வியாழன், 30 அக்டோபர், 2014

என் கவலை ..!

கையில் நெருப்பிருக்கு என்னிடம் ..
பற்றவைக்க தான் திரி இல்லை ..

ஆடைக்கடை முன் நின்று பார்த்தால் ..
ஆடை யாரு கொடுப்பார் இலவசம் ..

ஆயிரம் கேள்வி எழும் மனதில் ..
ஏதாவது ஒரு கேள்விக்கு பதில் வேணும் ..

என்னை துறந்து பார்க்க விரும்பி ..
அதுக்கான படிப்பை ஏன் நான் படிக்கவில்லை ..

வீழ்த்தவர் எல்லோரும் அரக்கராம் பூவியில் ..
அதுவும் தமிழாரம் வரலாற்றில் எப்ப மாறும் ..

ஆரியன் கொன்றது தமிழனை என்றால் ..
முருகன் வதைத்தது யாரை என்னும் கேள்வி ..

தமிழ் மொழியா அல்லது தனி இனமா ..
யாரு பிரித்தார் ஏற்ற தாழ்வை ..

ஆண்டாண்டு காலம் கடைபிடித்த எல்லாம் ..
நவீன யுகத்தில் மட்டும் எப்படி பிழையானது ..

என் பாட்டன் சிந்திக்கவே இல்லையா ..
எனக்கு மட்டும் எப்படி வந்தது சிந்தனை திறன் ..

கோயிலை வீட்டை கட்டிய அரசுகள் ....
ஏன்  இனத்தை மொழியை கட்டமைக்கவில்லை ..

மூணுநாள் முதல் வீட்டில் ஆடு வேண்டி கட்டினால் ...
சிறு பராயத்தில் எனக்கு தெரியும் தீபாவளி நெருங்குது என்று ..

சுற்றம் எல்லாம் பங்கு கொடுத்து கூடி இருந்த காலம் எங்கே ..
இப்ப மட்டும் பங்குகளா பிரிந்து போனோம் எதுக்காக இங்கே ..

விரதம் பிடித்தால் ஊரில் பெருமை இருக்கு ..
வெளிநாட்டில் மட்டும் ஏன் முடியாமல் போனது ..

கலாச்சார வளர்ச்சி என்று எம்மை நாமே அழித்தோம் ...
இதை நாமே மொழி இன வளர்ச்சி என்றோம் கூசாமல் ..

தேசியமும் தேசமும் சினிமாவை எதிர்ப்பதில் நிக்கு ..
இன்னும் சில காலம் நாம் எங்க நிப்பமோ பராபரமே ..

அழித்து விடு என்று வேல் கொடுக்க தாய் இருக்கா ..
ஆனால் வேல் வாங்க தான் மகன் இல்லை .

கவிதை வருகிறது ...!

மழையை என்றால் குடையும் கூடவே ..
வானம் என்றால் முகிலும் கூடவே ...

மரம் என்றால் காற்றும் கூடவே ..
நிலா என்றால் நட்சத்திரம் கூடவே ..

ஒன்றை விட்டு இன்னொன்று தேடலில் ..
என்னை விட்டு உன்னை தேடலில் ..

உன் கண் கண்டபின் காதல் தேடலில் ..
இருவரும் சேர்கையில் காமம் தேடலில் ..

எல்லோரும் போல் உன்னை ரசிக்க ..
எல்லோரும் போல் உனக்கு பொய் சொல்ல ..

எல்லோரும் போல் உன்னை வர்ணிக்க ...
எல்லோரும் போல் நான் புலவன் இல்லை ..

என்னுள் மறைந்து இருந்து பார்க்கும் ..
என்னுள் என்னை தேடும் காதல் ..

உன்னில் மட்டும் வராமால் போகுமோ ..
எம்மை நாம் ஆக்கும் காலம் வரும் ..

அதுவரை நம் காதல் கவிதையில் ..
வாழட்டும் ரசனையில் இருக்கட்டும் ..

