வெள்ளி, 6 நவம்பர், 2015

கற்றுக்கொள்ளுதல். .!

கற்றுக்கொள்ளுதல்.

ஒருவரிடம்  இருந்து   கற்றுக்கொள்ள  நிறைய  விஷயம் இருக்கு ,அதிலும்  நமக்கு  மிக மிக  பிடித்த அல்லது  நாம்  மேலாக நேசிக்கும் ஒருவரிடம் இருந்து  கற்றுக்கொள்ளுதல் என்பது மிக அலாதியானதும் பிரியத்துடன்  கூடியதும் அல்லவா ...

அவ்வாறு தலைவர்  பிரபாகரன் என்னும் மனிதனிடம்  இருந்து  கற்றுக்கொள்ள  அவ்வாறே  நிறைய  விஷயம் இருக்கிறது
குழந்தைகளுடன்  இறங்கி  தானும் குழந்தையாகும் குணம்,
எதிரியை மதிக்கும் விதம் ,
மிக  நீண்ட கால  செயற்பாட்டுக்கான தயார் படுத்தல்,
நாளை  என்ன  வேணும்  எமக்கு  என்பதற்கான  சரியான திட்டமிடல்,
ஒவ்வெரு  நிர்வாகத்தையும் திறமையின் அடிப்படையிலும் கெட்டித்தனதுடன் கூடிய செயற்பாடு  கொண்டு  இயங்கும்  ஒருவரை  இனம்கண்டு  கொடுப்பது  பொறுப்பை,
காயம் அடைத்த போராளிகள் சும்மா இருக்க  கூடாது  என அவர்களுக்கான  தொழில் படிப்புக்கள்,
உலங்கெங்கும் இளையவரை  அனுப்பி நாட்டுக்கு தேவையான படிப்புக்கள்,
நாட்டில் பெரும் நிர்வாக கட்டமைப்புக்கள்.

என அவரின் இந்த  போராட்ட கால வாழ்வில்  எதையும்  முடியாது ,தெரியாது ,செய்ய இயலுமா பார்ப்பம்  என்னும் கதைகளுக்கும் சொற்களுக்கும்  இடமளித்தது கிடையாது ,செய் ,செய்து  முடி ,செய்யலாம்  ஒரு   பிரச்சினையும்  இல்லை என்னும் ,நம்பிக்கை  வசனங்களே இருந்தது இப்பவும் பலரிடம் இருக்கிறது .

அவ்வாறு  அவரிடம் இருந்து அவரை   புரிந்து கொண்டு கற்றுக்கொள்ள நிறையவே எங்களுக்கு  இருக்கும் போது,பலர் இணையங்களில் தங்களை போராளிகளாக விடுதலை பற்றாளர்கள் ஆக காட்டி ,அதி  உச்ச விசுவாசிகள் போல தங்களை  அலங்கரித்து எடுத்ததுக்கு எல்லாம் அவனை போடணும், இவனை போடணும் என குமுறுவது  காணும்  போது ஒன்று மட்டும்  புரிகிறது .

இவர்கள் பிரபாகரன்  என்னும் மனிதனிடம்  இருந்து  எதையும் கற்றுக்கொள்ளவில்லை ,மாறாக அவர் கையில் இருந்த ஆயுதம் பற்றியே அறிந்து  கொண்டவர்களாக இருக்கிறார்கள் ,வன்முறை தான் பாதை எனவும் எடுத்தமா  ஆளை  போட்டமா போனமா என்றுதான் பிரபாகரன்  வாழ்ந்தார், என்பதும் தான் இவர்களில்  பிரபாகரன்  பற்றிய புரிதல் தெரிதல் .

அவரிடம்  இருந்த  ஆளுமையை தூர நோக்கு சிந்தனைகளை  புரிந்து கொள்ளவோ ,அறிந்து  கொள்ளவோ இவர்கள்  தயாராக  இல்லை ,இதன்  அடிப்படையில்  தான் இப்படியானவர்களில்  செயல்களால்  தான், பிரபாகரன்  என்னும் மனிதர்  பலர்  மத்தியில்  இன்னும் வன்முறையாளர்  என்னும் வரையறையில்  நிக்கிறார் .

