயார் செய்கிறது நிசப்தம் உறக்கத்தை வேண்டி நிக்க தொலைபேசி தொந்தரவு கொடுக்கிறது  மனதில் யாரா இருக்கும் என எண்ணியபடி எட்டி போனை எடுத்து காதினில் கொடுக்கிறாள் ஜெசி மறுமுனையில் ..
ஹலோ ..ஹலோ .
இவள் ..ம்ம் யாரு நிங்க எங்கிருத்து ..
என்னை தெரியாதா வடிவேலர் காணியில் இருந்தம் இடம் பெயர்த்து ரதியின் தங்கை நான் நீங்க யாரு ?சுரேஸ் அண்ணை இல்லையா என எதிர்கேள்வி வைக்கிறது நாட்டில் இருந்து வந்த அந்த குரல் ..
இவள் இல்லை எனக்கு ஊர் தெரியாது நான் முன்று வயதில் இங்கு வந்தவள் சிலவேளை சுரேசுக்கு உங்களை தெரியும் போல அவர் வேலைக்கு போயிட்டார் வந்த பிறகு சொல்லுறன் நம்பர் இதுதானே அவர் உங்களுக்கு பின்னேரம் கால் பண்ணுவார் அக்கா ...
ஓம் பிள்ளை அவன் எங்களோட ஊரில நல்ல மாதிரி எங்களுக்கு ஒரு வழியில் அவர் மச்சான் இப்ப எப்படி இருக்குறான் உங்களை கலியாணம் கட்டி இருக்குறானா எப்ப நடந்ததது என குசல விசாரிப்புக்கள் தேனான கதையுமா நீண்டது அந்த உரையாடல் ..

வேலையில் நிக்கும் போது சுரேசின் கைபேசி பல முறை அலறி அடக்கியது வேலையின் சுமை எடுத்து பார்க்கும் அளவுக்கு அவனுக்கு நேரம் இருக்க வில்லை வேலை முடிந்து உடையை மாற்றியவன் முதல் வேலையா கைபேசியை எடுத்து தொடுதிரையில் கைகளை வைத்தான் இலங்கை நம்பர் அதிர்ச்சி அடித்தவன் அவசரமா அந்த நம்பருக்கு கால் பண்ணி யாரு என்று வினாவ முதல் தடுமாற்றம் எதிர் முனையில் ..

பின்னர் தங்களை தயார் படுத்தி மீண்டும் இணைப்பு கொடுக்க படுகுது ஹலோ ஓம் நிங்க சுரேஷ் அண்ணைதானே எப்படி சுகம் என்னை தெரியுமா நான் வினிதா  ரதியின் தங்கை நீங்கள் அடிக்கடி எங்க வீட்டு பக்கம் முன்னம் வந்து போவியள் கரணுடன் என தன்னை அறிமுக மிக நீண்டதா கொடுக்க .....குழப்பத்தில் சுரேஷ் எனக்கு தெரியவில்லை நான் அப்படி ஒரு இடத்திலும் இருக்க வில்லை நீங்க நினைக்கும் சுரேஷ் நான் இல்லை வேறு யாராவது இருக்கலாம் நம்பர் மாறி கால் பண்ணிட்டியல் போல ...

இல்லை இல்லை நிங்கள்தான் உங்களுக்கு இன்னார் தம்பி இவர் மச்சான் அவர் பெரியப்பா இன்ன இன்ன இடத்தில் இருக்கினம் இப்ப சமயத்தில் கூட உங்க உறவு முறையில் ஒருவர் மரணம் அடைத்தார் என சுரேஷ் பற்றி அனைத்தையும் புட்டு புட்டு வைத்தால் எதிர் முனை அந்த மர்ம பெண் ...

இவனுக்கு ஒரே குழப்பம் தனது பழைய நினைவுகளை ஒருமுறை கிளறி எடுத்து தான் சட் அடித்த ஓவரு பிள்ளையா மீட்டி பார்த்து ஆராய தொடங்கியவன் சொன்னான் எதுக்கும் நான் நாளைக்கு காலையில் உங்களுக்கு கால் பண்ணுறன் பிள்ளை என்று இணைப்பை துண்டிச்சவன் மனதில் ஒரு இனம் புரியா தவிப்பு ஒருவேளை அவளோ இவளோ சே அப்படி இருக்காது எப்படி எனது சொந்தம் எல்லாம் சொல்லுறாள் தெரிஞ்சவள் தான் நாளைக்கு பிடிகிறன் யார் என்று என் அவளின் குரலும் பேச்சும் இவனை கொஞ்சம் அசைத்து விட்டு இருந்தது ..