எம் குடில் நாம் அமைக்கும் வரை ..
என் இதய குடிலில் நீ உறங்கு ..
காதலே .

ஞாயிறு, 5 அக்டோபர், 2014

மீளா நட்புலகு வன்னி ..!

வன்னி மண்ணும் நட்புக்களும் என்பது எழுத்துக்களில் சொல்லவோ கண்முன் கொண்டுவரவோ முடியாத ஒரு அடன்பன்கொடி உறவுனலாம் ..
 
வழமையா வேலை வெட்டி இல்லாமல் சுற்றி திரியும் எமக்கு சாயங்காலம் ஆகிட்டாசைக்கிளை தூக்கிட்டு போறது  சந்தைக்கு பக்கமா ஒரு வீதி இருக்கு அதில் எல்லோரும் கூடி நிப்பது வழமை பம்மல் ...பகிடி ..சேட்டைகள் என்று போகும் அந்த இனிய சாயங்கால பொழுது ..
 
சந்தையில் வேலை முடிந்து நிக்கும் பெடியளும் அதில வந்துநின்று ஒரு குட்டி மகாநாடு நடக்கும் ஒரு ஓரமா போகும் போது கடைக்கண் பார்வை பார்த்து போகும் பெண்பிள்ளைகளும் என்ன இன்னும் நம்மாளை காணவில்லை என்று உள்மனதில் ஏங்கும் தோழனும் தூரத்தில் ஆளைக்கண்டால் கண்களால் ஆள் வருது என்று சொல்லும் பாலாய நட்பும் என்று அந்த பொழுதுகள் இனிமையானவை ..(காவல்துறை வந்தா ஆளுக்கு ஒரு பக்கம் போறது வேறுகதை ;) )
 
அப்படி ஒருநாள் நிக்கும்போது வழமையா அங்கு இறைச்சி கடையில்  வேலைசெய்யும் ஐயாவும் எங்களுடன் வந்து நின்று கதைப்பார் அப்படி ஒருநாள் கதைத்துக்கொண்டு நிக்கும்போது அவரின் உயர்தரம் படிக்கும் மூத்த மகள் அந்த வீதியால் வந்தால் வழமையா அந்த பிள்ளை வேறு வீதியால் போறது அப்பா நிப்பார் என்று அன்று வேறு ஒரு பிள்ளையுடன் வந்தார் ...
 
தூரத்தில் கண்ட தோழர்களுக்கு அவர் மகள் என்று தெரியாது எட்ட வரும்போதே எங்கடா இருக்கிறாள் இவள் ஒருநாளும் காணவில்லை நல்ல அழகான பிள்ளை என்று நக்கலை போட அவள் ஒருபார்வை பார்த்திட்டு போனால் பகிடி என்னென்றால் பக்கத்தில் நின்ற ஐயா தன் தாடையை பெருமையா தடவியபடி சொன்னார் பாருங்க ''அப்பன் அழகா இருந்தா மகளும் அழகாத்தான் இருப்பால் பெடியள்'' என்று ..
 
 
அவள் பார்த்தது அப்பருக்கு பெடியளோட என்ன அலுவல் என்றுதான்.... ஐயா அப்படி சொன்னதும் ஒருவர் முகத்திலும் ஈஆடவிலை என்ன செய்வது என்று ஒரு வியப்பு ..திகைப்பு வந்திட்டு ஆனால் அவர் சொன்னார் பெடியள் என்றால் அப்படித்தான் இதில் என்ன இருக்கு அப்படி பார்த்தா நான் உங்களுடன் நின்றதுதான் பிழை என்று சொல்லி எம்மை எல்லாம் ஒரு சகய நிலைக்கு கொண்டுவந்தார் ...
 
