திங்கள், 22 ஜூலை, 2013

மீசை ..!

ஆணா பிறந்தால் ஒரு வயதுக்கு பிறகு
ஆரம்பிக்கும் அதீத ஆசை  மீசை
எப்பொழுதும் கண்ணாடியில் முகம் பார்க்க
உள்மன கேள்வியில் எழும் ஒரு ஆதங்கம்

எப்ப   வளரும் எப்படி வளரும்
நாம வளர்க்க  வேணுமா அதுவா வளருமா
தாடையை வழித்தா வருமா அல்லது
வந்தபின் வழிக்க வேணுமா

யாருடா கேட்கலாம் எப்படி கேட்கலாம்
அப்பா சேவ்செய்யும் பிளேட்டை ஆட்டை
போட்டு அடிவளவில் போய்நிண்டு  கண்ணாடி
இல்லாமல் கண்டபடி இழுத்து வெட்டுக்காயம்

இப்பொழுதும் போகவில்லை அடையலாம்
மீசையை முறிக்கிட்டு போறவனை பார்த்து
பொறாமை பெரிய இவரு எண்டு நினைப்பு
எங்களுக்கும் வளரும் எல்லே உள்மன களிப்பு

வளத்த பின் தெரித்தது பராமரிக்க பத்து ரூபா
கிழமைக்கு வேணும் எண்டு அதுவரை
மீசை  மேல் இருத்த ஆசையெல்லாம் குறைத்து
தடுக்கும் யோசனை தானாக வர மனதில்

காரணம் இருக்கு என்ன தோல்வி எண்டாலும்
கேட்கும் முதல் கேள்வி மண் ஒட்டவில்லை
என்னும்  பெரும் நக்கல் நையாண்டி அன்று
எடுத்த முடிவு திடமா நான்


வளர்ப்பது இல்லை இனிநான் மீசை
கிளின் சேவ் இனி எவர் சொல்வார் மண்
ஒட்டியதை பற்றி இவர்களுக்காய் நான்
தண்ணியில விழமுடியும் அதனால் போனது
என் ஆசை மீசை .

(முறிக்கிட்டு யாரவது கேள்வி கேட்ககூடாது என்னய்யா ஆமா )


வியாழன், 18 ஜூலை, 2013

அறியா வயது ..!

வெட்டி கதை பேசி வெண்ணிலா ஒளியில் என் வீட்டு முற்றத்தில்
அக்கம் பக்கம் உள்ளவர் எல்லாம் சேர்ந்து இருந்து
பக்கத்துவீட்டு நிலவும் நானும் ஓரமாய் விடுப்பு கேட்டு
தெரித்த சினிமா தெரியாத அரசியல் போன கோயில்
என வண்ண வண்ண கலர் பூசி கதை பேசி இருந்த காலம்

விஜயகந்தும் அர்ஜுனும் இந்தியாவை காப்பது போல்
எமக்கு ஒரு ராம்போ இருந்தா நாடு விரைவா கிடைக்கும் என
எமக்குள் ஓடும் என்ன ஓட்டம் தலைகால் புரியா சந்தோஷம்
பக்கத்து வீட்டு பெடியள் எல்லாம் நல்லவங்கள் இல்லை நிலா
நானே உனக்கு எல்லாம் செய்யும் யோக்கியன் என பொய்பேசி


அறியாத வயது அதில் ஆயிரம் கதைசொல்லி மனதுக்குள் பூரித்து
நமக்குள் ஒரு உலகம் ஏற்படுத்தி வண்ணத்து பூச்சி போல
இறக்கை விரித்து திரிந்த காலம் அது வெட்டை வெளியும்
பூவரசம் மரநிழலும் இலைகளில் சுருட்டிய பீப்பியும்
கொடுத்த சந்தோஷம் எப்பொழுதும் மனதில் இருக்க