வீட்டுக்கு வந்தவன் எதுவும் பேசவில்லை கைகால்கள் கழுவி விட்டு தொலைக்காட்சியை இயங்கு நிலைக்கு கொண்டுவந்தான் தேனீர் கொண்டுவந்த ஜெசி என்ன ஆச்சு ஒரு மார்க்கமா இருக்கிறியள் அது ஒன்றும் இல்லை சும்மா தான் வேற என்ன சமையல் மதியம் என வேறு பக்கத்துக்கு ஜெசியை திருப்ப முயற்ச்சி செய்தான் ..ஆனாலும் மனதில் ஒரு நெருடல் இவளுக்கு போன கதையை சொல்லுவமா வேணாமா இங்க வளர்த்தவள் எதாவது நினைப்பாள் வேணாம் பிறகு சொல்லுவம் என்று மனதை பூட்டினான் ..

காலையில் வந்த போன் கதையை சொல்லுவம் என வாய் எடுத்த ஜெசி அவர் வேலைக்களைப்பு  மூடு வேற சரியில்லை பிறகு சொல்லுவம் அல்லது அவியல் போன் எடுப்பினம் தானே என்று எண்ணியபடி அவளும் விஷயத்தை தனக்குள் அடக்கி விட அடுத்தநாள் பொழுது விடிந்தது ..சுரேஷ் மனதில் வெளியில் போய் அவளுக்கு ஒரு கால் பண்ணுவம் என்கிற எண்ணம் மேலோங்க கீழே வருகிறான் அவளின் நம்பருக்கு இணைப்பை அழுத்தியபடி ...

ஓ..நிங்கலா நான் போனை பார்த்தபடி இருந்தேன் எங்க எடுக்க காணம் என்று நினைக்க நீங்கள் போன் பண்ணுறியள் என மயக்கும் பேச்சுடன் தொடக்கிறாள் அந்த பெண் வேலையும் வீடுமா ஓட்டமும் நடையுமா இருந்த சுரேஷ்க்கு இது ஒரு புது அனுபவம் நக்கல்; நளினம்; பகிடி ;பம்பல்; என எல்லா விஷயமும் கதைக்க ஆரம்பிக்குது இருவருக்குள்ளும் ...இங்க ஜெசி பெரிதா வெளியில் போகாதவர் எங்க போனார் இவ்வளவு நேரம் காணம் என்று கைபேசியை எடுத்து சுரேசின் நம்பருக்கு கால் பண்ண வெயிட்டின்க் கால் காட்டுது ....

சிறிது நேரத்தில் வீட்டுக்கு வந்தான் சுரேஷ் எங்க கால் பண்ணினான் எடுக்காமல் எங்க நின்டியல் என ஜெசி கேட்க அது ஒன்றும் இல்லை அதில அவன் வந்தான் இவன் வந்தான் என்று பொய் சொல்ல முயற்ச்சி செய்து அதில் வெற்றியும் கண்டான் சுரேஷ் ...ஆ சரி எங்காவது வெளியில் போவமே என்று வழமையன பேச்சை கொடுத்தால் ஜெசி ..இல்லை எனக்கு தலை வலி நான் வெளியில் வரவில்லை நீங்கள் போறது என்றால் போயிட்டு வாங்கோ என்று சொல்லிட்டு தனது அறைக்கு போனான் சுரேஷ் ..

என்னாச்சு இவருக்கு இரண்டுநாளா முகம் சரியில்லை எது கேட்டலும் பதில் இல்லை என்று யோசினையில் ஜெசி ..கீஈஈஇர்ர்ர்ர்ர்  என சுரேசின் போனுக்கு வந்து விழுகிறது ஸ்கைப் ஐடி நம்பர் செய்தி பெட்டியில் உடனம் அதை எடுத்து தனது போனில் பதிந்து வைத்து விட்டு நாளைய பொழுதுக்காய் இவன் ஏங்கியபடி ..இப்படி பலநாள் போயிட்டு போன்கதை ..கடைசியில் பணம் வரை அனுப்பியாச்சு ...அவளுக்கு .

