புதன், 21 ஜனவரி, 2015

கீபோட் போராளி..!

பரணி கபேயை குடித்து முடிக்கும்போது நேரம் எட்டரை காட்டியது வேகமா இன்று வேலை முடிகவேனும் என்னும் மனக்கணக்கில் தொடங்கினான் தண்ணியில் சலாட்டை தூக்கி போட்டு விட்டு ,தக்காளி பழத்தை எடுத்து எட்டா வெட்ட தொடங்க ,சவா(நலமா) என்று கேட்டபடி செப் உள்ளே வந்தான் . உய்(ஓம் ) என்று சொல்லின்கொண்டு சலாட்டை வெட்ட தொடங்கினான் பரணி இன்று பின்னேரம் வேளைக்கு போகவேணும் ,அதனால் இப்பவே கூட எல்லாம் செய்து வைத்தால் வேளைக்கு இறங்கலாம் என்னும் எண்ணோட்டத்தில் வேகமா வேலை செய்ய தொடங்கினான் ..

நாலு ,மணிபோல குகன் வருவான் ஆளை ஏரியாவில் சந்தித்து விட்டு போனா இரவு வளைச்சு அடிக்கலாம் ஆளுக்கு இண்டைக்கு எப்படியும் ஆளை தப்ப விடக்கூடாது அவருக்கு சொறிக்கதை ,வேலை முடியும் நேரம் குகன் தொலைபேசியில் மச்சி நான் வந்திட்டன் ஏரியாக்கு நீ எப்ப வருவா ,இந்த உடுப்பு மாத்திரன் இப்ப வருவான் நில்லு போயிடாத ;என்று சொல்லிக்கொண்டு சப்பாத்தை கட்டிக்கொண்டு ஜக்கெட்டை எடுத்து கொளுவினான் ...
வணக்கம் மச்சி எப்படி சுகம் வேளைக்கு வந்திட்ட போல ,ஓம் மச்சான் பருவாயில்லை இந்த அண்ணையும் வாறன் என்று சொன்னார் அதுதான் கொஞ்சம் நேரத்தோட வந்திட்டன் ,ஓ யாரு இவர் புதுசா கிடக்கு ஒருநாளும் காணவில்லை ஆளை ,ம்ம் நீ கண்டிருக்க மாட்ட இப்பத்தான் ஊரில இருத்து வந்தவர் முதல் இயக்கத்தில இருத்து கடைசி சண்டையில காயப்பட்டு ,பிறகு பிடிபட்டு உள்ளுக்கு இருந்து வெளியால வந்து இப்ப ஒரு கிழமை முதல் தான் இங்க வந்து சேர்த்தவர் ,ஓகே ஆள் எங்க ஆளத்தான் அப்ப ...

சும்மா இருடா அவர் இயக்கத்தில பெரிய பொறுப்பில் இருத்த ஆள் பழைய சண்டைக்காரன் , எங்கட கதைகளை ஆளோட கதைக்காத பிறகு கதை பொத்தி அடிக்கும் ,சரி சரி எங்களுக்கு தேவையான விஷயம் இருத்தல் எடு அங்க போட்டு ,முழங்க நல்ல வரவேற்ப்பு இருக்கும் தெரியும் தானே உனக்கு ,ம்ம் அது பிறகு பார்ப்பம் இப்ப என்னமாதிரி ஆளை இரவு கூப்பிட்டு அடிப்பமே ...

அதுக்குத்தான் வந்தது ஒரு ஒன்பது மணிக்கு தொடங்கு நான் கரிகாலன் தம்பியால வாறன் ;நீ ஈழ வேங்கையாள வா சரியா இண்டைக்கு ஒரு கை பார்ப்பம் ,அவன் ,மற்ற பார்ட்டி தான் நான் இளைவன் அண்ணையிட்ட கேட்டனான் ,அவர் சொன்னார் அவன் ஒட்டுக்குழு ஆள் என்றுதான் உன்னை கேட்டதா சொன்னார் மச்சி ..
முன்னாள் போராளி இவங்கள் என்ன கதைக்கிறாங்கள் என்று தெரியாமல் நெக்டோ சோடாவை குடித்தபடி என்னடாப்பா இங்கயும் சண்டையா ,எதாவது இயக்க நிர்வாக பிரச்சினையா ஏன் இதுக்கு எல்லாம் நீங்கள் போறீங்கள் அப்பு கவனம் ,சும்மா வெளிநாட்டில் வந்து எங்கட சனத்துக்கு ஏதாவது செய்ய முயற்ச்சி பண்ணுங்க ;எனக்கு சகோதரம் வெளிநாடு நான் வந்திட்டன் அப்படி இல்லாமல் எத்தினை போராளிகள் அங்க இன்னும் கஷ்டப்படினம் ,இல்லை அண்ணே இது வேற பிரச்சினை அப்படி ஒன்றும் இல்லை ...

