வெள்ளி, 6 நவம்பர், 2015

கற்றுக்கொள்ளுதல். .!

கற்றுக்கொள்ளுதல்.

ஒருவரிடம்  இருந்து   கற்றுக்கொள்ள  நிறைய  விஷயம் இருக்கு ,அதிலும்  நமக்கு  மிக மிக  பிடித்த அல்லது  நாம்  மேலாக நேசிக்கும் ஒருவரிடம் இருந்து  கற்றுக்கொள்ளுதல் என்பது மிக அலாதியானதும் பிரியத்துடன்  கூடியதும் அல்லவா ...

அவ்வாறு தலைவர்  பிரபாகரன் என்னும் மனிதனிடம்  இருந்து  கற்றுக்கொள்ள  அவ்வாறே  நிறைய  விஷயம் இருக்கிறது
குழந்தைகளுடன்  இறங்கி  தானும் குழந்தையாகும் குணம்,
எதிரியை மதிக்கும் விதம் ,
மிக  நீண்ட கால  செயற்பாட்டுக்கான தயார் படுத்தல்,
நாளை  என்ன  வேணும்  எமக்கு  என்பதற்கான  சரியான திட்டமிடல்,
ஒவ்வெரு  நிர்வாகத்தையும் திறமையின் அடிப்படையிலும் கெட்டித்தனதுடன் கூடிய செயற்பாடு  கொண்டு  இயங்கும்  ஒருவரை  இனம்கண்டு  கொடுப்பது  பொறுப்பை,
காயம் அடைத்த போராளிகள் சும்மா இருக்க  கூடாது  என அவர்களுக்கான  தொழில் படிப்புக்கள்,
உலங்கெங்கும் இளையவரை  அனுப்பி நாட்டுக்கு தேவையான படிப்புக்கள்,
நாட்டில் பெரும் நிர்வாக கட்டமைப்புக்கள்.

என அவரின் இந்த  போராட்ட கால வாழ்வில்  எதையும்  முடியாது ,தெரியாது ,செய்ய இயலுமா பார்ப்பம்  என்னும் கதைகளுக்கும் சொற்களுக்கும்  இடமளித்தது கிடையாது ,செய் ,செய்து  முடி ,செய்யலாம்  ஒரு   பிரச்சினையும்  இல்லை என்னும் ,நம்பிக்கை  வசனங்களே இருந்தது இப்பவும் பலரிடம் இருக்கிறது .

அவ்வாறு  அவரிடம் இருந்து அவரை   புரிந்து கொண்டு கற்றுக்கொள்ள நிறையவே எங்களுக்கு  இருக்கும் போது,பலர் இணையங்களில் தங்களை போராளிகளாக விடுதலை பற்றாளர்கள் ஆக காட்டி ,அதி  உச்ச விசுவாசிகள் போல தங்களை  அலங்கரித்து எடுத்ததுக்கு எல்லாம் அவனை போடணும், இவனை போடணும் என குமுறுவது  காணும்  போது ஒன்று மட்டும்  புரிகிறது .

இவர்கள் பிரபாகரன்  என்னும் மனிதனிடம்  இருந்து  எதையும் கற்றுக்கொள்ளவில்லை ,மாறாக அவர் கையில் இருந்த ஆயுதம் பற்றியே அறிந்து  கொண்டவர்களாக இருக்கிறார்கள் ,வன்முறை தான் பாதை எனவும் எடுத்தமா  ஆளை  போட்டமா போனமா என்றுதான் பிரபாகரன்  வாழ்ந்தார், என்பதும் தான் இவர்களில்  பிரபாகரன்  பற்றிய புரிதல் தெரிதல் .

அவரிடம்  இருந்த  ஆளுமையை தூர நோக்கு சிந்தனைகளை  புரிந்து கொள்ளவோ ,அறிந்து  கொள்ளவோ இவர்கள்  தயாராக  இல்லை ,இதன்  அடிப்படையில்  தான் இப்படியானவர்களில்  செயல்களால்  தான், பிரபாகரன்  என்னும் மனிதர்  பலர்  மத்தியில்  இன்னும் வன்முறையாளர்  என்னும் வரையறையில்  நிக்கிறார் .