ஒருநாள் இரவு என் நிலா வரவில்லை கேள்வியது மனதில்
எல்லோரும் சிரித்து இருக்க நான் மட்டும் சோகமாய்
ஒரு கட்டத்தில் முடியாமல் போக கேட்டுவிட்டேன் நிலா
அம்மாவிடம் உங்களுடன் ஏன் நிலா வருவது இல்லை என்
வீட்டுக்கு இப்பொல்லாம் என ஆதங்கத்தை

அவள் பெரிய மனுசி ஆகிட்டாள் அக்கம் பக்கம் இரவில்
போகக்கூடாது காத்துகருப்பு படுமாம் அதுகும் எனக்கு
புரியல எதுகும் எனக்கு விளங்கவில்லை நேற்றுவரை என்னுடன்
இருந்து கதை பேசியவள் எப்படி பெரியவள் ஆனால் நான் மட்டும்
சின்னவனா இருக்க மீண்டும் விடைதெரியா கேள்வியுடன் உறக்கத்துக்கு

மூன்றுகிழமை கடந்திருக்கும் பார்க்கவே முடியாதா என என்
மனம் ஏங்கி இருக்க ஒருநாள் காலை என் வீட்டு வேலியோரம்
நின்றிருந்தால் என் நிலா என் கண்கள் ஆயிரம் கேள்வியுடன்
அவளை பார்க்கக் அவள் கண்கள் ஓராயிரம் ஏக்கத்துடன் என்னை
பார்க்க சிறுவயது குறும்பும் விளையாட்டு தனமும் ஒரு புரிதலாய்
எம்முள் மாறியிருக்கு என என் மனம் கதைசொல்லிச்சு எனக்கு

இலைமறை காயாய் இளையவர்களுக்கு சொல்லிக்கொடுங்கள்
வாழ்வின் மாற்ற விநோதத்தை பல கேள்விட்டு விடைகிடைக்கும்
என்னை போல நல்லவர்க்கு (நோ பேசக்கூடாது )உங்களையும் சேர்த்து
புரிதல் அறிதல் தெரிதல் எல்லாம் ஒரு ஆவல் .

1069240_4500581852461_1424594751_n.jpg

திங்கள், 15 ஜூலை, 2013

அரசியல் அல்ல ..!

2009 மே18 பின் தமிழ் மக்களின் பேரம் பேசும் சக்தி முடிவுக்கு வர ஈழ விடுதலையை முன்னெடுக்கும் முன்னெடுப்பார்கள் என நம்பியவர்கள்  எல்லாம் தமிழர் தலைகளில் கல்லை போட செய்வதறியாது நின்ற ஈழ மக்களுக்கு தேசியத்தின் தலைவர் கைகட்டி போன தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டுமே எஞ்சி இருத்தது அதன் பிரகாரம் ஈழமக்கள் அவர்கள்  பின்ன நடக்க முழுமையான அரசியல் மட்டுமே செய்து பேசக்கூடிய செய்யக்கூடிய  ஒருதலைவரை இவர் போராட  பயப்பிடுறார் எனவும் சிங்களுத்துக்கு  சார்பா நடக்குறார்  எனவும் வசைபாடி துரோகியாக்கி என்ன எல்லாம் பேச முடியுமோ பேசி விலகி வைக்க பெரும் பாடு நடத்தது தெரிந்த விடையம்

இதில் என்ன வேடிக்கை என்றால் தலைவரால் கைகாட்டபடு கூப்பிட்டு கூட்டமைப்புக்கு  தலைவர் ஆகும்வரை சம்மந்தன் ஐயா பற்றி எவரும் வாய் திறக்க விலை அவரே கூறியது போல் புலிகளின் இலக்கில் நான் முதாலாய் இருத்தேன் இப்படி இருக்க அவரை  தேசிய தலைவர் எதுக்கு தெரிவு செய்தார் எவ் அவரை தலைவர் ஆக்கினார் அப்போது இப்ப தேசியம் பேசும்  ஊடகங்கள் எழுத்தாளர்கள் என் மவுனித்து இருத்தனர் தலைமைக்கு கடுபட்டா பயந்தா விடைதெரியா கேள்வியா போக

