சனி, 7 டிசம்பர், 2013

அப்படி பெரிய...... :)

நம்ம ஊருல இரண்டு பேர் இருப்பாங்க எப்பவும் அவங்களால் ஒரே சிரிப்பு தான்... மற்றவனை ஏமாற்றுவது இவங்களின் வேலையா இருக்கும்.. ஒருநாள் பனையை பார்த்து இருவரும் மிக கவனமா அவதானமா பேசிக்கொண்டு இருந்தாங்கள்.. அக்கம் பக்கம் உள்ளவனுக்கு எல்லாம் குழப்பம் என்ன இப்படி கதைக்குறாங்க என.. பக்கத்தில் போய் பார்த்தா ஒன்னும் இல்லை.. அப்பொழுது முதல் ஆள் கேட்டான் எப்படி ஐந்து காலால் நடக்குது என்று.. மற்றவன் கேட்டான் ஓம் ஒரு காலை தூக்கிட்டு ஊருது பாரு எறும்புக்கு எவ்வளவு துணிவு என.. சுற்றி நின்டவனுக்கு அனைவருக்கும் கடுப்பாகும்.. பேசிட்டு போயிடுவாங்க அப்படி அவங்களின் அலப்பரை கொஞ்சம் இல்லை .


ஒரு முறை இருவரும் சைக்கிளில் தூரம் பயணம் போயிட்டு இருந்தாங்க.. அப்பொழுது காட்டு பாதையில் போனவர்களுக்கு ஊர் எல்லை வந்ததும் சாப்பிடும் எண்ணம் வர ஒரு நிகழ்வு நடந்த வீட்டுக்கு போயிட்டாங்க.. அங்க முதல் பந்தியில் இருந்து சாப்பிட்டு கொண்டு இருக்க சாப்பாடு பரிமாறியவர் இவர்கள் இருவரையும் கேட்டார் நீங்க யாரு தம்பி என.. அப்பொழுது முதல் ஆள் சொன்னான் நாங்க பெண்ணு வீட்டுகாரர் என்று.. திடுக்கிட்டு கேட்டார் சாப்பாடு போட்ட ஆள் நீங்களா ஓகே வடிவா சாப்பிடுங்க வேற என்ன வேணும் என கேட்டு கேட்டு நல்ல உபசரிப்பு நடந்துது.. அப்பொழுது முதல் ஆள் சொன்னான் பார்த்தியா இதுதான் அரசியல் எப்படி கவனிப்பு போகும்போது சாப்பாடு கட்டிட்டு போகவேணும் என்று திட்டம் வேற போட்டாச்சு.. இப்படி பேசிய படி சாப்பிட்டு முடிந்து கைகளை கழுவி கொண்டு இருக்க அவர்களை நாலுபேர் சுற்றி வளைத்து எருமை மாடு பிடிக்கும் கயிறால் கட்ட முற்பட . பயந்து போன இருவரும் குழப்பத்துடன் என்ன நடக்கு எங்களுக்கு மரியாதை இல்லாட்டி என்னாகும் எண்டு தெரியுமே இப்ப நிப்பாட்டுவன் கலியாணத்தை என உரக்க கூறி கலவரம் பண்ண வீட்டுக்காரன் சொன்னான் டேய் முட்டாள் இது சாமத்திய வீடு நிங்க களவு எடுக்க வந்ததும் இல்லாமல் எங்களை மொக்கன் ஆக்க பார்த்தா விடுவமா என.. அதன் பிறகு விழித்த இருவரும் உண்மையை சொல்ல மன்னித்து அனுப்பி விட்டார்கள் அவர்கள்..


பின்னர் அதில் ஒருவன் தென்பகுதிக்கு போயிட்டான்.. ஒரு எட்டு மாதம் இருக்கும் போனவன் வந்தான்.. கண்டி ரோட்டால் வந்தவன் ஒரு சைக்கிள் கடையில் கதைத்து கொண்டு இருந்தான்.. அப்பொழுது கடைக்காரன் கேட்டார் என்ன தம்பி சிங்களம் கதைப்பியா என அதுக்கு அவன் ஓம் அண்ணே சிங்களம் தறோ என்று சொல்லி தன் பெருமைகள் பேசிட்டு இருந்தான் . அப்பொழுது ஒரு நாலு சக்கர வாகனம் காற்று போய் ஒருவர் உருட்டி வந்தார்.. வந்தவர் சிங்கள மொழி கதைப்பவர் சிங்களத்தில் கேட்டார் ஒட்டி தர முடியுமா என.. விளங்காத கடைக்காரன் இவனை பார்த்து கேட்டார் உனக்கு தானே சிங்களம் தறோ என்ன சொல்லுறான் என கேட்டு சொல்லு என்று இவன் குழம்பி ஓகே என்று எழும்பி என்ன என கேட்டான் அவர் மீண்டும் சிங்களத்தில் ஒட்டி தர முடியுமா கேட்க இவன் கடைகாரானுக்கு சொன்னான் பதில் பாருங்க .........

ஓம் அண்ணே அவன் கதைப்பது சிங்களம் தான் என்று கடுப்பாகின கடைக்காரன் சுட்டியலை தூக்க பாட்டி எஸ்கேப் இப்படி தான் அறியா சிங்களத்தால் அவன் பட்ட பாடு .

