வெள்ளி, 23 ஆகஸ்ட், 2013

பார்பதி அக்காவும் பாம்பும் ..!



எங்கள் ஊரில் மிக அதிக மக்கள் தெரிந்து இருக்க கூடிய ஆள் நம்ம பார்வதி அக்கா எவர் என்ன உதவி கேட்டலும் முகம் சுளிக்காமல் செய்து கொடுப்பா சிலர் அதை அவர் கஸ்ரம் என்பதால் செய்கிறார் என்றும் சொல்லுவினம் ஆனால் அவா அப்படி இல்லை அருமையான ஆள் வீடுக்கு தன் மகனுடன் வரும் நண்பர்களை வாங்கோ தம்பி இருக்கு என்ன சாப்பிடிறியல் என தனது கஸ்ரம் காட்டாது உபசரிப்பு செய்வதில் எங்கள் மனம் நெகிழ்த்து போகும்

இப்படி இருத்த பார்வதி அக்காக்கு சமாதான காலம் வர போக்குவரத்து சுகம் ஆக பிரிந்து இருத்த உறவுகள் எல்லாம் தேடிவந்து உதவி செய்ய கொஞ்சம் வசதியா வர தொடங்கினா அவாவின் செயல்பாடுகளும் ஓவரா போக ஒரு மாமன் முறையான ஒருவரின் உதவியுடன் மகன் வெளிநாடு வந்தான் பின்னர்

அவன் உழைத்து யுரோ ரூபாவா மாற பார்வதி அக்காவும் மாற தொடங்கினா அக்கம் பக்கம் எல்லாம் போகமாட்ட ஒரு போன் எப்பவும் கழுத்தில் தொங்கும் இப்படி கடும் அலப்பரை

வீட்டுக்கு முதல் சுற்றி சுவர் கட்டினா எல்லோரும் வாயை பிளந்து நிண்டினம் பார்த்தியா அந்தபெடி அள்ளி அனுப்புது பார்வதி விட்டு விசுக்குது என்று நாடு நகரம் எல்லாம் பேச்சு மகனும் அம்மா கஸ்ரபட்டு வளர்த்த்வா சந்தோஷமா இருக்கடும் எண்டு பார்த்து பாராமல் இங்க வட்டிக்கு வேண்டி அனுப்பிறது பாருங்கோ


பின்னர் ஒருவருடத்தில் வீடும் கட்டி எல்லாம் புதுசா வாங்கி போட்டு ஐரோப்பா மெடலில வாழ்ந்த பார்வதி அக்கா அக்கம் பக்கம் எவரையும் அண்டுவது இல்லை எல்லாம் வசதி செய்கிற வேலை ஆனாலும் அவாக்கு ஒரு கவலை தன்னிடம் இருக்கும் வசதி ஒருவருக்கும் தெரியாது எப்படி சொல்லுவது யாராவது வந்து போனா சொல்லுவினம் இங்கதான் எவரும் வருவது இல்லையே என்கிற ஏக்கம் இருந்தது ஒருநாள் கடும் சத்தம் அவாவின் வீட்டுல் பக்கத்துக்கு சனம் என் எண்டும் கேட்கவில்லை சரி காலையில் பார்ப்பம் எண்டு இருந்துட்டு

சரி நம்ம ஊர்காரி எண்டு சரசு அக்கா என்ன இரவு ஒரே சத்தம் என்ன புதினம் எதாவது பிரச்சினையா எண்டு கேட்க ஓம் சரசு இரவு புதுசா கட்டின கொமட்டுக்குள்ள தண்ணி குளிர்மைக்கு பாம்பு வந்து படுத்திட்டு நான் லையிட்ட போட பார்த்து திகைச்சு போனன் ஆ பிறகு என சரசு விழிய விரிக்க பிறகு என்ன அடிப்பம் எண்டு தடிய எடுத்து வந்தன் புது கொமட்டு வேற உடைச்சாலும் எண்டு பாம்பை மெதுவா தள்ளி விட அது அப்படியே போய் நாற்பதுனாயிரம் ரூபா பிறிச்சுக்கு கிழபோட்டுது என்ன சனியன் எண்டு அதால தட்டி எடுத்து விட திரும்பவும் ஊர்த்து சம்ஸுக் டிவி பிளாஸ்மா கிழ போட்டுது சரசு வாயை திறந்து பெரியா டிவியா என கேட்க ஓம் அது ஒருலட்சம் எண்டு பதில் சொல்லிட்டு தொடரத்தா