முள்ளிவாய்க்கால் பின் ஈழத்தமிழர் தங்களுக்கான  பலம்  பொருந்திய ஒரு அரசியல் தலைவரை தெரிவு செய்யவில்லை அல்லது உருவாக்க வில்லை என்றே தோன்றுகிறது இருப்பவர் எல்லாம் துரோகிகள் என்றால் அங்கு அல்லல் பட்டு  துன்பப்படும் மக்களின் நிலைமைய கருத்தில்  கொள்ளது ஊடகபுலிகள் மீண்டும் எழுவேம் அடிப்போம் என்பதாக வரிவரியா கதை எழுதுவதுடன் போராட்டம் நடந்தவண்ணம்  இருக்க அங்கு காணமல் போதலும் கொலையும்  கலாசார சீரழிவும் இனிதே நடக்கு இதை தட்டி கேட்க எமக்குள்  பாரிய முரண்பாடு இருக்க எவர் கேட்பது என்பதுடன் நிக்குறது தேசியமும் மக்களும்

அதன் காரணியா தமிழ்தேசிய கூட்டமைப்பின் அரசியல் மேற்கு உலகுக்கும் இந்தியாக்கும் முக்கியம் ஆக புலி சாயம் பூசப்பட்ட கூட்டமைப்பு எங்கு போனாலும் உள் பூசலை தவிர்க்க முடியாமல் இருதது என்பதுதான் உண்மை தமிழ் தேசியத்துக்கு கட்டுபடுவம் என வந்தவர்கள் பதவிகளுக்கு அடிபட்டு நிக்கும் நிலை வேதனை ஆனது ஆளுமையான திறைமையான நாலு வெளிஉலகுக்கு தெரிய கூடிய மனிதர்களை முன்னிறுத்தி அரசியல் செய்தால் தான் இப்பொழுது இருக்கும் உலக ஒழுங்குக்கு ஏற்றாபோல் நகர  முடியும் ஒரு குறிப்பிட்ட வட்டத்தில் நின்று அரசியல் பேசுவதை தவிர்த்து ஒரு சர்வதேச பொறிமுறை அரசியலுக்கு நாங்கள் வளர வேணும்

இங்குதான் படித்தவர்கள் உயர் பதவிகளில் இருத்தும் விலை போகாதவர்கள் தேசியத்தில் பற்று உள்ளவர்கள் கண்டு எடுக்க பட்டு முன்னிறுத்தி கண்டும்போக்குகளுக்கு  தங்கள் அரசியல் வல்லமையால் பதில் அளித்து மக்களின் வாழ்விற்கு எவர் உறுதுணைய நிக்குறார்களோ அவர்களே இப்பொழுது ஈழ மக்களுக்கு வேண்டியவர்கள் தேவையும் கூட அதன் படி கேட்பார் அற்று இருக்கும் எமது இனத்தின் பாதுகாப்பை சமத்துவத்தை எவர்  உறுதிபடுத்தினாலும் அவரை கட்சி போதம் துரோகி என பாராது எமது சமூகத்துடன் அரவணைத்து போகவேண்டுய நேரத்தில்  நாம் இருக்குறோம் என்பது யதார்த்தம்

ஆகவே முன்னாள் நீதியரசர் விக்கினேஸ்வரன் அவர்களின் வரவு விடுதலையின் ஒரு புதிய அரசியலா இருக்கட்டும் அவரின் அரசியல் போக்கை பார்த்த பின்  மிக சிறந்த துரோகி பட்டம் கொடுக்கலாம் அதுவரை பொறுத்து இருப்போம் மக்களே .

என் காதலி(#களம் ) ..!