பிறகு ஒருநாள் கொஞ்ச பேருக்கு கதை சொல்லிட்டு இருந்தான் ஆவலா அனைவரும் கேட்டுக்கொண்டு இருந்தனர் முயல் ஆமை கதை.. இதில் முயலும் தண்டனை பணம் கட்டியது ஆமையும் வரிகட்டியது பற்றி அனைவருக்கும் ஆச்சரியம் எப்படி சாத்தியம் என் அவைகள் பணம் கட்டவேண்டி வந்தது என்று குழம்பி இருக்கு இவங்கள் இருவரும் டீ குடிக்க போயிட்டு வந்து கேட்டாங்கள் விடை தெரியுமா என்று எல்லோரும் விழியை உருட்டியபடி இல்லை சொல்லு சொல்லு என் காசு கட்டியது என்று வினாவ முதல் ஆள் சொன்னான் முயல் ஓவர் இஸ்பிட் (50 வேகத்தில் போகாமல் 150 போனது ) அதுக்கு குற்றப்பணம் என்று அப்ப ஆமை ஏன் கட்டினது வரி மற்றவன் சொன்னான் ஆயிரம் முட்டையை ஒழித்து மறைத்து கொண்டுவந்தது பிடிபட்டதால் கட்டியது .

இப்படி ஊருக்குள் சிலர் இருப்பங்கள் அண்டப்புளுகு ஆகாஷாபுளுகனுகள் அப்படி பெரிய புளுகங்கள் தான் இவர்கள் இருவரும் தாங்கள் ஜோக்கர் என்று தெரியாமல் வாழும் ஹிரோக்கள்
:D :D :D

தமிழரின் முகவரி .!

எட்டுகோடிக்கு மேல்லானோர்
எழுதி ஒட்டிய கடிதம் கேட்பார்  அற்று
ஆசியாவின் ஒரு பெருநிலத்தில்
பரவி கிடந்ததது சிதறி இருந்தது ..

எமக்கான பதிலையும் நாம் யார் ?
என்னும் கேள்விக்கு விடையும் அதில்
கேட்டு எழுதி இருந்தோம் கவனமா
ஆனாலும் அதை உலக பெட்டியில் போட ...

அஞ்சி பயந்து நடுங்கி  கைகளில் வைத்து
பைகளில் மறைத்து அன்னியர் பாரது ..
பக்குவமா தலைமுறைகளுக்கு மாற்றி
மாற்றி கொடுத்து பாதுகாத்து வைத்த கடிதம் ...

வள்ளுவன் வந்தான் கம்பன் கூட வந்தான்
நக்கீரர் நாவலர் என பலர் வந்து போயிம்
எமக்கான கடிதத்தின் முகவரி கிடைக்க வில்லை
நாங்களும் வருந்தவில்லை தேடியபடி இருந்தோம் ..

கார்த்திகை திங்கள் வேளையில் வல்வையில்
கிடைத்தது முகவரி உலக தமிழரின் நிஜ வரி
தேங்கி கிடந்த அஞ்சல்கள் எல்லாம் எழுதியது
எம் தலைவனின் பெயர் அதை துணிந்து ..

உலகமே தேடிவந்து பெற்றுக்கொண்டது கடிதம்
ஈழத்தை ஐநா வரை கொண்டுசென்று விட்டது
எம் தலைவனின் முகவரி இட்டு இனி நாம்
எழுதுவோம் எவருக்கும் அஞ்சாத கடிதம் ...

யாம் இருக்க பயம் ஏன் என்றான் தமிழ்குமரன்
நாடு பெரிது என்று வாழ்த்தார் எங்கள் ஈழக்குமரன்
அகவைகள் வந்து போகும் எங்கள் தலைவருக்கு
முகவரி மட்டும் தமிழீழம் ஆகும் தமிழருக்கு ...

உலக தமிழரின் பெரும் தலைவருக்கு
ஈழத்தமிழரின் அருமை தலைவருக்கு
விடுதலை புலிகளின் படை தலைவருக்கு
தமிழீழத்தின் அரியணை புதல்வருக்கு ...

எம் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா .!

pirapakaran.jpg

நான் நினைவிழக்கும் தருணம் .!

பாட்டியின் கைகளால் சுடப்படும் அப்பம் ...
அம்மாவின் சேலையால் தலை துவட்டும் போது..
அப்பாவின் தோளில் ஏறி இருந்த பொழுதுகள் ..
அண்ணனின் கைகளால் முதல் வாங்கிய அடி ..

அக்காவின் கை பிடித்து கோயில் போன காலம் ..
தங்கையை வெருட்டி அழவைத்த நேரம் .
தம்பி என்னை கண்டால் ஓடி ஒழிந்த நிமிடம் ..
ஒரு ரொட்டியை எட்டா பிரித்த சமயம் ..

விலகி போன உறவு கதறி அழும் கணம்
காதல் என்னை கலங்கடித்த கணப்பொழுது ..
முதலில் அவளை தாவணியில் பார்த்த படம் ..
கோயிலின் வடக்கு வீதி மேளசமா  இனிமை ...


சாண்டிலியன் கடல்புறா வர்ணனனை ..
மெருவிரலால் தடவி மட்டி எடுத்த கடல் ..
இசையில் மயங்கி ஒன்றிப்போன சங்கீதம் ..
முதல் சினிமாவில் இருட்டில் தடவிய கதிரை ...

எல்லாம் நினைவிருக்கு எனக்கு ஆனால் ..
உன்முகமே முதல் இருக்கு மனதில் ..
நீ என்னை தேரடியில் கடந்து போனபோது
மொத்தமாய்  மறந்து போனேன் பெண்ணே .