பிறகு ஒருநாள் தீபாவளி என்று அனைவரையும் வீட்டுக்கு அழைத்து எல்லோருக்கும் சாப்பாடு போட்டு தன் குடும்பத்தில் ஒருவராக எம்மை எல்லாம் ஆக்கி விடார் அன்றில் இருந்தது நாம் அவளின் அண்ணன் ஆகிபோனோம் அவள் எமக்கு தங்கையாகி போனால் எங்கு கண்டாலும் போனாலும் டேய் அண்ணன்களா வீட்டுக்கு போங்கடா என்று எம்மை சண்டைக்கு இழுப்பவளா இருந்தால் ...
 
 
வன்னியின் பெருமையும் ..உறவும் ..நட்பும் சாதி மதங்களை கடந்தது மனிதமா இருப்பதுக்கு எல்லோரும் எல்லோரையும் அரவணைத்து கூடி வாழ்த்ததே காரணம் எனலாம் ..
 
vanni-600x377.jpg

உங்களிட்ட சொல்லாமல் விடுறதே ..!

நேற்று ஒரு சம்பவம் வேலை இடத்தில் நடந்தது எல்லோரும் சாப்பிட அமர்த்து இருக்கும்போது கண்டவர் ..காணாதவர் என்று வர அனைவருக்கும் மாறி மாறி வணக்கம் சொல்லிட்டு உணவை சூடாக்கி சாப்பிட தொடங்கும் நேரம் பார்த்து பக்கத்தில் இருந்த ஆளின் தொலைபேசி ..பார்த்த முதல்நாளா என்னும் பாடலுடன் ஒலியை எழுப்ப அனைவரும் சத்தம் வந்த திசையை நோக்கி பார்க்க சட்டென போனை எடுத்து  ஐந்து நிமிடம் கழித்து எடுக்கிறேன் வையும் என்று பதில் சொல்லி இணைப்பை துண்டித்தார் அவர் ...


அந்த போன் வந்த நேரம் தொட்டு அருகில் இருந்தவருக்கு முகம் மாறிட்டு சாப்பிடாமல் அவரை பார்ப்பதும் பின் சாப்பாட்டை பிசைவதுமா இருந்தார் அவரின் செயலை பார்க்கும்போது ஆள் செம கடுப்பா இருக்கு என்று மட்டும் விளங்குது ..சரி என்னதான் பிரச்சினை என்று கேட்டார் அந்த போனை எடுத்து பேசியவர் உடனம் கடுகடுத்த தொனியில் நீ என்று தொடங்கினார் நீ செய்வது ஒன்றும் நல்லா தெரியவில்லை யாரு இப்ப போன் அடித்தவள் ..எப்படி பழக்கம் ..இது என்ன புது பழக்கம் ..நீ கலியாணம் கட்டின ஆள் என்று அவளுக்கு தெரியாதா என்று சராமாரியா கேள்விகள் அவரை நோக்கி எழுப்ப போன் எடுத்தவர் சொன்னார் இங்க நோமல் நீங்க என் டென்ஷன் ஆகுரியல் வேலை பாருங்க அது என்னுடைய பிரச்சினை என்று ஒரு நக்கலா பதில் சொன்னார் ....

இவருக்கு கடும் கோவம் வந்திட்டு உடனம் எழும்பி போனவர் கொஞ்ச நேரம் செல்ல வந்து உண்ட போனை தா என்று வாங்கினார் அவரும் கொடுத்துட்டு இருந்தார் ..பிறகு பார்த்தா அவரின் வந்த போன் நம்பரை எடுத்து இவர் அழைப்பை ஏற்படுத்தினார்

எதிர் முனையில் ...

ஹலோ

இவர் ...வணக்கம் நீங்க யாரு 

போன் எடுத்தது நீங்க நீங்க சொல்லுங்க யாரு என்று ..

இவர் ..நீர் ஏன் மற்றவர் குடி கெடுக்க நிக்கிறீர் அந்த பிள்ளை பாவம் இவன் கலியாணம் கட்டி பிள்ளை வேற இருக்கு உனக்கு என்ன கதை வேண்டி இருக்கு அவன் கூட ..

