ஞாயிறு, 9 நவம்பர், 2014

சொல்லிடுவன் ..!! (முகடு)

கொஞ்சம் மங்களான பொழுது சூரியன் அப்பொழுதுதான் குளக்கரையின் முடிவில் மீனுடன் பேசிக்கொண்டு இருந்தான் தலையில் கொஞ்ச விறகு கட்டைகளை சுமந்தபடி மணியக்கா வேகமா குளக்கட்டின் விளிம்பில் நடந்தபடி இருந்தார் .... மேச்சலுக்கு போன லட்சுமி வீடு வரமுன் போகவேணும் என்னும் வேகம் மட்டும் மணியக்கா கண்களில் குடிகொண்டுள்ளது தான் போக கொஞ்சம் சுணங்கினாலும் களனி தண்ணியை தட்டி ஊற்றி முற்றம் எல்லாம் சேறா ஆக்கி போடுவாள் என்று சேலை தலைப்பை இழுத்து செருகிக்கொண்டு நடந்தாள் மணி ...

அந்த அந்திசாயும் பொழுதுதான் கண்ணனுக்கு பிடிச்ச பொழுது குளக்கரை ஆலமரம் எப்பொழுதும் தனியா வந்து இருத்து ரசிப்பது அவனுக்கு ரொம்ப பிடிக்கும் தனிமையில் இருக்கும் பொழுதுகளில் அவனின் சிந்தனை எல்லாம் எதிர்காலம் எப்படி அமையும் என்பதே ..ஆனால் அவன் அருமையா கவிதை எழுதுவான் அவன் தனது பாட கொப்பிகளில் கடைசி பக்கம் கிறிக்கி இருக்கும் கவித்தைக்கு அவனுடன் படிக்கும் பெண் தோழிகள் அடிமை எனலாம் ...

மணியக்காவின் வேகமான நடை கொஞ்சம் மெதுவா ஆகி தனது கண்களை குளக்கரை ஆலமரம் நோக்கி விட்டார் யாரு அது இந்த செக்கள் பொழுதில் இதில் இருப்பது என்று யோசிச்சபடி கண்ணனின் சைக்கிளை விறகு சுள்ளிகளின் முடிவுகள் தட்டியபடி ஒரு ஒலியை எழுப்ப கண்ணன் பாய்த்து சென்று சைக்கிளை ஒரு கையால் பிடித்து சரி பருவாயில்லை போங்கோ அக்கா என்கிறான் ..

மணியக்கா சிறு மூளை பொறி தட்டுது இவன் இந்தநேரம் இங்கின இருக்கிறான் அவருக்கு தெரியாது அவன் தினம் இந்தநேரம் இங்கு இருப்பவன் என்று கண்ணன் யோசிச்சான் சரி முடிச்சுது சும்மாவா சொல்லிடுவா இப்ப நேர்ல வேற கண்டிடா சொல்லமால் விடுவாவா ....இல்லை அவா அப்படியான ஆள் இல்லை என்றவாறு தன் மனத்தை தேற்றிக்கொண்டு குளத்தின் வடக்கு அலைகரை நோக்கி தன் பார்வையை திருப்பினான் ...

மணியக்கா போவது திரும்பி ஒருக்கா பார்ப்பது என்று ஆழ்த சிந்தனையில் இடதுகரையால் இறங்கிகொண்டு இருந்தார் ...இந்தநேரம் பார்த்து மங்கையும் ஊரில இல்லை இவன் கண்ணன் எப்ப ஊருக்கு வந்தது என்றுகூட மணிக்கு தெரியாது எல்லாமே குழப்பம் மணிக்கு ஏனெனில் கண்ணனின் அம்மா மேட்டுக்குடி கொஞ்சம் ஜாதி திமிர் அதிகம் கண்ணன் இங்கின நின்றால் எவளையாவது விரும்பி தொலைப்பான் என்று அவர் அவனை பட்டணம் அனுப்பி இருந்தார் .....
கண்ணன் எதிர் பார்த்தது போல அவள் தான் வந்துகொண்டு இருத்தாள் கட்டில் இருந்து எழும்பிய கண்ணன் தேவி நில்லு கொஞ்சம் பேசணும் என்று வழிமறிக்க அவளே தன் இரட்டை பின்னலில் ஒன்றை எடுத்து முன்னாடி விட்டபடி போனாள் ...தேவி சொல்லிடுவன் என்று அன்று நீ சொல்லிட்டு போனது பொய்யா ஏன் இப்படி என்னை கஸ்படுத்திர சொல்லு அல்லது சொல்லிடு உன் முடிவை என்று சினிமா கதாநாயகன் கணக்கா வசனம் பேசி முன்னாடி போனான் கண்ணன் ....