ஆக தலைமை உங்களுக்கு  ஆயுத வழிகளை  மட்டும் காட்ட வில்லை ,மாறாக பல வழிகளை நிர்வாகத்தை கட்டியெழுப்பி நடத்தி  காட்டியவர் ,ஆகவே இவைகளை நீங்களும் தொடர்ந்து செய்யலாம் என்பதுதான் சொல்லவரும் செய்தியாக உள்ளது .

பிரபாகரன் என்றால் துவக்கு தான் என்னும் நிலையை  மாற்றுங்கள் ,அவர் அதை  தாண்டி என்னவெல்லாம்  அங்கு நிர்வகித்தார்  செய்தார் என்று கொஞ்சம்  யோசியுங்கள் ,அவைகளை  மீள எம்மால்  செய்ய  முடியுமா  என  சிந்தியுங்கள் இளையவர்களே .

சரியான ஒரு  தலைவரை, சரியாக பயன்படுத்துவது  தான்,  சரியான பாதைக்கு  வழிவகுக்கும் .

#தலைவரை கற்றுக்கொள்ளுங்கள் .

ஞாயிறு, 1 நவம்பர், 2015

அப்பத்தாவின் நினைவு குறிப்பில்.

ஊரில் வீடு  மேயும்  போது ஓலைகளை  அழகா  அடிக்கி   அடுக்கி ஈக்கால் கட்டி  கொண்டு  வருவார்கள் ,கீழே  நின்று ஓலை எடுத்து கொடுத்துக்கொண்டு #அப்பத்தா  மேச்சலை  கவனிப்பார் ,சிலவேளை  கொஞ்சம்  அதிகமாக  இடைவெளி  அல்லது  நீக்கல் தெரிந்தால் கீழே நிக்கும்  அப்பத்தா  சொல்லுவார் ,டேய் மோனோ அதுக்கு  இடையில் ஒரு  #கள்ளமட்டை  வையடா  என்று ....

சிறுவயதில்  இவைகள்  விளங்குவது இல்லை,  என்ன  "கள்ளமட்டை"  ,நல்ல  மட்டை  என்று  ,எல்லாம்  தென்னம்  மட்டை  தானே ,ஒருமுறை கேட்டபோது  விளக்கமா  சொன்னா  அப்பத்தா ....

படிமுறையா போய்க்கொண்டு  இருக்கும் மேச்சலில் இடையில் சிறு  நீக்கல்  தெரிந்தால் ,அதை மறைக்கவே  இந்த  "கள்ளமட்டை"  வைப்பது ,இந்த  "கள்ளமட்டை"  இந்த   நிரலில்  வராத  மட்டை   என்பதால் அதை  இப்படி  சொல்வது ,அதாவது மேல்மட்டைக்கு  கீழே  வைப்பதால் அவரு  ஒளிச்சு  இருப்பார் ,அதனால் அவர்  "கள்ளமட்டை"  ஆவார் ....

இவ்வாறு வாழ்க்கையில்  சிறு பிரச்சினைகள் வரும்போதும் ,குடும்பங்களில் சிறிய  பிரச்சினைகள் எழும்போதும் இடையில் நின்று  தூண்டி  விடாது ,பிரச்சினையை  பெரிதாக  போகவிடாது வீட்டில்  இருக்கும்  #அப்பத்தா போன்ற பெரியவர்கள் ,ஏதாவது  ஒரு  கதையை  நியாத்தை ,அதுக்கு  தேவைபட்டால்  ஒரு  பொய்யை  கூட  சொல்லி பிரச்சினை  மறைத்து  விடுவார்கள் ,ஆனால்  இப்ப  உள்ள  சமூகம்  அப்படி  இல்லை, இடையில்  "கள்ளமட்டை" வைக்க விடுவதில்லை  ,அப்படியே  வானம் தெரியட்டும்  என  விட்டு இறுதியில்  தலையில்  காக்கை  எச்சம் விழுந்த  பின்புதான் தாம் முன்னம்  அதை  தடுக்கவில்லை என யோசிக்கிறார்கள் ....

எனவே உறவுகளே சிறு பிரச்சினைகள்  எழும்போது வரும் போது ,நீங்களும் ஒரு  "கள்ளமட்டை"  வைக்கலாம் கதை வெளியில் போகாமல் .