வியாழன், 31 அக்டோபர், 2013

சீ ...தனம் எதுக்கு உனக்கு ஆண்மையே .!!

சீ.. தனம் என்னும் அறையில்
பூட்டப்படும் கன்னிகள் பல ஆயிரம்
ஓதிடும் மந்திரம் பொய்யாகி போகும்
தர்மத்தை மறந்து நீ வாழ்வே ..
.
புரட்சி செய்பவர் நாங்களே
ஆதாரம் பல உண்டு பூமியில்
வேதனைப் பிடியில் வாழ்க்கை ஏன் ?
நீ பூட்டினை உடைத்திட வேண்டும் ..

ஜாதிகள் சொல்லி தரம் பார்த்து ஊரினில்
அவர்கள் உயர்ந்து நின்றனர் சமத்துவம்
சொல்லி இவர்கள் இருக்க
சத்தம் இல்லாமல் மனங்களை கொன்றனர் ...

புரட்சி குணம் கொண்டு ஒரு மாற்றம்
சீ....தனம் கொடுப்பதில் கொண்டுவா
ஈழ விழுமியம் காத்திட பேணிட நீ .
ஆங்காரம் கொண்டு உன்னை மாற்றிக்கொள் ..


பென்னும் பெருளும் வாழ்க்கை என்றால்
ஆண் அவைகளை கட்டிட்டு அலையட்டும்
நான் முதிர்கன்னியா வாழ்ந்திட்டு போகிறேன்
என்னில் தொடங்கட்டும் முதல் புரட்சி ..

திங்கள், 7 அக்டோபர், 2013

உன் மாமி காத்து இருக்கா என் அம்மாவா .!

என் வீட்டுக்கு வா
வாசலில் கோலம் இல்லை
கண்ணாடியில் பொட்டு இல்லை
காலையில் கால்கொலுசின் ஓசை இல்லை
என் வீட்டுக்கு வா ...

நிலா முற்றம் வெற்றிடமா இருக்கு
முற்றத்து மாமர ஊஞ்சல் ஆடாது நிக்கு
குயில் இப்பொழுது எல்லாம் கூவுவது இல்லை
ஒரு கிளிமட்டும் கிளையில் சோகமாய்
என் வீட்டுக்கு வா ...

அம்மா எப்பொழுதும் விரதம் ..
கோயிலில் நித்தம் தீபம் ஏற்றியபடி
பூசுமஞ்சள் வாங்கி வைத்து இருக்குறா
சோப்பில் வாசனை கூடியதும் இருக்கு
உன் வரவுக்காய் அடி என்னவளே
என்னோடு வா என் வீட்டுக்கு பெண்ணே ..

சீயக்காய் அரைத்து முழுகி உன்
தலைவாரி தூபம் காட்டி பின்னல் இட்டு
அதில் மல்லிகை வைத்து அழகு பார்க்க
உன் மாமி காத்து இருக்கா என் அம்மாவா
என்னோடா வா என் வீட்டுக்கு காதலியே .

புதன், 2 அக்டோபர், 2013

சூரிய தேவனின் தம்பி .!

புலிகள் போராடியபோது நான்
அவர்களுடன் நிற்கவில்லை என  தெரியும்
எதை விட்டுக்கொடுக்க முடிந்ததோ அதை
உயிரை கொடுத்துதான் போராடினோம்
எவற்ரையும்  விட்டுக்கொடுக்க வில்லை

அப்படி  விட்டு கொடுத்து இருந்தால்
எப்பவோ அழிந்து இருப்பம்
இது தான்  உண்மை
இது தான்   நடந்தது

எவரும் வன்னியில் வேடிக்கை
பார்க்கவில்லை எல்லைப்படை
துணைப்படை என குமரி முதல்
கிழவி வரை போராடிய மண்

விட்டிருக்கக்கூடாது என்றும்
விட்டுக்கொடுக்காததை விட்டு பிடிக்கலாம்
என்றும் தோன்றும் ஏனெனில்
அனைவருக்கும் போர் பயிற்சி
சண்டை அனுபவம் இருந்தது

காரணம் எவரும்   வெளியில்  நிக்கவில்லை
அதோடு பயணித்தவர்கள் வன்னி மக்கள்
பொறுப்புடன் கருத்துச்சொல்ல நான் சு இல்லை
ஒருவருடைய  எழுத்துக்களை  வைத்தே
அவர் எங்கு நின்றார் என சொல்ல முடியாது


கேபி  என்ற  முன்னாள் போராளி
சரணடைந்தது
முள்ளிவாக்காலுக்கு முன்பா........???
பின்பா ..........???
அதுவல்ல கேள்வி தலைவர் அவரை
வெளியுறவு செயலரா நியமித்தது
முள்ளிவாய்க்காலுக்கு முன்பா பின்பா

இப்படி ஆயிரம் கேள்விகளுடன்
எமது தேசியம் நகருது
ஒருவன் நான் பிரமா என்றால்
மற்றவர் நான் விஸ்ணு என்பார்

எமக்கு தெரியும் இங்கு யாரு நாரதர்
என வேளைவரும்போது நாம் சிவனாக
உருவெடுப்போம் அப்பொழுது இருக்கு
ருத்திரதாண்டவம் .