விறகை தலையில் இருந்து சரித்து தரைக்கு போட்டாள் மணி அப்படியே சேலை தலைப்பை எடுத்து முகத்தை துடைத்தபடி அங்கும் இங்கும் சுற்றி ஒரு பார்வை வைத்தால் லட்சுமியை காணம் எங்க போட்டாள் இன்னும் வீடு வராமல் காலையில் பால் வேற கொடுக்க வேணும் வாத்தியார் வீட்டுக்கு என்று முணுமுணுப்பு செய்தபடி வேலி ஓரம் கண்களை விட்டாள் மணி ..
இன்னும் நீ முடிவு சொல்வதா இல்லை தேவி நான் திரும்பி போகவேணும் அதுக்குள்ளே சொல்லிடு என்று அவளின் துப்பட்டாவில் கைகளை மெதுவா உணர விட்டான் அவள் பட்டென துப்பட்டாவை இழுத்து தோள்களில் போட்டபடி உங்களுக்கும் எங்களுக்கும் ஆகாது தெரியும் எல்லே பிறகு எதுக்கு திரும்ப திரும்ப வந்து நின்று கேட்கிறியள் சொல்லுங்க என்று கூறி முடிக்க ...
மணியக்கா குளக்கட்டில் ஏறவும் நேரம் சரியா இருந்தது அட பாவி பயல் அப்பன் கண்டால் கொண்டு போடுவான் எல்லே எதுக்கு இந்த தினவெடுத்த வேலை என்று எண்ணிக்கொண்டு அவர்களை கடக்க கண்ணன் சொன்னான் மணியக்கா இந்த பிள்ளையை ஒரு முடிவு கேட்டு சொல்லுங்க நான் கண்ணாலம் கட்டி பட்டணம் போறதா இருக்கு இவா வந்தா நான் நாளைக்கு கூட்டி கொண்டு பட்டணம் போயிடுவன் என்ன ஏது என்று கேட்டு சொல்லுங்க அக்கா ....
எண்டா அப்பு இந்த உயிர் என் உடம்பில உயிர் இருக்கிறது உனக்கு பிடிப்பு இல்லையா நான் லட்சிமியை தேடிவந்தா இங்க மூதேவி குறுக்க நிக்கு என்று பட்டும் படாமல் சொல்லிட்டு அவர்களை கடந்தார் மணியக்கா ...


பார்த்திங்கள் தானே சொல்லிடு என்று கேட்டிங்கள் இதுக்கு என்ன சொல்லப்போறியல் என்று விடுகதை போட்டால் தேவி ..எனக்கு தெரியும் அவா இப்ப வீட்டுக்கு போய் சொல்லத்தான் போறா அதுதான் நானே முன்னம் சொல்லிட்டன் என்று கண்ணன் அவளின் கண்களை உற்று பார்த்தான் அவளின் கண்ணில் மெதுவா காதல் எட்டி பார்த்தது இருவர் கண்ணிலும் சூரியன் கீழ் இமைகளில் இறங்கிக்கொண்டு இருந்தார் ..
எப்படியும் அவள் காதலை சொல்லிடுவாள் .

ஒரு இரவு யானையுடன் ...!

வாழ்வின் மரணத்துக்கு பக்கதில் இருந்து திரும்புதல் என்பது இப்பொழுது சுகமான மீட்டலா இருந்தாலும் அவ்வேளைக்ளும் அந்த தருணங்களும் படபடப்பானவை ஒவ்வெரு நொடியும் பொழுதும் பக் பக் என வாங்கும் மூச்சை வேகமா விடவும் முடியாமல் அமைதி காப்பது என்பது அதை விட கொடிது ..