ஆக தலைமை உங்களுக்கு  ஆயுத வழிகளை  மட்டும் காட்ட வில்லை ,மாறாக பல வழிகளை நிர்வாகத்தை கட்டியெழுப்பி நடத்தி  காட்டியவர் ,ஆகவே இவைகளை நீங்களும் தொடர்ந்து செய்யலாம் என்பதுதான் சொல்லவரும் செய்தியாக உள்ளது .

பிரபாகரன் என்றால் துவக்கு தான் என்னும் நிலையை  மாற்றுங்கள் ,அவர் அதை  தாண்டி என்னவெல்லாம்  அங்கு நிர்வகித்தார்  செய்தார் என்று கொஞ்சம்  யோசியுங்கள் ,அவைகளை  மீள எம்மால்  செய்ய  முடியுமா  என  சிந்தியுங்கள் இளையவர்களே .

சரியான ஒரு  தலைவரை, சரியாக பயன்படுத்துவது  தான்,  சரியான பாதைக்கு  வழிவகுக்கும் .

#தலைவரை கற்றுக்கொள்ளுங்கள் .

ஞாயிறு, 1 நவம்பர், 2015

அப்பத்தாவின் நினைவு குறிப்பில்.

ஊரில் வீடு  மேயும்  போது ஓலைகளை  அழகா  அடிக்கி   அடுக்கி ஈக்கால் கட்டி  கொண்டு  வருவார்கள் ,கீழே  நின்று ஓலை எடுத்து கொடுத்துக்கொண்டு #அப்பத்தா  மேச்சலை  கவனிப்பார் ,சிலவேளை  கொஞ்சம்  அதிகமாக  இடைவெளி  அல்லது  நீக்கல் தெரிந்தால் கீழே நிக்கும்  அப்பத்தா  சொல்லுவார் ,டேய் மோனோ அதுக்கு  இடையில் ஒரு  #கள்ளமட்டை  வையடா  என்று ....

சிறுவயதில்  இவைகள்  விளங்குவது இல்லை,  என்ன  "கள்ளமட்டை"  ,நல்ல  மட்டை  என்று  ,எல்லாம்  தென்னம்  மட்டை  தானே ,ஒருமுறை கேட்டபோது  விளக்கமா  சொன்னா  அப்பத்தா ....

படிமுறையா போய்க்கொண்டு  இருக்கும் மேச்சலில் இடையில் சிறு  நீக்கல்  தெரிந்தால் ,அதை மறைக்கவே  இந்த  "கள்ளமட்டை"  வைப்பது ,இந்த  "கள்ளமட்டை"  இந்த   நிரலில்  வராத  மட்டை   என்பதால் அதை  இப்படி  சொல்வது ,அதாவது மேல்மட்டைக்கு  கீழே  வைப்பதால் அவரு  ஒளிச்சு  இருப்பார் ,அதனால் அவர்  "கள்ளமட்டை"  ஆவார் ....

இவ்வாறு வாழ்க்கையில்  சிறு பிரச்சினைகள் வரும்போதும் ,குடும்பங்களில் சிறிய  பிரச்சினைகள் எழும்போதும் இடையில் நின்று  தூண்டி  விடாது ,பிரச்சினையை  பெரிதாக  போகவிடாது வீட்டில்  இருக்கும்  #அப்பத்தா போன்ற பெரியவர்கள் ,ஏதாவது  ஒரு  கதையை  நியாத்தை ,அதுக்கு  தேவைபட்டால்  ஒரு  பொய்யை  கூட  சொல்லி பிரச்சினை  மறைத்து  விடுவார்கள் ,ஆனால்  இப்ப  உள்ள  சமூகம்  அப்படி  இல்லை, இடையில்  "கள்ளமட்டை" வைக்க விடுவதில்லை  ,அப்படியே  வானம் தெரியட்டும்  என  விட்டு இறுதியில்  தலையில்  காக்கை  எச்சம் விழுந்த  பின்புதான் தாம் முன்னம்  அதை  தடுக்கவில்லை என யோசிக்கிறார்கள் ....

எனவே உறவுகளே சிறு பிரச்சினைகள்  எழும்போது வரும் போது ,நீங்களும் ஒரு  "கள்ளமட்டை"  வைக்கலாம் கதை வெளியில் போகாமல் .

வியாழன், 22 அக்டோபர், 2015

வேர் இருக்கு .