நான் 10ஆம் வகுப்பை நிறைவு செய்யமுன் என் முன்னால் அடிக்கடி வந்து போவாள் எப்படியாவது அவளை தொட்டு பார்க்கும் ஆசை  எனக்கு ஆனாலும் வயது இல்லை என என்னை போக தடுப்பர் உறவுகள் ஆனாலும் என்னுள் ஆசை தீயா  முயற்சி செய்தவண்ணம் அவளின் காதலர்களுடன் அடிக்கடி  தொடர்பில் இருப்பேன் அவர்கள் அவளை பலமுறை கொண்டு வந்து காட்டி போவார்கள்
ஆசை அதிகமாக நானும் சண்டை பிடித்து அவர்களுடன் போய் விட்டேன்


விளைவு முன்று மாதங்களில் எனக்கு சொந்தம் ஆனால் அவளை கலட்டி பிரித்து சுத்தம் பண்ணி அணைத்து தூங்கும் சுகம் எவளவு இனிமை அவளில் வாசனை ஒரு தனி சுகம் உறக்கத்திலும் பாதுகாப்பை உறுதிப்படித்தி வெட்கம் அற்று உறங்குவாள் கைகளில் ஏந்தி அவளை காடுமலை வயல்கள் எல்லாம் நடப்பேன் என்னுடன் சுற்றுவது எண்டால் அவளுக்கு கொள்ளை பிரியம் போகும் வழிகளில் மான் மரை அணில் எலி எதுகும் மிச்சம் இல்லை பதம் பார்ப்பாள் அவளை வருடி நடக்கும் பொழுது என் சந்தோஷம் சொல்லி மாளாது

பெரும் தடுப்பு ஒன்று போட்டு அவளை வைத்து கடும் சண்டை அவள் என்கைகளில் நான் பக்கத்தில் நின்றால் கடும் வாய்க்காரி 31பல்லையும் காலடி வைப்பாள் மறுபடியும் நான் பூட்டி விட்டால் அதுகும்  மீதம் இருக்காது காறி உமிழ்த்து துப்பி விடுவாள் சண்டையில் இருக்கும் வேகமும் என்னை காப்பற்ற இருக்கும் விவேகமும் அடா போடவைக்கும் ஒருமுறையும் நம்பிக்கை துரோகம் எனக்கு செய்யாதவள் நோய் நொடி என களைப்பு அடையாதவள் அவள் எனக்கு கிடைத்தது வரமே என நான் இருக்க


ஒருமுறை கடும் சண்டை  அவளின் வாயில் வீக்கம் கூடுதலா பேசி இருப்பாள் போல வைத்தியரை நாடும்படி எனக்கு கட்டளை வருகிறது அழைத்து போனேன் சுற்றி பிரட்டி முன்னாள் பின்னால் பார்த்து விட்டு சொன்னார் இனி நீ அவளுடன் வாழமுடியாது உனக்கு இன்னும் ஒரு புதிய காதலி ஏற்பாடு செய்கிறம் போட்டு இரண்டு நாள் கழிய வா என பெரும் சோகம் என் எல்லா சந்தோஷம் துக்கம் எல்லாம் கூட இருத்தவள் எப்படி பிரிவேன் என ஆனாலும் எதோ ஒரு காதலி இல்லாமல் என்னால் வாழ முடியாது என்பதால் 2 நாள் கழிந்து சென்றேன் ஆச்சரியம் எனக்கே

ரஷ்சியன் 47வயது  காதலியை வாங்கி வைத்து விட்டு ஒரு புதிய அமெரிக்க m16 காதலியை காட்டி இனி இவளுடன் வாழ் என சொன்ன போது நான் பட்ட ஆனத்தத்துக்கு அளவே இல்லை இனி எந்த சுழலுளும் உன்னை விட்டு நான் பிரியேன் என மனதில் சத்தியம் செய்து அவளை கட்டி அணைத்தேன் கந்தக வாசம் என் நாசியில் பட்டு சிலிர்க்க


என் துப்பாக்கி என்னை இறுக்க பிடி என்றது ..!!