அவ்வாறு அனுபவித்த ஒரு சம்பவத்துக்கு உங்களை கூட்டி போகலாம் வாருங்கள் ..

பயிற்ச்சிகள் முடித்தா வேளை மூன்று அணிகள் பிரித்து இரண்டு இரவுகள் காட்டில் மறைந்து வாழ்வெனும் ஒரு அணி அவர்களை தேடி மிகுதி இரண்டு அணியும் செல்ல வேணும் கண்டு பிடித்தால் பிடித்து வந்து தண்டனை கொடுக்கலாம் எப்படியும் என்று சொல்லி ஏழு ஏழு பேர்களா பிரித்து குலுக்கள் முறையும் தெரிவு நடக்கு முதல் அணியே எங்கள் அணி தலைமறைவு ஆகணும் இரண்டு இரவு இன்று பின்னேரம் நீங்கள் போகலாம் உங்களுக்கான உலர் உணவு ...ஒரு சோறு பை தயார் எடுத்துட்டு கிளம்புங்க என்று மாஸ்டர் மார்ஷல் சொல்லிட்டு சொன்னார் இங்கிருத்து நீங்கள் ஆறு கிலோமீட்டர் சுற்றுக்குள் நிக்க வேணும் சரியா என்று ஓகே அனைவரும் தங்களின் குடிலுக்கு வந்து அனைத்து பொருள்களும் எடுத்து வைத்துகொண்டு கிளம்பு தயார் ஆனோம் ...

எங்களில் ஒருவன் இருந்தான் நிரந்தர இடமா ஸ்கந்தபுரம் மணியம் குளம்  என்னும் இடத்தில் பிறந்தவன் சிறு வயது முதல் வேட்டை காடு என்று திரிபவன் அவனுக்கு கொம்பாஸ் இல்லாமல் எங்க போக வேணுமோ அங்க சும்மா நடந்து போவான் அது எந்த ஈறல் காடா இருந்தாலும் சரி அவனுக்கு கை வந்த கலை தான் நடந்தால் காடு விலத்தி கொடுக்கும் என்று சொல்லுவான் இசையாளன் எப்பொழுதும் எங்கள் அணியில் இருப்பதால் கொஞ்சம் நம்பிக்கை அதிகம் எமக்கு ..

சரி சாயங்காலம் ஒரு ஐந்து மணிக்கு பின் நாம் மாஸ்டருக்கு என்ன பகையில் போகுறோம் என்று தனிமையில் சொல்லி விட்டு கிளம்பி போனோம் பனிச்சம் குளம் மேற்கா இப்படியே நேர போனா தேராம்கண்டால் காடு வரும் அதுக்கு இடையில் நாம் எங்காவது தங்கிட்டு திரும்புவம் என இசையாளன் முன்னே சொல்கிறான் இரவு பொழுது மங்க தொடங்க காடு தன் இருளை வாங்கியது கைகள் எட்டும் துரத்தில் வாருங்கள் என்று சொல்லிக்கொண்டு சில் வண்டுகளின் ரீங்காரம் கேட்டபடி நாம் கால்கள் படும் இடங்களில் இருந்து ஓடும் உயிர்கள் சாகாமல் சருகுகள் குலையாமல் நடக்க வேணும் காரணம் நாம் போகும் தடம் எங்களை பின்தொடர உதவும் என்பதால் ....

அப்படியே போய் ஒரு சிறிய நீர் தேக்கம் கிட்டவா போயிட்டம் கடும் இருட்டில் இவ்வளவு நேரம் நடந்தால் எத்தினை கிலோமிட்டர் என்று ஒரு கணக்கில் இங்கின ஒரு இடத்தில் தங்குவம் என்னும் முடிவில் ஒரு சூரை பத்தை பக்கத்தில நிக்கிறம் நல்ல இடம் அப்படியே தடவி கீழ இருங்கோ என்னும் கட்டளைக்கு இருந்தம் இப்ப பொழுதை போக்குவம் எப்படியும் நாளைக்குதான் காலை அவங்கள தேடி கிளம்புவாங்கள் அதுக்குள்ளே நாங்க ஒளியும் இடம் தேடி பிடிக்கலாம் என்று சொல்லியபடி ஆளை ஆள் பக்கத்தில் இருந்து பழைய புதுக்கதை என்று தூக்கம் இல்லாத இரவு விடிந்தது முதல் நாள் .........


