செவ்வாய், 29 ஜூலை, 2014

இலக்கை நோக்கி நடந்த வேளை ..!

எருக்களை வாசமும் ..
எருமையின் சத்தமும் ..
பாதை கடந்து போகையில் ..
கூடவரும் நாயுருவியும் ...
கால்களை கண்டவுடன் ..
வெட்கப்படும் தொட்டா சிணுங்கியும் ..
மெதுவாக குற்றி கூடவரும் ..
நெருஞ்சி முள்ளும் ..
ஆற்றுப்படுக்கையில் கோலம் போடும் ..
மணலின் ஜாலத்தை குழப்பி ..
நடக்கும் கால்களின் அடியில் ..
சிதைந்து கிடக்கும் நத்தை ஓடும் ..
எட்டி பிடித்து ஏறுவதுக்கு ..
கைகள் பற்றி பிடிக்கும் வீரை மரவேர் ..
சரசரக்கும் சருகு இலைகள் ..
அதுக்குள் வசிக்கும் சாரைப்பாம்பு ..
என் காலடி சத்தத்தில் எழுந்து ஓடும் ..
பெருச்சாளியும் ..சிறு பூச்சியும் ...
நிசப்த்தம் கலைத்து விழிக்கும் ..
சிறுவான் குரங்கு கூட்டமும் ..
காட்டி கொடுக்காது அமைதி ..
காக்கும் ஆள்காட்டி பறவையும் ..
கூடவே வரும் என் நிழல் ..
என் முன் தெரியமுன் நான் ..
போய் சேரவேண்டும் இலக்கு நோக்கி ..
விடிந்து விட்டால் மறைப்பு தேவை ..
தெரிந்து விட்டால் அறிந்து விடுவார் ..
ஆகையால் சற்று ஓய்வு எடுப்போம் ..
சூரை பற்றைக்குள் நாம் ..
தோழனின் விழிப்பில் எம் ..
அசதி உறக்கம் விழி மூடும் .


செவ்வாய், 22 ஜூலை, 2014

பொய் ..!

பொய்யும் புரட்டும் ...
சிரட்டையும் கையுமாம் ..

என் அப்பத்தா அடிகடி ..
முணுமுணுக்கும் சொல் ..

வழி கேட்டா சொல்லார் பின் ..
வக்கனையா விடுப்பு கேட்பார் ..

எதுக்கு போறிங்க என்னத்துக்கு என்று ..
கேள்வி மேல் கேள்வி வைப்பார் ..

உள்ளதை உள்ளபடி சொல்லார் பொய்யர் ..
சுற்றி வளைத்து சுழல விட்டு ..

கெட்டித்தனம் என தமக்குள்ள எண்ணி ..
அத்தனை முட்டாள் தனம் செய்யும் ...

இவர்கள் வாய் திறந்தாள் வானவெடி ..
மனிதனுள் மனிதனை விற்கும் ..

வித்தை அறிந்தவர்கள் பொய்யர்கள் ..
கேட்டால் வாழ வழி என்பார் ...

வேறு நல்வழி தேடார் பொய்யர் ..
நடுநிலை ..கரைநிலை என்று காரணம் வேறு ..

கண்ணை பார்த்து மூக்கு என்று சொல்பவர் ..
இல்லை என நீ சொன்னால் கொள்கைவாதி ..

புரட்சிவாதி என்று சொல்லி கடைசியில் ..
தீவிரவாதி என்று ஒரு பட்டம் வரும் ..

மறைக்கணும் ..ஒழிக்கணும் உண்மையை ..
பிதற்ரனும் ..புனையனும் பொய்யை ..

இலக்கியம் என்னும் பெயரில் ஒரு ..
கலக்கியம் பதியனும் பொய்யா ..

அதை திறன்பட விற்கவேணும் ..
கதை எழுதி காசு பார்த்து ..

கண்டபடி காரணம் சொல்லி ..
ஒட்டி உறவாடி கட்டி தழுவி ..

வைத்திடுவார் ஒற்றை ரூபா நெற்றியில் ..
செத்திடு என்று பொய்யுரைப்போர் ..

மெத்த கவனம் மெய்யாலும் சொல்லுறன் ..
பொய்யர் போக்கத்து போவார் ஒருநாள் ..

அன்று நாம் காரியம் செய்திட வேண்டும் ..
வீரியமா இருப்போம் எம் இலக்கில் ..

வரலாற்றை ஒருநாள் மாற்றுவோம் என.

ஒரு நாள் தீர்க்கப்படும் ..!

விளையாட்டா விளையாட சின்னவர்கள் ...
பொம்மை கேட்டனர் ..
கொடுக்கப்பட்டதோ பொம்மை துப்பாக்கி ..
ஆண்டுகளா பல சிறார் விளையாடி போன ..
அதே குருதி தேய்த்த பழைய துவக்கு ..
இதை வைத்திருந்தவன் இறந்து போய் ..
ஒருவருடமும் இல்லை அப்ப நாலு வயது ..
அப்பொழுது இவன் பிறந்து இருந்தான் ..
இவன் அருகில் நான் இருக்கும்போதே ..
அவன் வெளியில் விளையாடியபடி நின்றான் ..
டும் என சத்தம் வந்தால் ஓடி வரும் அவன் ..
அன்று மட்டும் வரவில்லை ஏனோ ..
சீறி வந்த ஏவுகணைக்கு தெரியுமா ..
அவன் ஆசைப்பட்டது பொம்மை..
துவக்குக்கு என்று ..
ஏவுகணை ஏவுறவன் பார்வையில்..
அவன் தீவிரவாதி...
ஆனால் அவனுக்கு பொம்மை மேல் ..
தீராத காதல் வியாதி ...
பிஞ்சா கருகி விழும்போது மனம் ..
துண்டா வெடித்து போவதை யார் அறிவர் ..
அதிகாரம் ..ஆளுமை ..திமிர் ..
அடக்கி ஆளும் திறன் ஒன்றினையும் ..
இடமே கொலைக்களம் ஆகும் இடம் ..
கேட்டால் நீதி காப்பு என்பார் தாங்களா ..
நாங்கள் செய்தால் அநியாயம் என்பர் ...
மேடையை போடுவர் ...மேசையை போடுவர் ..
சட்டென முடிவெடுப்பார் சடுதியா செய்வர் ..
பட்டென படையனுப்பி பஞ்சாயத்து வைப்பர் ..
பாவிகளை கொன்றுவிட்டு படத்துக்கு ..
போஸ் கொடுப்பர் பன்னாடு படை என்பர் ..
பணியாரம் சுட்டவனை சுட்டுவிட்டு ..
தீவிரவாதி தலைவர் என்பர் ...
பணமும் ..சூழ்ச்சியும் வைத்து ...
அப்பாவி உயிர்களை எடுப்பவரே ..
ஒருநாள் உங்கள் உயிர் போகும் ..
அதுவும் சிதறித்தான் போகும் என ..
இன்று பொம்மையுடன் விளையாடும் ..
சின்னவன் சொல்லியபடியே ஓடுகிறான் ..
சட சட சட என தன் துப்பாக்கிக்கு ..
வாயால் உயிரோட்டம் கொடுத்தபடி ...
அவன் ஈழத்தவனா இல்லை பலஸ்தீன ..
சிறுவனா என பார்த்தபடி நிக்கிறார் ..
உலக சண்டியர்கள் கூட்டமா .