ஹலோ ..மரியாதை யாரு யாரோட கதைத்தது இப்ப உங்களுக்கு என்னதான் பிரச்சினை ..

இஞ்ச பாரு பிள்ளை அது எல்லாம் அதர்மம் கடவுளுக்கு ஏற்காது இப்படி செய்யுறது தப்பு அதுக்கு எல்லாம் பேஸ்புக் தான் காரணம் என்று நினைக்கிறன் ...

அண்ணனே நீங்க யாரு ..யாரோட கதைக்கணும் உங்களுக்கு என்னதான் பிரச்சினை ..

அவனை நீ விட்டுடு அவன் குடும்பம் இருக்கு பிள்ளைகள் எல்லாம் சின்ன சின்ன ஆக்கள் உனக்கு தேவை என்றால் ..........................எங்காவது போறது .................நீ எந்த ஊர் ..யாற்ற மகள் ..என்று செமையா சண்டை போகுது ...

ஹலோ.. அப்படி எல்லாம் விடமுடியாது நான் அவரு கூடத்தான் வாழுவன் நீங்க என்ன பண்ண முடியுமோ பண்ணுங்க இங்க போன் எடுத்து வெருட்டுற வேலை எல்லாம் வேணாம் வையுங்க போனை என்று அதட்டலா கதைத்துபோட்டு போனை வைத்தார் அந்த பெண் ...

இந்தாள் அங்க போகுது இங்க போகுது சீ ..சீ .என்ன மனுஷர் இப்படி எல்லாம் வாழுறதே இதுக்கு தூங்கி சாகலாம் அல்லது ஓடுற மெற்றோ வழிய விழுந்து தொலைக்கலாம் ..

சரி என்னதான் பிரச்சினை என்று கேட்பம் என்று தனியா ஆளை அழைத்து ஏன் அண்ணே இவ்வளவு கோவம் என்னாச்சு ..

நீ இப்படி செய்யுறது எனக்கு பிடிக்கவில்லை நான் உன்னை அப்படி ஒரு நல்ல பிள்ளை என்று நினைக்க நீ ஏன் இப்படி குடும்பத்துக்கு ஏற்காத வேலை செய்யுற ..

இது என்ன இழவு நான் எங்க பிழை செய்தேன் ஆண்டவா என்னாச்சு உங்களுக்கு ..

இப்ப சாப்பிடும் பொது உனக்கு போன் அடிச்சது யாரு ..

மனுஷி ஏன் ..

இல்லை அவள் இல்லை உண்மையை சொல்லு ...

இது என்ன கொடுமை மனுஷிதான் வேணும் என்றால் வந்த நம்பருக்கு திருப்பி அடியுங்கோ இந்தாங்கோ என்று போனைக் கொடுக்க அந்த நம்பருக்கு இணைப்பு போனது ..மனுஷன் போன் பண்ணுறார் என்று நினைத்து ஓம் சொல்லுங்க என்று தொடங்கினால் அவள் இல்லை பிள்ளை நான் நவம் அண்ணை சும்மா எடுத்தனான் கனநாள் காணவில்லை அதுதான் சுகம் கேட்பம் என்று ..எப்படி இருக்கிற பிள்ளைகள் எல்லாம் சுகமே என்று கேள்விகேட்டு மழுப்பிட்டு தந்தார் நானும் ஓகே என்று சிரிச்சுட்டு போனை வாங்கி வைத்தேன் ...

இப்படியே பின்னுக்கு போனா குழப்பம் இங்கதான் தொடங்குது என் போன்  அழைத்த பொழுது என் மனைவியின் நம்பரை நான் லவ்வர் என்று அதில் குறிப்பிட்டு வைத்துள்ளேன் நாம் காதல் கலியாணம் என்பதால் என்னமோ அந்த பெயரில் இப்ப ஒரு நாலு வருடம் மேலாக இருக்கு அழைப்பு வரும்போது அந்த பெயர் திரையில் தெரிய எனக்கு பக்கத்தில இருந்தவர் எங்க குடும்ப நண்பர் நவம் அண்ணை அதை கவனித்து விட்டார் இவனுக்கு யாரு லவ்வர் ....எடுத்த போனை ஏன் கதைக்காமல் கட் பண்ணி பிறகு எடுக்கிறன் என்று வைத்தான் ..நான் பக்கத்தில இருப்பதாலோ என்று அவர் பலமாதிரி யோச்சிச்சு குழப்பி போனார் ..