அட கருமம் என்ன இது எண்டு தடிய அதுக்குள்ளே விட்டு இழுத்து பாம்பை எடுக்க அது அப்படியே டவுள் வெட் கட்டிலுக்க போட்டுது பிறகு ஐந்து பற்ரி டச் எடுத்து அடிச்சு பார்த்தா மூலைக்குள்ள  கிடக்கு அந்த வளமா வந்து அடிக்க முடியாது என சொல்ல சரசு மறுபடியும் என் அக்கா என அந்த மூலையில்தான்  கொம்புயுட்டர் கிடக்கு சரசு பெருமுச்சு விட்டபடி ஆஆ என பிறகு ஒருமாதிரி தட்டி தட்டி கொண்டுவர அது கதவு ஒட்டையல குசினிக்க போட்டுது

அது வெளிய போக இடம் தெரியாமல் எலைர்ரிக் அடுப்பால ஏறி மைக்குரோனுக்கு மேலால ஊர்த்து அப்படியே பாண்  சூடுபண்ணுறது ஆல கீழல வந்து சுடுதண்ணி வைக்கிற கிற்றர்க்கு மேலால போய் ஏசி பூட்டின வயரால நழுவி சோனி பாக்ஸ் செட்டுக்கு மேல விழுந்து ஒடதொடங்க நான் எட்டி அடிக்க அடி பிடிக்க வில்லை பிறகு முன் போர்ட்டிக்கோ கதவால வெளிய ஓடிட்டு என்று பார்வதி அக்கா சொல்லி முடிக்க சரசுக்கு தலை சுற்ற வெளிக்கிட பாம்பு வந்ததா வரவைக்க பட்டதா என்கிற குழப்பம் நிறைச்ச கேள்வியோட சரசு நகர ஒருபடிய ஊர் குருவிக்கு நான் வாங்கின பொருள் எல்லாம் சொல்லியாச்சு எங்கிர சந்தோஷத்துடன் பார்வதி அக்கா சந்தைக்கு போக தனது குலின்க்  கிளாசை தேடினா .

செவ்வாய், 20 ஆகஸ்ட், 2013

எங்கே போகிறோம் நாம் எங்கிருத்து வந்தோம் .!

நாம் வாழ்வும் பண்பாடும் கலாச்சாரம் என எமக்கான தனி அடையாளங்களுடன் வாழ்ந்த  இனம் இப்பொழுது பயணிக்கும் பாதை மிக கவலையானது எமக்கான அடையாளங்களை தொலைத்து நாம் என்ன லாபம் அடைய போகிறோம் ஒரு சாதாரண கைபேசியில் தொடங்கி வீட்டு கழிவறைக்கு போடும்  செருப்பு வரை என்னுடையது விலை மதிப்பாக இருக்க வேணும் என்பதே எமது எண்ணம் ஆகி இருக்கு கலக்சி போனில் அல்லது ஐபோனில் என்ன இருக்கு அதை பயன் என்ன பாவனை திறன் என்ன என்றுகூட அறியாது நான் மார்க்கான ஒரு போன் வைத்துள்ளேன் என்பதில்தான் என் கௌரவம் அடங்கி இருக்க என போகிறது வாழ்க்கை

