ஞாயிறு, 22 ஜூன், 2014

மகனதிகாரம் ..!

1
இறுக்கி பற்றி பிடித்து இருந்த ..
உன் கைகள் லேசாய் பிடி தளரும் ..
போது நான் புரிந்து இருக்க வேணும் ..
நீ வளர்த்து வருகிறாய் என்று ..
மகனே ...

2
ஓடும் உன் மகனை ...
பிடிக்கும் வயதில் நான் ..
இல்லை மகனே ..
முதுமை .!

3
அப்பா என்று என்னை நீ அழைத்தபோது ..
இன்னும் ஒருமுறை கூப்பிட மாட்டானா ..
என் பிள்ளை என்னை என்று ஏங்கிய..
என்னை இப்பொழுது உனக்கு ஒன்னும் ..
தெரியாது போப்பா அங்கால என்கிறான் ...
லையிட்டா வலிக்குது மகனே மனது ..!

4
என்ன உனக்கு தொப்பை எட்டி பார்க்குது ..
என்று கேட்பவர்களுக்கு தெரியுமா ..
அது உனக்காக வளர்த்து தொப்பை என்று ..
நீ சிரித்து சறுக்கி விளையாட மகனே ..!

5
உன்னுடன் மிட்டாய்க்கு இட்டா ..
சண்டையை விட உன் எச்சில் ..
முத்தத்துக்கு இட்ட சண்டைதான் ..
நினைவிருக்கு மகனே ..!

6
உன் ஊச்சா என் நெஞ்சை ...
நனைக்கும்போது தான் ..
என் மனது குளிருது மகனே ..!

7
நீ அப்பா என இழுக்கும் இழுவையில் ..
தெரிந்து விடும் எனக்கு உனக்கு ..
மிட்டாய் வேணும் என்று மகனே ..!

8
நான் தடி எடுப்பது பார்த்து ...
உன் கண்கள் கலங்கியது போது....
என் அப்பா நினைவில் வந்து போனார் ..
நான் கலங்கிய கணங்களும் அவ்வேளையே..
மகனே ....!

மகனதிகாரம் ..2

9
நீ செய்யும் குழப்படி பார்த்து ....
அப்படியே பேரனை போல என ...
அப்பத்தா சொல்கையில் எனக்குள் ...
ஓடும் ஒரு இனம் புரியா உணர்வு ..
மகனே .

10
எனது சாப்பாட்டு தட்டில் ..
இருக்கும் அப்பளத்தை எடுக்க ..
நீ அம்மாவிடம் அனுமதி கேட்பது ..
பயமா ...மரியாதையா என தெரியாமல் ..
நான் மகனே .


11
நீ கேட்டு அம்மா கொடுக்காவிட்டால் ...
நீ நின்று பார்க்கும் முறைப்பு பார்வை ...
அதைகானும் அம்மா அப்படியே நீ ....
உன் அப்பா போல கோவத்தில் என ..
சொல்லும்போது நமக்குள் ஒரு ...
திமிர் வந்துதான் போகுது
மகனே ..

12
அம்மா அடிச்சுட்டா என முறைப்பாடு ...
கேட்டுட்டு நான் அம்மாவை ஒரு தட்டு ...
அதை பார்த்து நீ சிரிக்கும் சிரிப்பில் ..
தொலைந்து போகிறது எனது துன்பம் ...
மகனே .

13
துள்ளி குதித்து விளையாடு ..
அப்பா மேல் வேணாம் மகனே ..
தரையில் என்கிறேன் சிரிக்கிறான் .
கண்களை சிமிட்டி என் மகன் .

14
அப்பா தூங்கிட்டு இருக்கிறார் ...
கூச்சல் போடாமல் விளையாடுங்கள் ..
பிள்ளைகளை அதட்டி வைக்கும் அம்மா ..
தன் கணவன் உறக்கம்.. தனக்கு முக்கியம் ..
மனைவிக்கு ....மகனே .

15
உன் நடையில் ......
என் தாத்தாவின் மிடுக்கு ....
உன் பேச்சில் .... என் அப்பாவின் சாயல் ...
உன்னில் என்னைக்காண...
உன் மகன் வரும்வரை ...
காத்திருப்பேன் மகனே .

16
உழைத்த களைப்பில் ..
முதுமையின் பிடியில் ..
மனம் சோர்த்து போகையில் ..
என் தோளில் கை போட்டு ...
என்னப்பா யோசினை என்று ...
என் மகன் கேட்கையில் தான் ...
நிமிர்த்து பார்க்கிறேன் என் விதை ...
விருட்சமா  நிப்பத்தை வியப்புடன் ....
நான் .
மகனதிகாரம்..!

மனச்சுவர் ...!