அதனால் என் போனை வாங்கி வந்த நம்பர் எடுத்து தன் போனில் இருந்து அழைத்தார் இவர் என் மனுஷிக்கு தான் போனை போடுறார் என்று எனக்கு லையிட்டா விளங்க நான் வீட்டு போனுக்கு அடித்து ஆளை குழப்படி என்று நம்மளுக்கு சொல்ல அவளும் எகிறி கதைக்க இவர் நல்லா குழம்பி போனார் ..

சரி பாவம் மனுஷன் குழம்புது என்று நான் உண்மையை சொன்னேன் இப்ப அவர் எப்படி வீட்டுக்கு வாறது அந்த பிள்ளையை கண்டபடி பேசிப்போட்டன் சே ..முகத்தில் முழிக்க முடியாமல் பண்ணிட்ட நீ உன்ர விளையாட்டுக்கு நானே கிடைச்சேன் என்று பேசிட்டு போறார் ..

ஆகா நல்லது கெட்டது தெரியாமல் களத்தில் இறங்கினது அவரின் பிழை பாருங்கோ ...அவரின் நல்ல மனசை எண்ணி நான் பெருமைப்படுறன் எங்காவது கதைச்சுட்டு போறான் என்று இருக்காமல் நேரடியா கேட்டார் அதுதான் எனக்கு ரொம்ப பிடிச்சு போன விஷயம் ...

அவர் மேல் இருந்த மதிப்பும் ..நட்பும் இன்னும் இருமடங்கா கூடியது எனக்கு .

பலம் ..!

அமர்த்து இருக்கிறார் நடுவில்.. 
ஆலாவட்டங்கள் ..சாமரங்கள் ..
கன்னியர்கள் கூட்டமாக விசியபடி ..
நீதியை காக்கும் சபையாம் அது ..
அன்றில் இருந்து இன்றுவரை உலகில் ..
ஓலம் இட்டார் எல்லாம் ஒடுவரும் இடம் ..
ஒப்பனைகள் கலையாமல் பார்த்தபடி ..
தளங்கள் பல போட்டு தலையாட்டி பொம்மைகள் ...
இன்னும் ஒரே பாட்டுக்கு ஆடுகிறது ..
இசையும் மாற்றம் இல்லை அவர்கள் ..
இயல்பும் மாறவில்லை குணங்கள் எப்படியோ ..
கூடியிருத்து பேசுகிற நேரம் மட்டும் ..
அவர்களுக்கு உலகம் வெளிப்பா தெரியும் ..
அப்பொழுது கூட ஒருபகுதி ஒளிப்பாக ..
அங்குதான் கனியம் இருக்கும் வளம் இருக்கும் ..
தங்களுக்குள் கைகுலுக்கி பங்கு பிரிப்பர் ..
வெளியில் வந்து போட்டோக்கு போஸ் கொடுத்து ..
பொங்கி எழுந்து உரையாற்றி கண்ணில் ..
சினம் காட்டி மீறல் என்பர் குற்றம் என்பர் ..
துரித செயல் என்பர் நடவடிக்கை வேகம் என்பர் ..
பாவம் ஏழைகள் எல்லாவற்றுக்கும் ஏமாந்து ..
பெருசா வருது பெரியவர்கள் பேசுவர் ..
நம்பிக்கை இருக்கு என்போர் நாவை அடக்குவர் ..
சுண்ணாம்பும் இல்லா இடத்தில் ...
சுகந்திரம் எதுக்கு என்று சபை முடிவு எடுக்கும் ..
நடுவில் அமர்த்து இருக்கும் அவருக்கு ..
இப்பொழுது மேலே மின்விசிறியும் ..
பக்கத்தில் ஏசியும் வேலைசெய்யும் ..
காட்சிகள் மாறி இருக்கும் ஆனால் அவர்கள் ..
உலக பார்வை மாறாது அப்படியே இருக்கும் ..
டாவின்ஸி கோட்ப்பாடு எங்களுக்கு .
படிக்கலாம் செயல்தான் கடினம் ..
சிறுபான்மை இனத்துக்கு .