வருமானத்துக்கு  மேலக செலவுகளும் பிழைகளுக்கு  நாங்கள் ஊரில பில்கேஸ் என நீட்டி முழங்கி கதைகள் சொல்லி  எங்கள சுயங்களை அவர்களுக்கு  விளக்காது ஒரு கனவு உலகத்தில் பயணிக்க செய்வதால் எமது வாழ்வியல் அழிந்து போகும் ஒழிய வேறில்லை வெள்ளைக்காரன் சுகமா கூப்பிட பெயர் பார்த்து வைப்பது முதல் போடும் உடுப்பு வரை அவர்கள் வாசனை  பத்துமாதம் சுமந்தவள் ஆசையாய் ஒரு பெயர் வைக்க முடியுதா.. பிள்ளைகளை எமது கலாச்சரம் பற்றி புரிதலை அறிதலை அவர்களுக்கு சொல்லி கொடுப்பது வெட்கமா படுத்து எமக்கு நாலு சபை சடங்குக்கு கூடி போனால் தமிழ் கதைக்க பஞ்சி படுவது தொடக்கி உறவுகளை நலம் விசாரிப்பது வரை போலியான பாவனை
நான் பார்த்தவரை அம்மா பக்கத்தில் இல்லாவிட்டால் அந்த பெண்பிள்ளை அழகா தமிழ் கதைக்கும் அதை கவனிக்கும் தாய் உடனம் அருகில் வருவர் வந்தவர் சொல்லும் கதை அவளுக்கு தமிழ் அவளவா வராது என்பதே
அழகா கதைத்த பிள்ளை  நடிக்க தொடங்கும் எதுக்கு இந்த வீண் பில்டப்பு எங்களை நாங்கள் உயர்வா காட்ட எவளவு கேவலமான வேலையும் சிரிச்ச படி செய்வம் பணம் உள்ளவர் பார்த்து உறவு முறை சொல்லி கொடுப்பது மற்றவர்களை கண்டுகொள்வது இல்லை பின்னாளில் பெண்பிள்ளைகள் உறவுமுறை தெரியாமல் காதல் வயப்படுவது பின்னர் தெரியவருவதும் வெளிநாடுகளில் அதிகமானதா இருக்கு உள்ளநாட்டு  தொடர்நாடகம் எல்லாம் பார்த்து பழகி அதிகமா மாமனை காதலிக்க தொடங்கி இருக்கு ஒரு தலைமுறை இது ஆரோக்கியம் ஆனதா
பத்து தலைமுறை வாழும் அராபியனும் ஆபிரிக்கணும் இன்னும் தன்னை காத்து மொழி காத்து உடைகாத்து நிக்க நாம் ஒரு தலைமுறை வரவில்லை பெயர் மாறி உடைமாற்றி தலைமுடி முதல்வரை மாறி நிக்கிறம் நாம் எங்கிருத்து வந்தம்

செல்லமாக கேட்டது எல்லாம் வாங்கிகொடுத்து கஸ்ரம் துன்பம் காட்டாது பிள்ளை வளர்த்து இரவு பகல் பாராமல் வேலை செய்து அடிமாடாய் தேய்த்து சிறுக சேர்த்த பணத்தில் கலியாணம் பண்ணி வைத்தால் கட்டி இரண்டு கிழமையில் வீடில் வந்து நிக்கு டிவைஸ் வேணும் என்று கரணம் சொல்வதுக்கு இல்லை கேட்பது வாங்கிதாறார் இல்லை அவரின் குடுப்பத்துக்கு அடிகடி காசு அனுப்புறார் என்பதே அதிக காரணமா இருக்கு அதுக்கு பெற்றோரும் ஒத்து ஊதுவது தான் கொடுமை

நாம் எங்கிருத்து வந்தோம் எங்கள் ஆணி வேர் என்ன எங்கள் கிளைகளின் பரப்பு விழுதுகளின் வலு இவைகளை சொல்லி வளர்க்காது ஒரு கற்பனை கலந்த கனவு உலகில் வாழ்த்து காட்டி நடித்து காட்டி எம் வேசங்களை சரியாய் போடுவரை நாடகம் தொடரும் ஒருநாள் எங்கள் முகமூடி கிழியும்போது எங்கோ போய் புதைக்க போகிறோம் எங்கள் நிஜ முகங்களை .

வேட்காவும்....விஸ்கியும் ..வியூட்டி பாலரும்..தான் எனது உலகம் வாழ்வியல் என என்று நாம் இறங்கினமோ அன்றே எம்மை எம்முள் தொலைத்து விட்டு பக்கத்தில் தேடிக்கிடைக்க போவது இல்லை சம்பளம் 30 யுரோ முகம் பேசியர் செய்ய 35 யுரோ ஐந்து யுரோ வட்டிக்கி  வாங்கி மேக்கப் போடும் சமூகம் ஆரோக்கியமானது இல்லை வெளிநடப்பை பார்க்கும் போது ஆதங்கம் தாங்க முடியவில்லை யாரிடம் சொல்வது அதுதான் இங்கின கொட்டி தீர்த்தம் மக்ளே.

இந்த மாதிரி சமூகத்தில் தான் வாழ்கிறோம் நாம் படம் கதை சொல்லும் .
1186041_4658373757160_289471402_n.jpg

சனி, 17 ஆகஸ்ட், 2013

அரைகுறை .!