பேசாத வார்த்தை நொடியில் ...
கரைந்து போனது என் வலி ...
மவுனம் என்னை மவுனியாக்கி ..
வேடிக்கை பார்க்குது மனவெளியில் ..
எதிர் திசை நீ வரும் போதும் ..
உன்னை தொட்டு வரம் காற்று ...
உன் மனக்கணக்கின் எண்ணம் சொல்லும் ..
ஆனாலும் நான் மவுனமா ..
என்னை கடந்து போகையில் ..
நீ வீசி செல்லும் விழி  கேள்விகள் ..
என் இதயத்தை ஒருமுறை உசுப்பும் ..
ஆனாலும் நான் மவுனமா ..
உன்னை அறியா வயதில் பார்த்து ...
தெரியாத காதல் மொழி பேசி ..
இன்று காதல் வயதில் காணும் போது ..
கலங்குதடி கண்கள் இரண்டும் ...
நான் சொல்ல வரும் ஏக்கம் ..
உனக்கு வலிதரலாம் ஆதலால் ..
நான் மவுனமா ....
ஒரு வேலி ...ஒரு ஓணான் என..
பேசி திரிந்த அழகிய காலம் ..
மீண்டும் வராது என தெரிவதால் ..
இப்பொழுதும் நான் மவுனமா ...
காதல் எம்மை பிரித்ததா அல்லது ...
களமும் ...சூழலும் சுற்றி விட்டதா ..
யார் அறிவார் உன்னை மீண்டும் ..
காணும்போது கணவனுடன் வருவாய் என..
என் மனசுவரில் ஒரு ஓரமா ..
நீ இருப்பதால் உன்னை கடந்து ..
போகிறேன் நான் மவுனமா .

சொன்னா கேளுங்கடாப்பா ..!

காலை நாலரைக்கு அடிக்கும் முதல் விசில் கேட்பதுக்கு சந்தர்ப்பம் இல்லை நித்திரை அமுக்கி வைத்து இருக்கும் அதுக்கு பிறகு இரண்டாவது விசில் இரண்டுதரம் பறக்கும் திடுக்கிட்டு முழிச்சா அவன் அவன் இது என்ட இது உண்ட என்று இழுபாடு நடக்கும் பொழுது வெளிக்கும் வெளிச்சத்தில் இதால நாங்க எப்பவும் கலட்டி மடிச்சு தலைமாட்டுக்கு கீழவே வைத்து படுக்கிறது ..எழும்பின வேகத்தில் நித்திரை வெறியில் மாறி மாறி எடுத்துக்கொண்டு ஓடினா வரிசை கட்டி நின்று நம்பர் சொல்லிட்டு அவர் அவர் தங்கள் குழுக்களுடன் தங்களுக்கு கொடுத்த கிணத்தடிக்கு போனா வாளி சண்டை நடக்கும் சரி ஒருத்தன் குளிக்க பக்கத்தில நின்று குளிப்பம் என்றால் மற்றவன் காலுக இருப்பன் அங்கால போடா என்று வாளிய விட்டா அது கீழ உள்ளவன் தலையில விழும் ஐயோ என்று அவன் காத்த இவன் திரும்பி வாளியை போட்டுட்டு என்னடா என்பான் மறுபடியும் கத்துவான் காலில விழுந்திட்டு என்று இப்படி அக்கப்போர் பட்டு குளிச்சு ..முகம் கழுவி வந்து டீ குடிச்சு ஓட தொடங்க இரண்டு பேர் குறையும் எங்கடா என்று கேட்ட ஒருவனுக்கு காச்சல் ..மற்றவன் வயித்தை கலக்குதாம் என்று போயிட்டான் என்பான் உடனம் வாத்தி சொல்லும் ஆக்களை உடனம் கூட்டி வா பம்மி பழகீட்டு என்று பேச்சு விழும் அப்புறம் மெடிசின் காரன் வந்து இல்லை உண்மைக்கும் காச்சல் என்று சொன்னதான் சரி என்று விடுபடும் ...

அதிலும் ஒரு நக்கல் குருப் இருக்கும் என்ன வெங்காயா காச்சலா என்று கேட்கும் ..இல்ல மச்சி நேற்று அவன் கிச்சின் பக்கம் போகவில்லை என்று பின்னாடி இருத்து மற்றது குரல் கொடுக்கும்... காச்சல் காரன் கடுப்பாகி இரடி உனக்கு இருக்கு ஒருநாளைக்கு என்பான் ...என் மச்சான் ஆமி அடிக்க என்னை விட்டுடு ஒடுவியே என்பான் அடுத்தவன் இப்படி காலை பொழுது பெரிய கலகமா தொடங்கம் பாசறையில் இப்படி கூடி இருந்து விட்டு வேலை நிமித்தம வேறு வேறு இடத்துக்கு போனா சிலவேளை எங்காவது கண்டால் உண்டு அல்லது காணாமல் போனதும் உண்டு நினைவுகள் மட்டும் மனங்களில் நிழல்லாடும் ..