திடீர் என ஒருநாள் நமக்கு ஒரு போன் வருது நான் வேலையா நிக்கிறன் பிறகு எடுங்கோ என்று சொல்லிட்டு உடனம் வைச்சிட்டன் பின்னர் ஒரு செய்தி வந்துது நான் ஜெசி அண்ணா முடிந்தால் கால் பண்ணுங்க என்று இவள் ஏன் இப்ப கால் பண்ணுறாள் என்ன பிரச்சினை என்று குழம்பி வேலையாள் வெளியில் வந்தவுடன் கால் பண்ணினேன்....

ஓம் அண்ணா என்னடி என்னாச்சு என்ன விஷயம் என்று கேட்க சிலநாள் சுரேஷ் நல்ல இல்லை என்னுடன் எதுக்கு எடுத்தாலும் பாய்ந்து விழுகிறார் திடீர் என்று மாறிட்டார் ஏன் என்று எனக்கு விளங்க வில்லை ஒருநாள் ஒரு கால் வந்தது ஊரில இருந்து நான் அதை அவருக்கு சொல்ல மற்றந்திட்டன் அவியல் சிலவேளை இவருக்கு கால் பண்ணி எதாவது சொல்லிச்சினமோ தெரியாது ஆனால் அவ பிறகு வீட்டுக்கு கால் பண்ணவில்லை அதால் நான் அப்படியே விட்டுடேன் நீங்க ஒருக்கா கால் பண்ணி கேளுங்க என்ன என்று என சொல்லிவிட்டு கண்ணீருடன் வைத்தால் போனை ...

சரி என்று நானும் கால் பண்ணி விசாரிச்சான் அவன் என்னுடைய நல்ல நண்பன் என்பதால் எல்லாம் கதைப்பம் சுரேஷ் என்ன மச்சி எங்கையாவது மாட்டிட்டா நமக்கு ஒரு கால் பண்ணுறாய் இல்லை என்று வழமையான பேச்சுடன் தொடங்க அவனும் எப்படி மச்சி உனக்கு தெரியும் என்று எதிர்பாராமல் பதிலை சொல்ல நானும் அப்படியே தெரிஞ்சவன் போல என்னவாம் பார்ட்டி என்று மேல தொடர ஆதி முதல் அந்தம் வரை சொல்லி வைத்தார் நம்ம நட்பு ....

எதுவும் சொல்லாமல் நான் ஓகே மச்சி நாளை நேர்ல உன்னை சந்திக்க வேணும் நான் வேலை முடிய ஏரியாக்கு வா என்று சொல்லிட்டு போனை வைத்தேன் வைத்த கையுடன் ஜெசிக்கு போனை போட்டு சொன்னேன் அன்று வந்த போனை பற்றி சுரேசுக்கு நீ வரவிட்டு சொல்லு என்று ஆனால் அவன் எதாவது கதைத்தால் மவுனமா இரு வார்த்தைகளை விட்டு சண்டையில் இறங்க வேணாம் அம்மாடி என்று சொல்லிட்டு அடுத்த நாள் சுரேசை சந்திக்கிறேன் நான் ....

எப்படி மச்சான் டீஐ சொல்லு என்று சொல்லியபடி இருவரும் பேசிட்டு இருந்தம் அப்ப அவன் சொன்னான் மச்சி நேற்று கதைத்த விஷயம் ஜெசிக்கு தெரியும் போல முதலே அவள் வீட்டுக்கும் கால் பண்ணி இருக்கிறாள் இப்ப என்ன பண்ணுறது என்று எனக்கு விளங்க வில்லை எல்லாம் பெரிய சிக்கலில் போய் முடிய போகுது என்று ஒரு கலவரமா கதையை சொன்னான் நான் மனதில் சிரிச்சபடி ஆ ..அப்படியா உனக்கு காட்டு போட்டு கதைக்கும் போது எங்க போனது அறிவு காசு வேற அனுப்பி இருக்கிற .ஸ்கைப்பில கதைச்சு வேற இருக்கிற அவள் யார் என்று கூட தெரியாமல் ..

இல்லை மச்சி அவள் எங்களின் ஆக்கள் எல்லோரையும் தெரியும் என்று சொன்னால் நான் எதோ துரத்து உறவா இருக்கும் என்று நினைச்சன் இப்ப என்ன பண்ணுறது அவள் வேற கண்ட நேரம் எல்லாம் sms  பண்ணுறாள் மச்சி இவள் கடுப்பாக முதல் ஏதாவது பண்ணு என்ன சொல்லி சமளிக்க போறனோ ஆண்டவா என்றான்.