கேட்டலும் படித்தாலும் அரைகுறை
பார்த்தாலும் தெரிதலும் அரைகுறை
விளக்கமும் தெளிவும் அரைகுறை
கன்னியும் கவர்ச்சியும் அரைகுறை

படமும் பாட்டும் அரைகுறை
பேச்சும் செயலும் அரைகுறை
வெட்டியும் பந்தாவும் அரைகுறை
வரலாறும் வாழ்கையும் அரைகுறை

நம்ம வாழ்க்கையும் அரைகுறை
மற்றவன் செயலை விமர்சனம் அரைகுறை
என்னை நான் தேடினேன் அரைகுறை
நான் முழுமை பெறும் நாள் எப்போ
அப்போ நான் மனிதன் ஆகிறேன் .

ஐயோகு :)

முத்தம் .!

நச் என்று நாலுவரி கவிதை சொல்லு என்றேன் அவள்
இச் என்று கொடுத்து ஒருவரியில் முடித்துவிட்டால் முத்தம் ..!




காதல் உணர்வு ..!

உன்னிலையும் என்னிலையும் சேரும் மனனிலைதான்
காதல் .!!



ஊடல் ..!

நீ அட்டமி நான் நவமி
எப்பொழுது ஆவோம்
பௌர்ணமி .!

வெள்ளி, 9 ஆகஸ்ட், 2013

என் மனம் .!

கடலை போன்றது நிலையாய் இருக்கா
அலையும் காற்றும் உறங்க விடா
படகில் பலர் அலையுடன் பேசி நகர
என் மன வானில் விடி வெள்ளி

சீவாத தலை முடியும் பொட்டில்லா
உன் நெற்றியும் எனக்கு அம்மவாசை
இரவை நினைவில் கொண்டுவர
உன் புன்சிரிப்பு நட்சத்திரம் ஆனது

நீ பேசினால் புல்லாங்குழல் இப்பொழுது
எனக்கு சங்கு சத்தமா கேட்குது
உன் அண்ணன் பார்த்த நாள் முதல்
கனவிலும் சுடலை தெரியுது

நான் உன்னை பார்க்கிறேன் காதல் பார்வை
நீ என்னை பார்க்குறாய் ஏக்க பார்வை
நான் உன்னை அடைய விரும்பினேன்
ஆனால் உன் அண்ணன் என்னை அடிக்க தேடுறான்

என்றோ ஒருநாள் உன்னை சேரும் நாள் வரும்
அதுவரை என் மனம் நிலையில்லா கடலில்
பயணம் செய்து கொண்டு இருக்கும்
உன்னை தேடி காதலியே .

வியாழன், 8 ஆகஸ்ட், 2013

அன்றாடம் ..!

மேய்ந்து கொண்டு இருந்த மாடுகள் திடீர் என
 தலையை நிமிர்த்தி மேல பார்த்து
தங்களுக்குள் பேசிவிட்டு கிழக்கே நடக்க தொடங்கின 
வேகமாக மிக மிக வேகமாக

கருமேகம் வடக்கு திசையில் சுழன்று மேலுருளும்
 காட்சி அமாவாசை இருளை நினைவு படுத்த
 மாடுகள் வரிசையாய் நடந்தவண்ணம் இருந்தது
 பட்டியை திறந்து விட்டுபரமர் வானத்தை பார்த்தபடி

மிக் 27 தாழபறக்க அவரவர் பக்கத்தில் இருக்கும்
 மரங்களுக்குள் பாதுகாப்பை தேட
அண்ணாந்து பார்த்து சைக்கிள் ஓடி
 வேலியுடன் மோதியவனும் கிடங்கில் விழுந்தவனும்

தங்களுக்குள் சிரித்து விட்டு தம்பாட்டில் 
அலுவல்களை தொடர
 ஒலியின் ஓசைகேட்டு என்ன என இனம் 
கண்டு மக்கள் வீடு போவதும்
மாடு மழைவருவது முதலே தெரிந்து
  பட்டி திரும்புவதும்

வன்னியின் அன்றாட வாழ்க்கை ஆகிப்போனது மக்களுக்கும் மாக்களுக்கும்
பொல்லாத காலம் ஓய்ந்து பொழுதுடன் நிழல்வீச
 எல்லா ஆயாசம்களும் தீர்த்து சனம் எதிர்காலம் தேடி
ஏரும் கலப்பையுமாய் ஆ நல்லம் வசந்தம் இனியாவது வரட்டும் .