இப்படி இருந்த சந்திரன் திருகோணமலை பிறப்பிடம் கெட்டிக்காரன் எதிலும் ஒரு அசாத்திய வேகம் ஒருவர் ஐந்து நிமிடம் செய்யும் வேலையை அவன் மூணு நிமிடத்தில் செய்வான் அது ஒரு பரபரப்பான ஆள் எதவது நொண்டிட்டிட்ட்டு  இருப்பான் சும்மா இருக்க மாட்டாம் மிக சிறந்த ஒரு வேவுக்கரன் பல கள அனுபவங்களை கொண்டவன் அவன் ஜெய சுக்குறு புளியங்குளத்தில் வைத்து தளபதி தீபன் மறித்து சண்டை பிடித்த வேளை இவனுடைய அணியே முன்னரங்க வேவு வேலைகளில் இடுபட்டு இருந்தது தண்ணியில படுத்து கிடந்தது வேவு பார்த்திட்டு விடிய நடந்து வருவான் விறைத்து போய் நடுங்கி... என்னடா அவனுகள் சேற்றில் இறங்க மாட்டனுகள் அதுதான் நல்ல கவர்... என்று கிழக்கு போராளிகளின் கதை மொழி அழகா இருக்கும் பெண்பிள்ளைகள் நெஞ்சளவு தண்ணியில் ரைபிளை தோளில் வைத்து சென்ரி பார்ப்பதை பார்த்துட்டு வந்து கவலை படுவான் இவனுகளை அடிச்சு பின்னுக்கு தள்ளவேணும் பாவம்டா பிள்ளைகள் ஈரத்தில் நிக்குராளுகள் என்று சொல்லும்போது தன்னை அறியாமல் அவன் முகம் மாறி இருக்கும் இந்த முறை உள்ளுக்கு போறன் வந்து காட்டுறன் யார் என்று ....

அதன் படி பின்னணி வேவு தகவல் எடுப்பதுக்கு சந்திரன் ...மணி ..சீலன் என மூவரும் அழைக்கபட்டு பாதை குறித்து கொடுத்து விட்டு ஜெரி அண்ணை சொன்னார் காடு பாதை மட்டும் பாவிக்க வேணும் எந்த காரணம் கொண்டும் ஒற்றையடி பாதை ...வண்டில் பாதை பாவிக்க கூடாது சொன்னா கேளுங்கோ ஓகே கவனம் அவன் கண்டா அலேட் ஆகிடுவான் முக்கியம் உருமறைப்பு விளையாட்டு வேணாம் மணிக்கூடு எலாம் எல்லாம் நிப்பாட்டு வேக்கி இத்தினை மணிக்கு மட்டும் ஒன்னுக்கு வரட்டும் மற்றும்படி நிப்பாட்டு சரி ..இரவு இறங்கிட்டு காலை லையினுக்கு வாங்கோ எங்க நிக்கிறியள் என்று  கொம்பாஸ் ...மேப் ...சாப்பாடு ..மருந்து ..எல்லாம் பார்த்து எடுத்து வையுங்கோ என்று சொல்லிட்டு போக இங்கால நடக்கும் தம்பியல் அண்ணன் வவுனியா போறன் என்ன வேணும் ஒரு லிஸ்ட் தாங்கோ என்று போன ஜெரி அண்ண திரும்பி பார்த்து சிரிச்சிட்டு போவார் அடங்க மாட்டன் இவன் என்று ..

அன்று பின்னேரம் செக்கள் பொழுதில் வெளிகிட்டு மூவரும் போக அதில் சீலனுக்கு சிங்களம் கொஞ்சம் தெரியும் அவன் படுவான்கரை பெடியன் பாதை பிடிச்சு இறக்கி விட்டுட்டு திரும்பி வந்து இருந்து கைகாட்டி போகும் அவங்க நினைவுகளை பேசியபடி அன்றைய இரவு பொழுது போகும் .....

மூவரும் காட்டில் நடந்து களைச்சு போக கொஞ்ச தூரம் வண்டில் பாதையால போவம் என்று யோசனை தோன்ற வேகமா நடக்கலாம் என்று எண்ணத்தில் நடக்க முன்னணி பாதுகாப்பு ஆமியிட்டா மாட்டிடாங்க படுத்து கிடந்தவன் சிங்களத்தில் யார் என்று கேட்க முன்னுக்கு போன சீலன் காமினி என்று ஒரு சிங்கள பெயரை சொல்லிட்டு நடக்க சந்தோகம் கொண்ட ஆமி பாதுகாப்பு விசையை கீழே தட்ட சத்தம் இவர்கள் காதுக்க வர சுடப்போறான் என்று எண்ணியபடி அவனை நோக்கி வேகமா சுட தொடங்கிய சீலன் மச்சான் கவர் எடு என்று கத்தியபடி சுட்டுக்கொண்டு முன்னாடி ஓட இடையில் வந்த சந்திரன் சீலனுக்கு அடிச்சுட்டு பின்னுக்குவா என்றபடி பின்னோக்கி வர நிலைமை மாறிட்டு கால் இடுக்குக்கு நடுவால் போன ஒரு ரவை சந்திரனின் விதையை தாக்கி போயிட்டு ஓடியவன் மணி என்னால எழாமல் இருக்கு இருக்க போறன் என்கிறான் ...