சரி மச்சி வீட்டுக்கு போயிட்டு போன் பண்ணு நான் சாப்பிட்டு வர சரியா இருக்கும் என்று சொல்லிக்கொண்டு பரணி ரயில் தரிப்பிடம் நோக்கி நடந்தான் ,மனம் எல்லாம் அவனை இன்றையோட ஒடப்பண்ணனும் துரோகி ஆக்கினா சரி ,பிறகு அவருக்கு ஒரு ஆதரவும் இருக்காது என்று தனக்குள் சொல்லிக்கொண்டு போக ,தம்பி குகன் ஒரு படம் எடுத்துக்கொண்டு போவம் ,நாளைக்கு வீசா அலுவல் பார்க்க வேணும் ,சரி அண்ணே பக்கத்தில தான் போயிட்டு போவம் என்று இருவரும் நடக்க தொடங்கினர் ..

அண்ணே நீங்க இயக்கத்தில எத்தினை சண்டை போனநிங்கள் ,எங்க எங்க போனநிங்கள் என்று பேச்சை கொடுத்துக்கொண்டு நடந்தான் குகன் , அதை விடு தம்பி சும்மா எல்லாத்துக்கும் போய் இருக்கிறன் ,இங்க எப்படி வீசா போட்டா கிடைக்குமே எனக்கு காயங்களை பார்த்து புலி என்று சொல்லி நிராகரிக்க மாட்டினமே தம்பி ,இல்லை அண்ணே இங்க இரவு கோழி களவுக்கு போய் முதுகில கம்பி கிழிச்சவன் எல்லாம் தான் புலி என்று சொல்லித்தான் வீசா எடுத்து வைத்து இருக்கிறாங்க ..
பரணி வேகமா சாப்பிட்டு மடிக்கணணியை தூக்கி மடியில வைத்தபடி குகனுக்கு போனை போட்டான் மச்சி எங்க வந்திட்டியா வீட்டுக்கு என்று ,ஓ இப்பத்தான் மேல ஏறிக்கொண்டு இருக்கிறன் படியால என்று மூச்சு வாங்கியபடி கதைத்தான் குகன் ,அண்ணே பார்த்து வாங்கோ காலும் ஏலாது பிடிச்சு நடவுங்க என்று பின்னாடி வரும் பழைய போராளி அண்ணைக்கு சொல்லிக்கொண்டு வீட்டு திறப்பை எடுத்து கதவில் செருகினான் குகன் ..

ஒரு டீ குடிப்பம் போடவா அண்ணே என்று கேட்டுக்கொண்டு இருக்க இல்லை அப்பு அதிக சீனி சேர்க்க கூடாது காயத்துக்கு பிரச்சினை இன்னும் இங்க மெடிகல் காட்டும் இல்லை ,நீங்க குடியுங்க எனக்கு வேணாம் என்று சொல்லிக்கொண்டு சோபாவில் சாய்த்தார் ,முன்னாள் போராளி தம்பி நீர் எங்கையோ ஒன்பது மணிக்கு போறான் எண்டு சொன்னீர் போகவில்லை போல ,இல்லை வீட்டில் இருந்துதான் அது கதைப்பது அண்ணே போறது எல்லாம் இல்லை ,ஆ எதோ சண்டை என்று எல்லாம் சொன்னியள் அதுதான் நான் பயந்து போனன என்று சிரித்தார் அவர் ...

பரணி மீண்டும் போன் பண்ணி எங்கட ஆள் நிக்கு வா வா குடுப்பம் ,நான் கரிகாலன் தம்பியை இறகிட்டன் ;ஏன்டா கோமான்சுக்கு லைக்கு பாயுது அவரை துரோகி என்று சொல்லி குடுத்துக்கொண்டு இருக்கிறன் நீ ,வா ஈழ வேங்கை ஐடியால அவர் ஒட்டுக்குழு ஆள் என்று எல்லோரும் நம்பிட்டினம் என்று மூச்சு விடாமல் வேகமா கதைதான் பரணி ..