ஓகே தம்பிகள் உங்களை தேடி இரண்டு அணியும் கிளம்பிட்டு பிடிபட்டால் பச்சை மிளகாய் தீத்துவாங்கள் கவனம் என்று தொடர்பில் சொன்னார் மாஸ்டர் இருந்த இடத்தில் இருந்து இன்னும் கொஞ்சம் நடந்து அங்கும் ஒரு சூரை பத்தையுடன் கூடிய பெரிய பாலை மரம் அருகில் ஒரு முதிரை ஓகே நல்ல இடம் என்று கொண்டுவந்த படுக்கை யூரியா பையை விரித்து போட்டு ஆளை ஆள் உள்ளே நுழைந்து பக்கம் பக்கமா கிடந்து உலர் உணவை சாப்பிட ஒருவன் அதுக்குள் கிடந்த பேரிச்சம் பழம் சாப்பிட்டு கொட்டையை ஏறிச்சு போட்டான் பக்கத்தில் இருந்து எங்க விழுகுது என்று பார்த்து கொண்டு இருந்து விட்டு இருநாடான் கேட்டான் மச்சி நாளைக்கு ஐந்து பேரிச்சம்பழம் போட்டது எங்க ஐந்து கொட்டையும் என்று வாத்தி கேட்டா எப்படி கொடுப்ப என்று தடார் என்று எழும்பி ஓம் மச்சான் மறந்து போனேன் எங்கடா விழுந்தது என்று உள்ள சருகு குப்பை எல்லாம் ஒரு அலசு அலசி களைத்து போனான் அமரன் சரி விடு எனக்கு உன் பையில் இருக்கும் லட்டை கொடு நான் உனக்கு ஏறிச்ச கொட்டையை தாரன் என்று பேரம் பேசி வாங்கினான் நாடான் ஒரே சிரிப்பு ஒரு அதுக்கு பிறகு அவனுக்கு பெயர் பழம் ஆனது ....

சரி சத்தம் வேணாம் இனி எல்லோரும் ஒவ்வெரு பக்கமா பாருங்கோ அவதானம் ஆளுக்கு ஒரு திசையை பிடித்து அவதானியுங்கோ ...எங்காவது அவங்கள் வரும் சருகு சத்தம் கதை கேட்குதா உன்னிப்பா பாருங்கோ இன்று இரவும் சமாளிச்சா போதும் என்னும் நினைப்பில் மெதுவா இருள தொடங்கிட்டு ஓகே மச்சான் அவங்கள் இனி பிடிக்க மாட்டங்கள் என்று சொல்ல அமரன் சொன்னான் சிலவேளை எங்காவது பக்கத்தில வந்து கிடந்திட்டு இரவுதான் அடி விழுகுதோ தெரியவில்லை எதுக்கும் ஒருக்கா ஒரு சுற்று சுற்றி வந்து பிறகு படுப்பம் ஓகே என்று சந்தேகத்தை தீர்த்து போட்டு உறங்கு நிலைக்கு தயார் ஆனோம் ....

முதல் நாளும் பகிடி பம்பல் என்று கதையுடன் போனதால் எல்லோரும் வேகமா உறங்க தொடங்க ஒருவனை சென்றி விட்டு மிகுதி ஆறும் நித்திரை போக ஒரு சாமம் கடந்து இரண்டு மூணு மணி இருக்கும் படார் என்று ஒரு மரம் முறியும் சத்தம் மிக அருகில் சென்றிக்கு இருந்தவன் டேய் எழும்புங்கடா என்று கத்திய கணத்தில் எல்லோரும் கும் இருட்டில் என்ன என்று ஆளை ஆள் முழிக்க எங்களுக்கு மிக அருகில் யானை ...