இல்லை சந்திரன் கொஞ்சதூரம் உள்ள போட்டு இருப்பம் சந்திரனுக்கு வெடி பிடித்தது மணிக்கு தெரியாது இல்லடா இரத்தம் வருது வெடி பிடிச்சிட்டு எங்க என்று தெரியவில்லை தலை சுத்துது என்கிறான் திரும்பி மணி பொறு என்று தனது ரைபிளை தோளில் கொளுவிட்டு சந்திரனின் ரைபிளை ..கோல்சர் எல்லாம் கலட்டி தான் கொழுவிக்கொண்டு அவனை தூக்கி தோளில் போட்டு நடக்கிறான் பொறு மச்சான் பெரிய தூரம் இருக்காது போயிடலாம் என்று இரத்தம் வரும் இடத்துக்கு பஞ்ச்சை வைத்து கட்டுவம் என ஒரு இடத்தில் இருந்து ஆடைகளை களைந்தது பஞ்சை வைத்து கட்டிவிட்டு இனி கடினம் என தெரிந்த சந்திரன் சொல்கிறான் விடிய சிலவேளை கிளியர் பண்ண ஆமி வருவான் நீ போ இந்தா கொம்பாஸ் இதில நூற்றி எண்பதை குறை நாங்க வந்த பாதை பிடிக்கும் நீ போடா என்கிறான் ..


மணி சொல்கிறான் நான் போய் ஆக்களை கூட்டி வரான் நீ அவசரபட்டு ஒரு முடிவும் எடுக்க வேணாம் குப்பிய கலட்டி தா இல்லடா நான் அப்படி ஒன்றும் செய்ய மாட்டம் முடிச்சா கூட்டிவா சிலவேளை கிளியபன்ன வாறவன் கண்டா குண்டை கலட்டி வைப்பன் அப்படி இல்லாட்டி இருப்பன் நீ முதல் போடா என்று மணியை அனுப்பி விட்டு தன வேதனையை தாங்கி ரைபிளை அணைத்தபடி சந்திரன் இருப்பதை பார்த்து கண் கலங்கியபடி முன்னணி நிலைக்கு வந்து சேர்த்தான் மணி ...நடந்தவற்றை பொறுப்புக்கு சொல்ல உடனம் தீபன் அண்ணையின் இடத்துக்கு பொறுப்பாளர் கூடி போய் பிரச்சினை சொல்ல தீபன் அண்ணை உடனம் சந்திரனா அவன் எங்களுக்கு மிக தேவையான ஆள் அவனை வெளியில எடுப்பது முக்கியம் என்று செயலில் இறக்குகிறார் எந்த லையினுக்கு கிட்டவா எவ்வளவு தூரம் இருக்கும் என்று எல்லா விபரமும் கேட்டுவிட்டு இரவு இறங்குங்கோ என பகுதி தளபதிகளுக்கு தகவலை அனுப்பி தனது பிரதான இடத்துக்கு அழைக்கிறார் அனைவரும் கூடி முடிவெடுத்து இரவு ஒரு மணிக்கு உள்ள போங்கோ ஒரு கொம்பனி போங்கோ போய் வெளியில நிலைஎடுங்கோ ஏழு பேர் மட்டும் உள்ளே போங்கோ தூக்கிட்டு வார சாக்கு கொண்டு அப்படி அவன் கண்டா அடிச்சு வெளியில வாங்க காணாட்டி பிரச்சினை இல்லை அப்பன் ...

இவ்வாறு ஒழுங்கு படுத்தி இரவு நகர்வு செய்ய படுகிறது பட்டு வேலி பக்கத்தில் அணிகளை நிலையெடுக்க வைத்து விட்டு உள்ளே போன ஏழு பேரும் சுருள் கம்பி வேலியை கடக்கும்வரை நெஞ்சு படபடப்பு காணக்கூடாது அவனை எடுத்து வரும் வரை  கண்டால் சிக்கல் ஆகிடும் என்று மிக மிக அமைதியா அவதானமா உள்ளே போன அணி வெற்றிகரமா அவன் இருப்பிடம் போக அவன் குறை மயக்கத்தில் முனகியபடி இருக்கிறான் அப்படியே தூக்கி சாக்கு கட்டிலில் போட்டு மீள தொடங்கிய அணி தகவல் தருது வேலி பிரிக்காமல் கொண்டுவர முடியாது கிட்டவா வந்து சொல்லுறம் அடிச்சு பிரியுங்கோ என்று உள்ளே போன சிறைவாணன் சொல்ல சரி முயற்ச்சி பண்ணுங்கோ பார்ப்பம் என்று தீபக் மாஸ்டர் பதில் அளிக்க வெற்றிகரமா சந்திரனை கொண்டுவந்து சேர்க்கிறார்கள் அவனின் எல்லையில் இருந்து எதோ எங்களுக்குள் ஒரு பெரிய சாதித்த உணர்வு வென்று விட்டம் என்று ...

பின்னர் மூன்றுநாள் சீலன் வருகை எதிர்பார்த்து இருந்து விட்டு வரவில்லை என்பதால் வீரச்சாவா அறிவித்து விட்டு சந்திரனை பார்க்க மெடிசினுக்கு போனா குளுக்கோஸ் ஏறியபடி சிரிச்சுக்கொண்டு மச்சான் கலட்டி போட்டாங்க என்று அவனுக்கு உரிய அதே நக்கல் தொனியில் சொல்லி சிரிக்கிறான் காயம் மாறியாவுடன் அவனை அதிகாரிகள் படிக்க அனுப்பி விட்டினம் ஒரு ஆறு மாதம் மேல படிப்பை முடிச்சுட்டு வந்தவன் அடுத்த அணிக்கு மாஸ்டரா இருந்து பயிற்ச்சி கொடுக்க தொடங்கினான் அவனை கண்டால் என்ன மச்சான் சொன்னா கேளுங்கடப்பா கேட்டு இருந்ததா போயிருக்காது எல்லே என்று பெடியள் நக்கல் ..பகிடி என்று போகும் சிரிச்சுக்கொண்டு நலம் விசாரிப்பான் பெடியளை கேட்டதா அடிக்கடி சொல்லி விட்டுவான் அப்படியான ஒரு அனுபவ போராளி தனது மண்ணில் தம்பலகாமம் பகுதியில் வீரச்சாவு அடைகிறான் எதிரியின் சுற்றி வளைப்பை உடைக்க முயன்று ஒரு சாதாரண போராளி மேஜர் சந்திரனா உயர்தத்து அவனுடைய கடின உழைப்பே ..