செவ்வாய், 1 அக்டோபர், 2013

கேட்கிறவன் ...........!

ஜனநாயக வழி நின்று நெடுநாள் போராடி
எம் தலையில் காலிமுகத்தில் சாணி பூசி
உருட்டி பிரட்டி எடுத்து எள்ளி நகையாடி
சிங்களம் மகிழ்ந்து இருந்த போது...

கேட்க நாதியற்று கேட்பார் எவரும் இன்றி
எம்மை காக்க எவர் வருவார் என
தந்தை செல்வா ஒரு மொழி ஒருஇனம்
என தமிழ்நாடு ஓடி ஐயாமாரை எம் ....

நிலை சொல்லி அழ அவரோ தன்னிலை
சொல்லிவிட்ட வரலாறு எம்மிடம் இருக்கு
நானோ இறையாண்மை அடிமை
நீயோ இன்னொரு அடிமை உனக்கு...

என்னால் என்ன செய்ய முடியும் என விளக்கம்
சொல்லி கை கழுவி விட்ட கதை நினைவிருக்கு
எமக்கு காலம் கடந்தது வர எமக்கான கனவை
சுமந்த ஒரு வீரன் வர நாம் பட்ட மகிழ்வு அளவில்லை..

தம்பியா வந்த அண்ணன் பின் தானை தலைவனாய்
வளர்த்த கரிகாலன் எம் இனத்தின் விடிவெள்ளி
எம்மை ஒரு பாதையில் ஒளியுடன் கூட்டி போன
வழிகாட்டி தான் நேசித்த மண்ணை மக்களை கட்டி
காத்த வரலாற்று நாயகன் ஈழம் என்னும் ஒரு தேசம்..

உலக வரைபடத்தில் உருவாக நின்ற ஒரு நாயகன்
மக்களில் இருந்து புலிகளை உருவாக்கி புலிகள்தான்
மக்கள் மக்கள்தான் புலிகள் என முழங்கிய தேசியத்தின்
தலைவனை அவர் பின்னால் சென்ற மக்களை...

இன்று 30 வருடம் வராதவன் 3வருடம் முன்வந்தவன்
பூனை என்கிறான் இடத்தை நிரப்ப முடியாது என்கிறான்
ஈழப் பெண்ணை விதைவைப் பெண்ணை மணப்பேன்
இலை மலர ஈழம் மலரும் என்றான் நடந்தது வேறு ...

புலித்தடைக்கு அனுமதி கொடுத்த சபாநாயகர்
காளிமுத்து பெண் கைபிடித்து இந்திய..
இறையாண்மைக்கு கட்டுப்பட்டு அரசியல்
நடத்தும் பயல் எம தமிழ் தலைமைகளை....

பூனை என்பதா முன்னம் பெரியார் பேரன் என்றார்
இப்போ பெரியார் தெலுங்கன் என்றார் அவரின்
அரசியல் சாசனம் இந்திய இறையாண்மைக்கு
உள் பட்டவேனே கட்சியில் உறுப்பினர் ஆகலாம்..


என்று இருக்க கனடாவிலும் ஐரோப்பிலும்
கிளை எதுக்கு டொலர்பார்க்க யூரோ பார்க்கவா
சிவத்த துண்டு போட்டு விறைப்பா நின்றால்
எம் தலைவன் ஆகமுடியும் என்கிற நினைப்பா
எம் தலைவன் காட்டி போன கட்சி அவர்...

உருவாக்கி போன கூட்டமைப்பு அதை
கேள்வி கேட்கவும் மாற்றி அமைக்கவும்
எமக்கே உரிமை சினிமா கூத்தடிக்கு இல்லை
எம்மை கேள்வி கேட்கும் உரிமை..

பொன்சேகா கோமாளிகள் என்றபோது வராத கோவம்
இப்ப ஏன் வருது விக்கி தமிழ்நாட்டு
அரசியலை சொல்ல இவருக்கு ஏன் வருது கோவம்
இவர்  மட்டுமா அங்கே அரசியல் தலைவர் ...

புலிபோல் சூடு போட்டு கொண்டாலும் பூனை
புலியாக முடியாது மானே நீதான் எமக்கு
அடுத்த காமடியன் பவரே பதவியும் கதிரையும்
வர நீ நாளை நிப்பா திருமாவளவன் நிலைமையில்..
அரசியல் மாற்றும் மாற்ற பண்ணும்..!