பெரு மூச்சு ஆளை தூக்கும் அளவு கேட்குது முடிச்சுது கதை கூட்டமா வேற வந்திருக்கு எது எங்க காலை வைக்கும் என்று தெரியாது இருட்டில் எது எங்க நிக்கு என்று வேற தெரியாது இசையாளன் சொன்னான் பயப்பிட வேணாம் ரைபிள் வாசனைக்கு கிட்டவா வராது அது பத்தடி தள்ளித்தான் நிக்கு வெடி வைக்க வேணாம் இடம் தெரியும் கத்தி கித்தி சத்தம் போட்டியல் அது எங்காவது கலைத்து ஓட எங்களுக்கு மேலாலும் ஓடும் நாங்க நிக்கும் இடத்துக்கு கிட்ட எங்கையோ ஒரு மொட்டை இருக்கு அது தண்ணிக்கு வந்திருக்கும் சும்மா இருங்கடா என்று சமதானம் சொன்னான்.... அட பாவி காடு தெரியும் காடு தெரியும் என்று யானை கிட்டவா கூட்டி வந்த இரடி உனக்கு விடிய உயிர் இருந்தா என்று சிறைவாணன் சவால் விட இசையாளன் சொன்னான் புலிகளின் குரல் செய்திகள் யானை மிதித்து லெப் சிறைவாணன் சாவு டேய் சிரிக்க முடில வயிறு கலக்குது உனக்கு பகிடி கேட்குது என்று இரண்டு பேச்சு விழுந்துது இசையாளனுக்கு மச்சான் கட்டான் கொண்டுவந்து விட்டன் பாரு சும்மா இரு பாலையை கட்டி பிடி என்றான் அமரன் ..........

மூச்சும் சத்தமும் யானை எங்களை விட்டு போற பிளேன் இல்லை போல அதுக்கு விரும்பிய மரம் அல்லது அறுகம்புல் கண்டுட்டு போல நிலவு தாழ தான் போகும் சும்மா இருங்கடா என்று இசையாளன் பேசுவது எவனும் கேட்பதா இல்லை யானை திரும்பும் சத்தம் கால்கள் கீழே கிடக்கும் தடிகள் சுள்ளிகளில் பட்டு அவை நெருங்கும் சத்தம் எல்லாம் ஒரு எ ஆர் ரகுமானை கண்ணுக்குள் கொண்டுவரும் மாட்டினா உங்க எலும்பும்  இப்படித்தான் நொறுங்கும் மச்சி அப்படியே பின்னாடி போவம் வேணாம் காத்து வழம்  எங்கட வாடை யானைக்கு இன்னும் பிடிக்க வில்லை இப்படி இருங்கோ சிலவேளை எங்களில் வாடை பிடித்தால் அது மிரள தொடங்கும் சும்மா இதிலையே இருங்கோ ......அட இவன் எங்களை வைத்து யானை ஆராய்ச்சி பண்ணுறம் போல எல்லாத்துக்கும் கதை சொல்லுறான் பாரு டேய் மம்மில் பிள்ளையார் என்று ஒரு பிள்ளையார் இருக்கிறார் அவரை கும்பிடு யானை உனக்கு கிட்டவா வராது அது சரி இவ்வளவு நேரம் நீ அவரையா கும்பிட்டு கொண்டு எங்களுக்கு கதை சொன்னனி என்று சிறைவாணன் சொல்லிட்டு சொன்னான் அந்தாள் ஆமி வந்தவுடன் இடம் பெயர்த்து போயிட்டார் அதுக்கும் நீ மணியம் குளம் வைரவரை கும்பிடும் என்று ...