அவன் வரலாறு அவனின் குள்ளமான உயரம் மாநிற தோற்றம் எல்லாம் அவனை போல எவரை கண்டாலும் அவன் நினைவை கொண்டுவந்து போகும் ஒரு நிழலாக எம்மை சுற்றி நிக்கிறான் அவன் கனவுகள் நிறைவேற வேணும் என்பதே ஒவ்வெரு போராளிகளின் இலட்சியமும் கூட ...தொடர்த்து உழைப்போம் உங்கள கனவுகள் நினைவாகும் வரை தோழர்களே இது சத்தியம்:(

சொல்லணும் போல தோணிச்சு ..!

1996 இடம் பெயர்வு தொடர்ச்சியா இரண்டு தரம் யாழில் இருந்து வந்து சில மாதம் ஆகவில்லை மீண்டும் கிளிநொச்சியில் இருந்து ஸ்கந்தபுரம் ஊடா மல்லாவி என்று வாழ்க்கை பயணம் போகுது அப்ப எல்லாம் அந்த வயதில் எமக்கு அவைகள் ஒரு விளையாட்டு போல புதுசா ஒரு இடத்துக்கு போறம் என்கிற நினைப்பு தவிர அதன் வலிகளை அப்பொழுது புரிய எமக்கான வயதும் அனுபவனும் போதாது தான் ...வளர்த்த நாயை கிளி வரை கொண்டுவந்து சேர்த்த எனக்கு மீண்டும் வேறிடம் கொண்டு சொல்ல முடியவில்லை மனுஷர் போக வழியை கானம் இவன் வேற நாயை கொண்டு திரியுறான் என்று அப்பா பேசிய போது அப்பொழுது வந்த கோபம் இப்ப நினைத்தால் மனம் வலிக்குது பாவம் அப்பா அன்று நான் கோவப்பட்டு இருக்க கூடாது என்று ..எம்மை காப்பதில் தான் அவரின் முழு கவனமும் இருக்கு என்று அப்பொழுது விளங்காமல் போனது வயதால் இருக்கலாம் ...

சரி அப்படி வந்து ஊரில தெரிந்த ஆக்கள் என்று பெயர் சொல்லி முகவரி கேட்டு எதோ ஒரு யுனிட்டாம் அங்க அவரின்  பெயர் சொன்னா தெரியாத சனம் இல்லையாம் என்று மல்லாவி சந்தியில் தேனீர் கடை வந்து இருக்கும் ஒரு கண்டி தமிழ் ஐயா சொல்ல அப்படியே இங்கினியா நேராயிட்டு போயி ஒரு உசக்க வரும் அப்புறம் அப்டியே ஒரு மதவு யிருக்கு அதுக்கு நாலாவது வுஉடு அவாறு வுஉடுதான் ...என்று சொல்லியபடி ஒரு தேனீர் கொடுத்திட்டு காசை வாங்காமல் இல்லை இல்லை மண்ணை விட்டு வாரிங்க உங்கக்கிட பணம் வாங்கினா நல்லவா இருக்கும் என்று சொன்ன அந்த மனிதன் பின்னாளில் எனது முதல் நண்பர் ஆகியது தனிக்கதை ....

நேரா அங்க போய் வாசலில் இறங்கி நின்று அப்பா பெயர் சொல்லி அழைக்க அவரின் மகள் தான் வந்தா அப்பா தோட்டம் போயிட்டார் நீங்க யாரு வாங்கோ இருங்கோ எல்லாம் இறக்கி வையுங்கோ அப்பா வந்திடுவார் என்று சொன்னவள் என் வயதுடன் ஒன்றி இருப்பாள் போலும் எண்ணெய் தேய்ந்த முகம் ...சீவி இழுக்காத தலை முடி நெற்றியில் கீறிய வீபூதி குறி என்று லையிட்டா ஒரு பார்வை பார்த்திட்டு பால் வைக்கிறன் இப்ப குடியுங்க அம்மா வரட்டும் முட்டை காசு வாங்க போயிட்டா என்றபடி குசினி நோக்கி போனாள் ...