இவ்வளவு நேரமும் வரும்போது அவரின் கதைகேட்டுக்கொண்டு வந்த குகனின் மனதில் எவ்வளவு தியாகம் எப்படியான உயிர் கொடுப்புகள் ,அவர் உடலில் உள்ள காயம்; இதை எல்லாம் நாம் பேஸ்புக்கில் ஒரு போலி பெயரில் நானே செய்வது போல நானே அங்கு சண்டையில் நின்றது போல எழுதி நாலு லைக்கும் ,என்னையும் போராளியா புலியா பார்க்கணும் என்னும் எண்ணத்தில் எழுதி என் பெயர் புகழுக்கு அலைத்து இருக்கிறேன் என்று மனதில் உள்ளே எண்ணி வெட்க்கபட்டான் குகன் ...

புலிக்கொடியை பிடித்து ,மடித்து போர்த்து எல்லாம் படம் எடுத்து போட்டால் என்னையும் புலியா நினைப்பினம் என்னும் எண்ணமே இருந்தது, ஆனால் ஒரு நாள் புலியா வாழ்த்து இருந்தால் இந்த வெந்து சினிமாத்தனமான செயலுக்கு வெக்கப்பட்டு இருப்பேன் ,இவ்வளவு கள அனுபவும் உள்ள இந்த அண்ணன் சாதரணமா சொல்லுறார் ,அவரளிடம் ஒப்பிடுகையில் நாம் எம் மண்ணுக்கு இன்னும் ஒரு துரும்பை கூட கிள்ளி போடவில்லை என்பதுதான் உண்மை ..

மீண்டும் போன் அடித்தது டீ ஊற்றியபடி நிண்ட குகன் சொன்னான் எடுங்க அண்ணே எடுத்து இஸ்பிக்கரில் விடுங்க என்று ,அவரும் இணைப்பை எடுத்து இஸ்பிக்கரை அமத்தி விட ,மச்சான் ஓடுவா மகிந்தன் அண்ணையும் வந்து நிக்கிறார் இரண்டு பெரும் சேர்த்து கொடுக்கிறம் ஆளுக்கு பதில் சொல்ல எல்லாமல் பார்ட்டி திணறுது ,நீயும் சயிட் சப்போர்ட் தந்தால் ஆள் எங்க போக்ஸ்க்குள் மாட்டிட்டும் இண்டைக்கு செத்தான் என்று சந்தோஷம் மிகுந்த களிப்பில் சொன்னான் பரணி ..

அதை சோபாவில் சாய்ந்து இருந்தபடி புன்சிரிப்புடன் கேட்டுக்கொண்டு இருந்த முன்னாள் போராளியின் மனதில் தீச்சுவாலை சண்டை ஒருநொடி வந்து போனது ,குகன் எதை பேசுவது என்று தெரியாமல் மவுனமா நின்றுகொண்டு இருந்தான் ,மீண்டும் பரணி மச்சி சே செமையா ஆளுக்கு போட்டுகொண்டு இருக்க ப்ரீ வீப்பி கட்டா போயிட்டு சே என்று வெறுப்பா கத்தினான் ,அட பாவிகளா ஈழத்தை இலவச இணைப்பில் எப்படி எல்லாம் பிடிக்கறாங்க என்று மனதில் சிரித்தான் முன்னாள் போராளி ..அதுக்குள் பரணியின் போனை துண்டித்தான் குகன் ..

பரணியில் போன் மீண்டும் அடித்துக்கொண்டே இருந்தது பேஸ்புக் வேணாம் பேக் ஐடியும் வேணாம் ,இன்றில் இருத்தாவது இங்கு வந்திருக்கும் அண்ணைக்கு வீசா எடுத்து கொடுக்கும் வரை ,என் சிந்தனை ஓட்டம் எல்லாம் அதுபற்றியே இருக்கணும் என்று நினைத்துக்கொண்டு அண்ணே உங்களுக்கு உடல் நலம் நல்லா இல்லாட்டி நாளைக்கு வைத்தியரை பார்க்க போகலாம் ,இல்லை அப்பு எனக்கு ஒன்றும் இல்லாமல் எப்படி பார்க்கிறது கொஞ்சம் வலி இருக்கு முதுகு பக்கம் ,பிறகு பார்ப்பம் வீசா போட்டுட்டு ..இல்லை என்னுடைய காட்டில் காட்டலாம் ஒன்றும் பிரச்சினை இல்லை ...