(இவ்வளவுக்கும் ஒரு வலுவான கரணம் ஒன்றும் இல்லை பாருங்கோ .
அதாவது நீங்கள் இணையங்களுக்கு கொடுக்கும் மரண அறிவித்தல்கள் மட்டுமே அதில் யாரு யாருக்கு மச்சான் மாமன் எங்க எங்க இருக்கினம் என சகல தகவலும் ஒரு குறுப்பு நாட்டில் இருந்து எடுத்து அதிலும் குறிப்பா தனியா பெடியளின் பெயர்கள் இருந்தா அந்த நம்பர் சேமிக்கபட்டு அவர்களை இலக்கு வைத்து மிஸ் கால் கொடுக்க படுகிறது ஆர்வ கோளாரில் மீண்டும் அந்த நம்பருக்கு கால் பண்ணி இவர்கள் விபரம் கேட்கும் போது அங்கிருந்து பெண்பிள்ளை ஒன்று இவர்கள் மனதை சலன படும் அளவு கதைத்து ஓரளவு பலவீனம் அறிந்து பின்னர் அது மிரட்டலுக்கு வழிவகுத்து கொடுக்குது ...

நீ ஸ்கைப்பில் பேசியது எல்லாம் எங்களிடம் இருக்கு காசு அனுப்பு அல்லது இணையத்தில் போடுவம் என்பதாக தொடருது அவர்களின் நடவடிக்கை ..)

சரி மச்சி இது எல்லாம் ஒரு பிரச்சினை இல்லை சிம்மை கழட்டு வேற சிம்மை போடு வீடு போன் நம்பரை மாற்று பிரச்சினை முடியுது எதுக்கு பயம் உனக்கு ஜெசி அப்படி முட்டாள் கிடையாது நீ நோமலா இரு வழமையா எப்படி உங்க பொழுது போகுமோ அப்படி மாறு இதை கனவா மறந்து போ என்று கூறி நடந்தேன் நான் ..

இவங்க எந்த ஏவா குறுப்போ பரம்பொருளே ..!

ஆகவே மரண அறிவித்தல்கள் கொடுக்கும் போது நிங்கள் நிரந்தரமா பாவிக்கும் தொலைபேசி இலக்கங்களை தவிர்ப்பது நன்று ..!
  

பிரியம்.!

வாடிய பூ மீது ..விழுந்த இலையின் மீது .
தேடிய காதல் மீது ..பாடிய பாடல் மீது ..
கூடிய உறவுகள் மீது ..நாடிய சொந்தங்கள் மீது ..
மறையும் சூரியன் மீது ..கரையும் சந்திரன் மீது ..
துளிர் விடும் விதை மீது ..தூவும் மலர் மீது ..
அதிகாலை கனவு மீது ...கம்பனின் கவி மீது ..
முகம் மறைக்கும் கன்னி மீது ..முடியாத கடல் மீது ..
வராத பணம் மீது ..வாங்கிய முத்தம் மீது ..
பாட்டியின் கதை மீது ...பாட்டனின் கைதடி மீது ..
மழலை அழுகை மீது ..மடிந்தவர் புன்னகை மீது ..
அதீத ஆசைகள் மீது ...ஆர்ருயிர் நண்பி மீது ..
என்னுள் தொலைத்தவள் மீது ..எழுதா கவி மீது ..
கண்ணாடி பொட்டின் மீது ..மருதாணி கைகள் மீது ..
தேய்த்து போன செருப்பின் மீது ..சுவர் படங்கள் மீது ..
காய்த்த கருவாட்டின் மீது ..கடைசி வார்த்தை மீது ..
கோலம் போடும் கால்கள் மீது ...வெட்டி போட்ட நகங்கள் மீது ..
குட்டி சுவர் மீது ..குதித்து விழும் வயல் கிணறு மீது ..
எண்ணில் அடங்கா பிரியம் எனக்கு ..

என்  எண்ணம் எல்லாம் பிரியத்தின் மீது .

பொங்கியநாள் .!