நமக்கு என்ன இழவு இது ஒரு பெடியளும் இல்லை போல என்ன பண்ணுறது என்கிற நினைப்பு ....ஆனால் அப்பா அம்மாக்கு என்ன சொல்லுவினமோ ...இங்க கொட்டில் போடலாமா இல்லை என்றால் எங்க போறது என்கிற பிரச்சினை அவர்களின் கதையில் தெரியுது சரி பார்ப்பம் எப்ப சாமான் எல்லாம் இறக்கி வைத்து அவிட்டு எடுத்து என்னுடைய விளையாட்டு பொருள்களை எப்ப வெளியில் எடுப்பன் என்கிற நோக்கம் வேற மனதில் ஓட வெளி கதவு திறக்கும் சத்தம் ...யா யா கீர்ர் ..கீர்ர்  ம்ம் ...........இங்கின...... இங்கின........ வா ..........வா...... என்று தனது வண்டில் மாட்டுடன் கதைத்தபடி உள்ளே வந்தார் சிறி அண்ணை .பார்த்து இருந்த மகள் ஓடி சென்று வாளியில் தண்ணி நிரப்பி எடுத்து வர வண்டிலை குத்து கட்டையில் நிறுத்தி விட்டு மாட்டை அவிட்டு மகளிடம் கொடுத்து தவிடு வை என்று சொல்லியபடி யாரு பிள்ளை வீட்டில் என்று கேட்டுக்கொண்டு தோளில் இருந்த துண்டால் முகத்தை துடைத்தபடி உள்ளே வந்தார் சிறி அண்ணை ..

அப்பாவை கண்டவுடன் அடையலாம் பிடித்த அவர் அண்ணே என்று வேகமா வந்து கட்டி அனைத்து நின்றபோது அந்த கணம் சிரிப்பை வரவழைத்து இருந்தாலும் இப்பொழுது நினைத்தால் மனம் வெம்பி அழும் எனக்கு உறவின் பிரிவும் அதன் அருமையும் அருகில் இருக்கும்போது தெரிவதில்லை எமக்கு ...என்ன அண்ணே பிரச்சனை என்று தெரியும் யாரு நினைத்து நீங்க இங்க வருவியள் என்று ஏன் பெடியள் வெளிநாடு தானே உங்களுக்கு அப்படியே வவுனியா போயிட்டு உள்ள போகலாம் தானே ஏன் இங்க சிரமபட்டு கொண்டு இருக்குறியல் என்று சொன்னவருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை எனக்கு நேர மூத்த அண்ணன் போராளி என்று ...இல்லை சிறி மூணாவது அவங்களோட விட்டுட்டு எப்படி போறது என்று அப்பா சொன்னபின்தான் ஆ அப்படியா கனகாலமா என்றபடி எங்கையும் போகவேணாம் இங்க இருங்கோ என்று சொல்லிக்கொண்டு பாலை தந்தார் கையில் குடியிட்டு குளியுங்கோ பின்னாடி வாய்க்கள் ஓடுது கிணறும் இருக்கு கொஞ்சம் நடந்து போனா குளம் எங்கையும் குளிக்கலாம் என்று சொன்னபோது என் மனம் எங்கும் குளம் ஆகா போயிடவேண்டியது தான் என்று சிறகடிப்பு ..


பின்னேரம் சாப்பிட்டு இருக்க அப்பா பேச்சு கொடுத்தார் எங்க ஒரு சின்ன மூலையில் ஒரு கொட்டில் போட்டு இருக்கலாம் என்று இடம் கிடைக்குமா என்பது போல ..என் வீடு என் ஏக்கர் காணி என்று இறுமாப்பா வாழ்த்த மனிதன் குறுகி நிப்பது அப்பொழுது தேவை ஆகிட்டு என்ன செய்வது அகதி வாழ்க்கை கொடுமை என்பது ஒரு பக்குவ வயதில் தான் புரிந்து போனது எமக்கு ....என்னண்ணை கதை எதுக்கு கொட்டில் மூணு பேர் இருக்க வீட்டில ஒரு அறையில் இருங்கோ அது ஒண்டும் பிரச்சினை இல்லை என்கிறார் கொலனி வீடு என்பது இரண்டு அறை ஒரு வரவேற்ப்பை கொண்டது .....அப்பா மறுக்கிறார் இல்லை அவன் பெடியன் இரவுகளில் எங்காவது போய் வரும்போது வந்து போவான் உங்களுக்கு கரைச்சல் தர விருப்ப வில்லை சிறி பெண்பிள்ளை வேற இருக்கு நாங்க எங்களுக்கு என்று ஒரு கொட்டில் போட்டால் நல்லம் அதுதான் ....சரி அப்படி போடவேணாம் இந்த மிசின் நிக்கும் கொட்டில் இருக்கு இப்ப இருங்கோ பிறகு பார்ப்பம் என்று தனது உழவு இயத்திரத்தை வெளியில் விட்டு எமக்கு இடம் தருகிறார் அந்த மனிதர் ஐந்து வருடம் அங்கேயே இருப்பம் என்று அப்பொழுது நினைக்க வில்லை கொஞ்சநாள் படுத்து எழும்ப ஒரு இடம் என்னும் மனநிலையில் தான் இருந்தோம் திரும்பி போய்விடுவம் என்று ..