கரிகாலன் தம்பியின் அழைப்பு பேஸ்புக்கில் ஓவர் ஓவர் என்று ஒலித்துக்கொண்டு இருக்க ,குகனின் தொலைபேசி அடித்துக்கொண்டு இருக்க எதையும் கவனிக்காது சமைக்க தொடங்கினான் குகன் ,போலி முகவரியில் ஈழம் பிடிப்பதை விட ஈழத்துக்காக வாழ்த்தவர்கள்,தியாகம் செய்தவர்கள் ,உயிர் கொடுத்தவர்களுக்கு நாலு உதவி செய்தாலே போதும் என்னும் எண்ணத்தில் அவன் முழுமையா தன்னை மாற்றி இருந்தான்.. தம்பி குகன் போன் அடிக்குது பரணியாம் ,அவன் கிடக்கிறான் லூசுப்பயல் விடுங்க அண்ணே என்று திடமா சொன்னான் குகன் .

வியாழன், 1 ஜனவரி, 2015

நீயும் உன் காதலும் ..!

சாம்பலில் இருந்து மீண்டும்.. 
எழுத்து பறக்க நான் ஒன்றும்.. 
பீனிக்ஸ் இல்லை.. 
என் வலுவை திரட்டி... 
பாய்ந்து போகக் கூட .. 
பந்தைய குதிரையும் இல்லை..
சிறுக சிறுக சேர்த்து..
கட்டி எழுப்பிய தேன்கூடு..
என் காதல் வீடு ...
நீ ஒற்றையாளாய் கல்லெறிந்து..
போக எப்படி மனசு வந்தது உனக்கு ..
வரிகளில் ஆழம் புகுத்தி ..
சொல்களில் ஜாலம் காட்டி ..
கவிதை புனையக் கூட ..
கற்று கொள்ளவில்லை நான் ..
உன் உதட்டில் நாண் ஏற்றி ..
வார்த்தை அம்பை இழுத்து ..
எப்படி குறி தவறாது என் ..
இதயத்தில் செலுத்தினாய் நீ ..
உயிர் ஊசல் ஆடும்போது கூட ..
என் மனவானில் நீ..
ஊஞ்சல் ஆடுகிறாய் காதலே .

அவலம் ..!

எல்லாநாளும் போல எமக்கு ..
இன்னாளும் விடிகிறது ..
எல்லோரும் வருகிறார் போகிறார் ..
இன்னும் 
கூரை மட்டும் மேயவில்லை ..
அதனால்
எல்லாநாளும் விடிகிறது ..
நட்சத்திரம் மறையமுன்னே ..
எங்களின் படங்களைக் காட்டிப் பலர்
பணம் பார்க்கிறார் ..

இப்பவும் நாங்கதான் அவர்களுக்கு ..
ஓர் கருவி
கருகிப் போயும் ..
ஊர் எல்லாம் உதவி நிறுவனம் ...
பெயரளவில் மட்டும் எமக்கு ..
யார் எல்லாம் உதவினார் .. ?

வாங்கித் தங்கள் பைகளில் போட்டனர் ..
பதவிகள் பிடித்தனர்
பாவம் மக்கள் ..

பத்து ரூபாவில் ஒரு உரூபாய் ..
தந்துவிட்டு
பத்து முறை படம் எடுப்பர் ..
தாங்கள் சோறு போடுவதா ..
செய்திகள் சொல்வர் ஊருக்கு ..

போரின் அவலமும்
வாழ்வின் வலியும் ..
பலருக்கு வியாபாரம் ஆனது ..

எமக்கு விம்மி அழுவதைத் தவிர ..
இங்கு
எதுவும் இல்லைப் பக்கத்தில் ..
இந்த வருடமாவது
இரக்கம் உள்ளவர் ..வாருங்கள் நேராக
எங்கள் நிலை பார்க்க ..
தாருங்கள்
சதங்கள் என்றாலும் ..
அவர்கள் கைகளுக்கு
உங்கள் கைகளால் கொடுக்க வேண்டாம் ....

அவர்கள்
விளம்பர பிரியர்கள் ...
எங்களை விற்றுத் தங்களை ..
தேசியவாதிகளாக் காட்டுவோர் ..

அவர்களுக்கு இந்தவருடம்மாவது ..
ஒரு முடிவுரை எழுதுங்கள் ..
உதவியை நேரில் செய்யுங்கள் ..
நடிப்பவர் கைகளில் கொடுக்காது ...
அவலங்கள் அகலட்டும்
பிறக்கும் ..
புதிய ஆண்டிலாவது எம் மண்ணுக்கு .