நல்லெண்ணெய் வழிய வைத்து ..ஊரில்
நல்லதண்ணி கிணறு தேடி போய்..வயலில்
அள்ளி முழுக்காட்டி விட்டா என் ..அக்காள்
அறுகம் புல்லு பிடுங்க போகையில்...தரைவைக்கு
மணியத்தின் லாரி வரும் கொழும்பில் ...இருந்து
மாமாக்கள் வாங்கி அனுப்பிய சீனவெடி ..கொண்டு

சிங்காரமா புது சட்டை போட்டு ..தலைசீவி
பொங்கல் பொங்கும் அம்மாக்கு ...உதவி
கட்டித்தரும் பொங்கல் கொண்டு மாமி ..வீடு
போகும்போது மனதில் வரும் வெட்கம் ..மச்சாள்
இங்கேரு மாப்பிள்ளை வாறாரு என்று சொல்லும் ..மாமா

வீட்டுக்கு வந்த உறவுகள் எல்லாம் ..கூடி
முற்றத்தில் தொடங்குவர் விளையாட்டு ..கிளி
சின்னவர் எங்களை தங்கள் காலுக்குள் ..வைத்து
தள்ளி விடுகையில் விழும் அடி முதுகில் ...உறைக்க
நினைவுகள் மட்டும் இப்பொழுதும் ...மனதில்


மீண்டும் அதே சந்தோஷம் மீளவேணும் ...நாட்டில்
என் வீட்டு முற்றத்து கோலத்தில் பார்க்கவேணும் ..எறும்பு
மறுபடியும் அவைகள் உணர்த்தவேனும் ஒற்றுமை ...பலம்
உழைப்பின் உயர்வும் சேமிப்பின் தேவையும் ..எமக்கு
அதுவரை சூரியனை பாராமல் நான் மாடிகளுக்கு ..நடுவில் .

pongal009.jpg

விண்ணப்பம் ..!

மாசி வந்தால் மனசில் ஒரு படபடப்பு ..
மயங்காத மங்கை மனதை உடைக்க முன் ..
மறுபடியும் போட்டுருவம் ஒரு விண்ணப்பம் ...
கண்ணே என்று தொடங்கவா ;இல்லை பெண்ணே ...
என்று பழைய பல்லவி பாடவா ,என் செல்லமே ..

எல்லோரும் தாமரைக்கு ..ரோஜாக்கு ஆசைப்பட ...
நான் மட்டும் செந்தாமரைக்கு ஆசைப்பட்டது தப்பா ..
சேறு உன்னை சுற்றித்தானே இருக்கு உன்னில் இல்லையே ..
உன்னை பறிக்குவரை என்னிலும் ஒட்டி பிடிக்கும் ..
உன்னை கைப்பற்றி விட்டால் நான் கழுவி விடுவேன் ..

உள்ளம் அது என்னது மெய்யடி நீ எந்தன் கவியடி ..
காதலர் தினம் வேஷம் உன் அப்பன் மனது விஷம் ..
என் அப்பத்தா பார்ப்பா தோஷம் நானோ உன் பாசம் ..
என்னை கைகழுவி போகாதே மழை மேகமே ...நான்
நெருப்பை உண்ணும் கோழியே உனக்கு கட்டுவேன் தாலியே ..

ஜாதி வேலி கடந்து பூ பறிப்பேன் உன்னை என் ..
மன கோயிலில் மகாராணி ஆக்கி மல்லிகை சூட்டி ..
காலையில் நீ முற்றத்தில் கோலம் போடும் காலம் ..
வரும்வரை எமக்கு காதலர் தினம் வேணாம் என்னவளே ..
கவிதையும் ;கடைக்கண் பார்வையும் போதும் வாழ்த்திடலாம் .

532776_2795656590395_361176095_n.jpg

யார் இடுவர் குங்குமம் ..!

உவகை கொ(ல்)ள் மனம்
உன்னை நினைத்து ..
உயிரில் கலந்து நீரில்
கலந்த உப்புபோல் ..
என்னுள் என்றும் உறைத்து
இருக்கும் பனி நீ ..
என் வெப்பம் தாங்காமல் ..
விலக கூடாது பெண்ணே ..

யான் நேசிப்பது உன்
இதய அறையில் ஒரு இடம் ..
கிடைக்குமா என் கல்லறை
கட்ட அங்கு என்றே ..
இறுதிவரை உன்
மூச்சுப்பட்டவது சிலவேளை நான் ..
உயிர்தெழகூடும் உறங்கிய
ஒரு சிறு விதையாய் ..