பொழுதுகள் விடிய தனிமை அண்ணன் வந்தால் வேக்கியில் பாவிக்காத பற்ரி தருவான் ஏப் எம் கேட்க அவனுக்கும் தெரியாது  எங்க இருக்கிறம் என்று அப்பா அரசியல் துறையில் முகவரி மாற்றி கொடுங்கோ என்று விடிய நான் சொல்லிக்கொண்டு இருக்க அம்மா சொன்னா முதல் பள்ளிக்கூடம் எங்க கிட்ட இருக்கு என்று பார்த்து வாங்க இவனை சேர்க்க என்று நமக்கு உள் மனதில் இப்ப இது முக்கியம் படிப்பு இருக்க இடம் இல்லை என்று நினைத்தபடி இருக்க அந்த பிள்ளை அன்ரி என்றபடி உள்ள வருகுது ....என்ன சமையல் என்று அம்மா கேட்டவா சமான் ஒன்றும்  வாங்க வேணாம் எல்லாம் வீட்டுக்கு பின்னுக்கு உள்ள கொட்டிலில் இருக்கு எடுத்து சமைக்க சொன்னவா விதானை வீடுக்கு போயிட்டா உரம் கொடுக்கிறாங்க பதிய என்று ஒரு முச்சில சொல்லிட்டு போக எங்க அம்மா ஒரு கொஞ்ச வெங்காயம் இவனிடம் கொடுத்து விடு பிள்ளை என்று போடா போய் வாங்கிவா என்று அனுப்ப நானும் பூட்டாமல் கிடந்த சேட் தேறியை ஒருக்கா சரிபார்த்து பூட்டிக்கொண்டு போகிறேன் பின்னாடி ...

அங்கின போனா எல்லா இடமும் மரக்கறி வெங்காயம் கட்டி தொங்குது ...இரண்டு கரையும் நெல்லு மூடை ..வத்தல் அது இது என்று ஒரு சந்தை போல இருக்கு உங்களுகு மட்டுமா இவ்வளவும் என்று முதல் பேச்சை கொடுக்கிறேன் ஓம் என்றபடி ஒரு வெங்காய தொகுதியில் இருந்து ஒரு பிடியை அறுத்து எடுக்கிறாள் கிட்ட தட்ட மூணு கிலோ வரும் அதுதான் கொஞ்ச வெங்காயமாம் இந்த பிடியும் என்று ஒரு மரியாதையை கலந்த குரலில் சொல்கிறாள் நமக்கு அழகி படம் மனத்திரையில் ஓடுது அப்ப அல்ல இப்ப நினைத்தால் ;) ..அப்படியே பின்னாளில் இடம்பெயர்வு வர வர ஓவரு குடும்பமா வந்து வந்து 13 குடும்பம் நாலு ஏக்கர் காணியில் கொட்டில் போட்டு ஒரு முகாம் போல ஆகிட்டு அங்க நான் மட்டுமே சின்னவன் மிகுத்து குடும்பம் எல்லாம் பெரியவர்கள் பெரும்பாலும் பெண் பிள்ளைகள் பின்னேரம் ஆனால் கிளிகோடு ...தாயம் ...காஸ்ட் ...ஒளிச்சு பிடிச்சது ..பேணிப்பந்து என்று கலோபரமே நடக்கும் அந்த கணியில் காலையில் எழும்பி யாரு முதல் நித்திரை கொள்பவர்களுக்கு தண்ணி ஊற்றி எழுப்புவது என்று தொடங்கும் சகோதர யுத்தங்கள் அக்காவா ..தம்பியா ..அண்ணனா ..தோழியா ...நண்பனா என்று பல உறவு ஒரு கூட்டு கிளிகளா வீட்டில் சாப்பிட வேணும் என்கிற நினைப்பு இல்லை எங்க நிக்கிறமோ அங்க சாப்பிட்டு வளர்த்த காலம் அது ...

பின்னாளில் தாண்டிக்குளம் பதை திறப்பு எல்லோரும் கொஞ்சம் கொஞ்சமா போக தொடங்க பிரிதல் ..அழுகை ..சோகம் ..மீண்டும் பிள்ளைகள் வாழவேனும் அங்கால போனா கலியாணம் எதாவது கட்டி வைத்து விடலாம் இங்க இருந்து என்ன பண்ணுறது உழைப்பு பிழைப்பு இல்லாமல் என்கிற வசனமே அதிகமா கதையில் இருக்கும் ..அப்பத்தான் வானம் பாடி என்று ஒரு ரோடியோ இருந்தது உமா சந்திரன் சிவலோகநாதன் என்று ஒரு ஆள் மொக்கை போட்டுகொண்டு இருப்பா கலையில் தொடங்கும் ''வெள்ளி சிறகடிக்கும் வெண்புறாவே இன்னும் நீ வரவில்லையோ வெண்புறாவே''' என்கிற பாட்டு வவுனியாவில் இருந்து ஒரு மாற்று இயக்கம் நடத்திய வானொலி அது அதில்தான் இரவு நேரம் வவுனியாக்கு உள்ளே போன ஆக்கள் எல்லாம் வந்து சேர்த்திட்டம் என்று தொலைபேசி தகவல் சொல்லுவினாம் பாட்டுக்கு இடையில் இந்த கூத்து நடக்கும் நிங்கள் என்ன சொல்ல நினைக்கிறியள் என்று கேட்டல் அங்க போனவுடன் அவர்கள் உடனம் வாயில இங்கிலிஸ் வந்திடும் வன்னியில் ஐயா அம்மா என்று கதைத்தவ போனில் கதைக்கும்போது .....மாறிடும் எல்லாம் ..