இழவு வேட்கி வேலை செய்யுது எடுக்கவா வேணாமா வாத்தி தொடர்பில வேணாம் சுணங்கி எடுப்பம் சென்ரி இருக்கா என்று பார்க்க தான் ஆள் எடுக்குது பிறகு எல்லோரும் நித்திரை என்று நாளைக்கு பத்து ரவுண்டு ஓட விடும் அதுக்கு யானை மிரிச்சாலும் பருவாயில்லை போடா என்று விட்டு தொடர்பை எடுத்தான்... சொல்லுங்கோ பெடியள் ஓகேயா என்ன செய்யுறாங்கள் சாப்பிட்டவங்களா கொண்டுபோன தண்ணி காணுமா எல்லோருக்கும் என்று கேட்டுட்டு கவனம் பாம்பு ...பூரான் சரிடா தம்பியல் நாளைக்கு சந்திப்பம் என்று அணைத்தார் தொடர்பை... மச்சி வாத்தி வேற இந்த நேரம் அன்பா கதைக்குது என்ன சிக்கல் நல்லதா தெரியவில்லை எனக்கு ....போடா அவரு பயிற்ச்சி செய்யும் மட்டும்தான் ஆள் இறுக்கம் மற்றும்படி சுப்பர் ஆள் என்று அமரன் ம்ம் சாகிற நேரம் வாத்திக்கு சான்றுதல் கொடுக்கிறான் இவன் என்று ஆளை ஆள் கடி ........

ஒரு பொழுதா இரண்டு மணித்தியாலம் யானையும் நாங்களும் ரவுண்டு கட்டி கொஞ்சம் கொஞ்சமா ஓய்வுக்கு வந்தம் சத்தம் குறைய தொடங்கிட்டு அப்படியே இந்த யானை தென்னியம்குளம் ஊடா போகும் இது அதுகிண்ட வழமையான பாதை எடா என்று தன் காட்டு அனுபவத்தை வைத்து சொன்னான் இசையாளன் ...அந்த மணித்தியாலம் ஒரு நொடியும் கடந்த நேரம் என்பது மிக மிக கொடுமை எனலாம் இருட்டில் அடுத்த காலடி எங்க மேல கூட இருக்கும் என்று கழிந்த நொடி பொழுதுகள் இன்றும் நினைக்கும் பொழுதுகளில் ஒரு முறை கலங்கடித்து செல்லும் ...

இசையாளன் சொன்னான் நானும் எங்க அப்பாவும் ஒரு முறை தனியன் யானையிடம் மாட்டி தப்பி வந்தனாங்கள் இது கூட்டமா வரும் யானை ஆக்களுக்கு ஒன்னும் பண்ணது ...அது சரி நாங்க உன்னிடா மாட்டினது போல என்று சொல்லுற என்று பழையபடி சிரிப்புக்கு வந்தான் சிறைவாணன் .

விஷேட வேவு புலிகள் ...!

இருளுக்குள்ளும் நிழலை தேடியவர்கள் ...
கண்ணி வெடிகள் விதைத்த வயலில் பாதை தேடியவர்கள் ..
 
சன்னங்கள போகும் உயரம் அளத்தவர்கள் ...
கந்தக பொதி சுமந்து வந்தோருக்கு பாதை காட்டியவர்கள் ..
 
ஓடும் பாதையில் இருக்கும் தடைகள் அறிந்தவர்கள் ...
கம்பி வேலியின் எண்ணிக்கை தெரிந்தவர்கள் ...
 
பலமான  இடத்தில் பலவீனம் தேடியவர்கள் ..
தலைவன் சொல்லும் பாதையை எடுப்பவர்கள் ..
 
வெடி விழுந்தாலும் கதறி அழாதவர் ...
தோழனுக்கு சைகையால் ஓடிடு என்று சொன்னவர்கள் ...
 
குண்டை  கழட்டி தன்னுடன் அணைத்தவர் ...
எதிரி நெருக்கி திருப்ப எமனாகி போனவர்கள் ..
 
தங்களின் பணியை தரவுடன் தந்தவர்கள் ...
தலைவன் சொல்லுக்கு தலைசாய்த்து நின்றவர்கள் ..
 
தாக்கும் இறுதி கணம் வரை ரகசியம் காத்தவர் ...
வெற்றி களிப்பிலும் இணையாது விழி முடியவர் ...
 
உறங்காத கண்மணிகள் இவர்கள் உறங்காது இருப்பார்கள் ..
தேசம் மீட்க்கும் நாள்வரை இலக்கை தேடுவர் .