நீ சிந்தும் கண்ணீரில்
இருந்து நான் மெதுவா வளர ...
உன்னுடன் வாழ்த்த
காலத்தை நிழலா உனக்கு தர ...
இருவரும் அடிக்கடி சந்தித்த
குளத்தடி ஆலமரம் போல் ..
நான் மட்டும் போரில்
மரணிக்காமல் இருந்திருந்தால் ..

காதல் வாழ்த்து
இருக்கும் மங்கலமா ..
நீனு ஏன் இப்பொழுது
வாழவேண்டும் அமங்கலமா ..
நல்லவர்கள் நாலுபேர்
வாழ்த்தா போதும் ..
நீயும் வாழலாம் இவ் உலகில்.
p1031351.jpg

எங்க அண்ணன் வரவேணும் .!

சாம்பல் மேட்டில் போட்ட ..
பூசணி விதை முளைத்து ...
கொடிவிட்டு அடர்த்து பரந்து..
நாலு திக்கும் அகல விரிந்து ..
தனக்கென ஒரு ராஜ்ஜியம் இட்டு ..
பச்சை பசேலென கண்குளிர இருந்த்தது ..
அதில் பூத்த பூக்களில் காய்யாகி வந்த ..
ஒரு பிஞ்ச்சு மண்ணுக்கு தன்னை கொடுக்க ..
மிகுதி இரண்டு எவனோ களவாடி போக ..
தேடிய தோட்டக்காரி கிடைக்காது ஏங்க..
கூட இருந்த இளம் பிஞ்ச்சும் சேர்த்து போக ..
பார்த்து இருந்த திருடர் தாம் பிடிபடுவம் ....
என்னும் பயத்தில் சூழ்ச்சி செய்தனர் ...
காணியும் தோட்டமும் உன்னது இல்லை ..
அதில் பூசணி கொடியே இருக்க வில்லை ..
என்று புரளி கிளப்பி பொய்யர் ஆக்கி ..
கொடியை மண்ணுடன் பிஞ்ச்சுடன் சேர்த்து ..
பிடிங்கி ஒளித்து வைக்கிறார்கள் அவர்கள் ..
அவர்களுக்கு தெரியாது முழு பூசணி ...
எங்கு வைத்தாலும் மறைக்க முடியாது என்று ..
ஒருநாள் நல்ல சேவகன் வருவான் ..
மீண்டும் சாம்பல் மேடு துளிர்க்கும் ...
மீண்டும் பூக்கும் .காய்க்கும் கொத்து கொத்தா ..
நம்பிக்கை எமக்கு இருக்கு கள்வரே ..
அன்று நீங்கள் அதே பூசணி விதைக்கு ..
உரமாக இருப்பிர்கள் சாம்பலாய் .

மச்சி நீ கேளு..!

மச்சி நீ கேளு கதையை ...
நேற்று இதால போனவா ..
இன்னைக்கு என்னை கடக்கையில் ..
சைக்கிள் வேல் அடித்து போறா..
நான் பார்க்கவில்லை அவாவை ..
நினைப்படி உனக்கு என நண்பிக்கு சொன்னா ..
சிங்கிசா பாவடை ...லுமாலா சைக்கிள் ...
முன்னுக்கு சின்ன கறுத்தக்கூடை ....
பச்சை தொப்பி போட்டு நெற்றியில் ...
கோபுரம் போல ஒட்டு பொட்டு ..
ஒற்றை பின்னல் கட்டி அழகான சிலேட்டு ...
செம அழகடா திரும்பி பார்க்கும்போது ...
எங்க படிக்கிறாள் என்ன செய்கிறாள் ...
யாருடைய மகள் ..யாருடைய பேத்தி ...
அண்ணன் தம்பி இருப்பாங்களா ..
ஒருவளை அவங்கள் எனக்கு பழக்கமா ..
நேற்றுவரை இருந்த புத்தன் மனம் ...
எப்படி மாறியது இன்று கண்ணனா ..
நாளைக்கு வா மச்சி ஒரு ரவுண்டு போவம் ..
ஆளின் வீடு பார்ப்பம் எந்த தெருவென ..
பொறு பொறு வைக்காத போனை ..
மச்சி இதை கேளு மச்சி ..
சொல்லாமல் வைச்சுட்டா போனை ..
நீ எல்லாம் ஒரு  நண்பன் போடா ..
 

vadi.jpg