நான் அகிலா பேசுறன் நாங்க சுகமா வந்து சேர்த்திட்டம் உள்ள அங்கிள் வந்து கூட்டிக்கொண்டு போனவர் ஊரில இருக்கும் பெரியம்மா சித்தி மச்சாள் அனைவருக்கும் இதை தெரிய படுத்துறன் நான் பிறகு லெட்டர் போடுறன் எங்க நிவு அட்ட்ராஸ் ஓகே ...சோ நாங்க இப்ப ஓகே நிங்களும் முடித்தா வர ரைபன்னுங்கோ இங்க ஒரு பிரச்சினையும் இல்லை (ஒரு ஐந்து கிலோமிட்டர் கடந்து நின்று கொண்டு போடுற அலைப்பரை அளவே இல்லை எதோ ஐரோப்பா வந்தது போல போனை போட்டு அலட்டுங்கள் ) ஒ அகிலாக்கா பேசுறா எங்களை பற்றி எதாவது சொல்லுவா என்றால் அது நடக்காது இவ்வளவு நாள் அன்பா நேச பாசமா இருந்த மனிதர்கள் தங்களுக்கான பாதுகாப்பு கிடைத்தவுடன் மாறி விடுவது இயல்புதானே ...பின்னாளில் அவர் வானம்பாடி முழுநேர நேயரா மாறி இருப்பா அது வேற கதை ...

இப்படி போராட்ட வாழ்வியலில் தங்களை தங்கள் குடும்பத்தை விட்டு தப்பி பிழைக்க வெளியில் வந்தோரும் உண்டு.. உயிர் போனாலும் இங்கின போகட்டும் அவன் பக்கம் போறது இல்லை என்று பிடிவாதமா இருந்தவர்களும் உண்டு இப்படி ஒரு பல கோணங்கள் உள்ளடங்கிய கூட்டு இனமா இருந்த நாம் எல்லாம் முள்ளிவாய்க்கால் முடிந்து இனி என்ன அப்பாடா என்று இருந்தவர்கள் எல்லாம் ஒரு இழப்பின் வலியும் ..உப்பு இல்லாத அருமையும் வருடங்கள் கடந்து விளங்கி இப்பொழுது ஒருமித்து குரல் கொடுக்கும் நிலைக்கு வந்துள்ளோம் என்றால் எதுக்கு போராடினம் என்பது வானம்பாடியில் பாட்டு கேட்கும் போது புரியவில்லை தப்பி எப்படியாவது இங்கின வாங்க என்று சொல்லும்போது புரியவில்லை இப்பொழுது தன் மகளை ஆமி பார்த்து கண்ணடிக்கிறான் என்றவுடன் வன்னியை தேடுது ஆனால் வன்னி அதே பழைய வன்னியா இல்லை என்பது புரியாத மனது . :(:(

என் அப்பா ..!

அப்பா ஒரு அழகிய சிற்பி..
என்னை செதுக்கிய போது வலித்தது ..
செதுக்கிய பின் என்னை பார்த்தா ..
எனக்கே ஆச்சரியம் அவ்வளவு அழகு ..
பல முரணுக்கு செந்தக்காரர் அப்பா ..
என் பார்வையில் அப்படியே ஆனால் ..
உள்ளாத்தம் என்னை சீர்படுத்தல் என்று ..
எனக்கு அப்பொழுது தெரிய வாய்ப்பில்லை ..
இளமையும் வேகமும் கேட்கும் நிலையில் ..
எனக்கு இருக்கவில்லை அறிவுரை வதையே ..
பொய்சொல்லி பணம் கேட்கும் போதும் ..
சொல்வது பொய் என தெரிந்தும் கண்டுக்காமல் ..
மேலதிகமா தந்துவிட்டு வேளைக்கு வா என ..
சொல்லிவிடும் அற்புத ஜீவன் அப்பா ..
என்ன செய்கிறாய் என்று இன்றுவரை என்னை ..
கேட்டது இல்லை என்னுள் தான் இருப்பதா ..
பலமுறை அம்மாவிடம் சொல்லி இருந்தார் ..
அவன் என்னைபோல எங்கு போனாலும் ..
தன்னை காத்து கொள்ளும் அறிவு இருக்கடி ..
என என் பின்னாடி பெருமை பேசும் இறை ..
கள்ளுக்கு வைத்த காசை பலமுறை ..
களவாடி போயிருக்கேன் இன்று ..
பல போத்தில் வாங்கி கொடுக்கும் நிலை ..
ஆனால் அப்பாத்தான் இறைநிலை ..
ஒரு முறை பலமா அடித்து விட்டார் ..
எண்ணை போட்டு உருவியபடி சொன்னார் ..
இனி என் கை உன்னை தட்டி கொடுக்க மட்டும் ..
உன்னில் படும் மகனே என்று செயலிலும் செய்தார் ..
சும்மா தட்டினா சொரணை கெடும் என்பார் ..
நீ சுயமா சிந்தி நீதான் ராஜா உனக்கு என்பார் ..
பாசத்தை கோவமா காட்டும் தாயுமானவர் .
என் அப்பா .