சங்கம் ..!

சங்கம் வளர்த்து தமிழ் வளர்த்த குடி ...
சங்கள் தொடங்கி வயிறு வளர்க்கிறது ..
மாதம் மாதம் கூடுகிறார் சேர்கிறார் ..
டீயும் ..வடையும் ..ரோலும் கட்டியபடி ..

ஒரு குடும்பம் அதில் நாலுபேர் நாங்களே ..
எல்லாம்  மாமன் மச்சான் சித்தப்பன் ..
நீ இன்று தலைவர் நான் நாளைய தலைவர் ..
எங்களுக்குள் எடுக்கும் தீர்மானம் இது ..

கணக்கும் இல்லை வழக்கும் இல்லை ..
கேள்விகேட்க பத்து ரூபா கொடுக்கணும் ..
பதில் சொல்ல செக் கொடுக்கணும் போல ..
சிட்டைகள் வந்து விழுகுது சிரமதான வேலையாம் ..
சீரழிந்து கிடக்கும் உறவு பாணுக்கு காசில்லாமல் ஊரில் ..

சீட்டு காசும் வட்டிகாசும் வெள்ளையா ஆகுது சங்கத்தில் ..
சின்னவீடு எல்லாம் பெரியவீடு ஆகுது லோனில் ..
சின்னக்கடை சூப்பர் மார்கெட் ஆனது ஊரான் காசில் ..
இதை கேட்கவும் காசுகட்டனும் சங்கத்தில் ..
என்னடா இது ஊருக்கு வந்த சோதனை ...

தெனிந்திய நடிகை வந்து ஆடினால் மேடையில் ...
கூடவே பாட்டுக்காரன் வேறையாம் செலவு யாரு ..
அதுவும் சங்கம்தான் அங்க சங்கரர் பிள்ளை பாலுக்கு அழுகுது ..
லட்சம் கொடுத்து நடிகை கூப்பிட்டோம் ...
சூப்பரான சிங்கர்களை அழைத்தோம் உங்களுக்கா ..

இல்லை அதிலும் இருக்கு உள் கூத்து ..
வாறதோ இரண்டு பேர் அவர்களுடன் வாறதோ ..
இருபது பேர் பின்னியில் வியாபாரம் கோடியில் ..
இதுக்கு சங்கம் ஒரு கை பிடியில் ..
நடிகனை கூப்பிடும் செலவில் ஊரில ..
நாகம்மைக்கு ஒரு கொட்டில் போட்டு கொடுக்கலாம் ..

திட்டம் எல்லாம் சேது சமுத்திரம் போல ..
அங்கிருத்து வெட்டினா எனக்கு இலாபம் ..
இங்கிருத்து வெட்டினா உனக்கு நட்டம் ..
எங்கிருத்து வெட்டுவே என்று பேசியபடி ..
இருக்கு எங்கிருந்தோ வந்தவன் கப்பல் விடுவான் ..

ஒரு கார் எடுத்து நாலாவது கியர் போட..
இடம் காணாது ஊர் முடிந்திடும் எல்லையில் ..
இதில என்னது உன்னது என்கிறார் கொள்ளையில் ..
இது எல்லாம் பார்த்தபடி இருக்கிறேன் படலையில் ..
தண்ணி வவுஷர் எப்பவரும் என்று வெய்யிலில் ..

சங்கம் எல்லாம் சங்கமம் ஆனது சந்தியில் ...
சங்கதிகள் பேசியபடி சங்கூதுபவன் இவன்தான் ..
சட்டத்தை கையிலெடு சடப் மவுத் என்று பூட்டு ....
சாட்சியும் இல்லை சண்டையும் இல்லை நாம் ..
சங்கம் வளர்த்து வயிறு வளர்ப்போம் வாரீர் .

வெடிச்சத்தம் ..!

முதல்  வெடியோசையில் பிறக்கிறது காதல் ..
பக்கத்துக்கு கூடாரம் யாராக இருக்கும் ..

எண்ணிய வேளையத்தில் பிள்ளை வேகமா வா ..
என் அழைக்கும் அவள் அம்மாவின் சத்தம் ..

நிலா ஒளியில் அவள் நிலா முகம் பார்க்கிறேன் ..
ஓடி சென்று மாமர அருகில் இருந்தவாறு ..

ஒன்னை பெத்து வைத்திருக்கிறேன் ..
கட்டிகாக்க நான் படும் பாடு பெரும்பாடு .
.
என்னும் ஏக்க பெரும்மூச்சு விடும் அவள் அம்மா ..
கற்பூர வள்ளி போல வாடாமல் இருக்கிறாள் ..

கண்களில் மட்டும் சிறு நீர் நிரம்பி இருக்கு ..
அது ஒரு வயது பார்த்தவுடன் வாழ்க்கை கொடுக்கும் ..

கட்டினால் இப்படி ஒரு பிள்ளையைத்தான் ..
என்னும் மன ஓட்டத்தில் இயங்கும் நிலை ..

எம்மை பற்றி சிந்தித்ததை விட அவளை பற்றி அதிம் ..
அடிக்கடி பவுடர் போடும் முகம் ..

உள்ளம்கையில் எப்பொழுதும் இருக்கும் சீப்பு ..
வெளியில் அவள் முகம் காட்டும் போது ...

மெதுவா அவள் தடுக்கு படலையை விழி மேயும் ..
இருக்கிறோம் என்று தெரிந்தால் ஆமை போல் அவள் ..

எப்பொழுதுதான் பார்ப்பது என்று நினைக்கையில் ..
மீண்டும் ஒரு வெடி சத்தம் ....

என் காதல் வளராவது ஒவ்வெரு நாளும் ..
கேட்கட்டும் வெடிச்சத்தம் பெண்ணே .

காட்சி பிழை ....!

மின்சார ரயில் மெல்ல மெல்ல ..
வேகம் கொள்ளும் நிலை போல் ..

உன் மின்சார பார்வை என்னையும் ..
லேசா லேசா திரும்பி பார்க்க தூண்ட ...

உடைந்து விழும் கண்ணாடி போல் ..
மனதில் ஒரு சிதறல் கோடு ..

நீ பாடல் கேட்டு தலை அசைப்பது ..
எனக்கு ஏனோ சம்மதம் சொல்வதாய் ..

உன் விரல்கள் கோலம்மிடும் கைபேசி திரை ..
என் மூச்சு காற்றின் வெப்பம் அறியும் ..

நீ பாடல்களை மாற்றிக்கொண்டு இருக்கிறாய் ..
நான் வாழ்வின் பல படியை உன்னோடு கடக்கிறேன் ..

ஒவ்வெரு தரிப்பிடமும் மூச்சு வாங்குது ..
நீ எழுத்து போகக்கூடாது என்று வரம் கேட்குது ..

நீ நிமிர்த்து பார்க்கும் நொடிகள் தான் ..
நான் வாழ்தலின் பலனை எண்ணுகிறேன் ..

என்றாவது ஒருநாள் உன் அருகில் நான் ..
சேர்த்து பயணிப்பேன் என் காதலே ..

அதுவரை நீ காட்சி பிழையே பெண்ணே ..
நான் விழிக்காதவரை கனவுகள் தொடரும் .