கிளைகளை வெட்டி விட்டேன் 
பக்கத்துவீட்டுக்காரன் ஒரே சத்தம் 
காணியை கடத்து கொப்பு வருவதாக 
மீண்டும் மீண்டும் துளிர்த்து 
அத்திசையே  போகிறது  
கொஞ்சம்  யோசிச்சேன் 
மரம் இருந்தால் தானே 
மாதம் மாதம் வெட்டும் வேலை 
நச்சரிப்பு தாங்கும் எண்ணம் இல்லை 
இனி 
ஆதலால் மரத்தை அறுத்து விட்டேன் 
அட  ஆறுதலா அமரும் இடம் 
எந்த போக்கத பயல் வெட்டியது 
பக்கத்துக்கு  வீட்டு  கிழவி இது 
ஒம்மென ஆச்சி என்றால் பேத்தி 
எதிரில் வந்த வேலிக்காரன் 
ஏன் மரத்தை வெட்டினியல் என்றான் 
இருக்கும் போது என்னை 
நீ 
இருக்க விட்டியா இப்ப சோகம் 
வேர்  இருக்கு மீண்டும் துளிர்க்கும் 
கிளை என் பக்கம் வரட்டும் 
பிள்ளைக்கு ஊச்சல் கட்டனும் 
இது அவன் 
சேர்த்து இருத்து கதை  பேசலாம்
இனி  
இது நான் .

புதன், 14 அக்டோபர், 2015

காட்சிகள் பேசும் தருணம் .2






காட்சிகள் பேசும் தருணம் .






வித்தியா வாடாத பூ .

எல்லாம் மறந்தாயிட்டு 
என்றில்லை மறைந்து வாழ்கிறேன் 
சிரித்தபடி கடந்து போகலாம் 
வலி இருப்பது உள்ளே அல்லவா 
இன்ப திளைப்பில் கூட 
ஒன்றிட முடியாத ரணம்
சொல்கொண்டு வருவாள்
சிலவேளை
அரசியல் கொண்டு வருவாள்
பலவேளை
எதிர்காலம் பற்றி அதிகம் பேசுவாள்
முடிவு எடுக்க பேசலாம் ஆனால்
முடிவை எடுத்து விட்டு வந்தால்
தன் முடிவில் முடியும் வரை
பேசுவாள்
விடியோவில் ஆள் தெரியவில்லை
ஆளா முக்கியம் குரல் கேட்குது தானே
பதில் வரட்டும் என்பாள்
எங்க வளைச்சு பந்தை போட்டாலும்
எல்லைகோடுகள் தாண்டி போகும்
நீ ஒருத்தி மட்டும் போது
என்னுள் இருந்த இறுமாப்பு
கதைக்க விடாமல் கதைப்பாய்
இன்று தவிக்க விட்டு போனாய்
நாளை பொழுதுகள் ஒவ்வென்றும்
சர்ப்பம் வாய் தவளைபோல் நாம்
உன் கேள்விகளுக்கு தான் என்னிடம்
விடையில்லை
உன் தீர்ப்பில் மட்டும் என்னிடம் விடையிருக்கு
காலச்சக்கரம் சுழண்டு வரட்டும்
காத்திருப்போம் வன்மத்துடன் மகளே .

ஞாயிறு, 4 அக்டோபர், 2015

ஒரு தலைமையை உருவாக்க வேணும் .

விடுதலைப்புலிகள் என்னும் அமைப்பு ,அதன் தலைவர் பிரபாகரன் வழிநடத்தல் இல்லாமல் போன பின் ,அந்த அமைப்பு அல்லது நாம் தான் புலி என சொல்பவர்கள் பின்னாடி போவதற்கு மக்கள் தயாராக இல்லை என்பதை, இந்த ஈழ தேசியவாதிகள் ,நாம் தான் அடுத்த புலிகள் என சொல்பவர்கள் புரிந்து கொள்ளவேணும் .....

நீங்கள் இனி ஈழ தேசியத்துக்கு உண்மையானவர்களாக ,நேர்மையுடன் உழைக்கலாமே தவிர நாம் சொல்வதை, நாம் காட்டும் பாதையில் தான் இனி ஈழ தமிழர் நடக்க வேணும் என நீங்கள் போடும் கணக்கு தவறு ....

அந்த நேர்மையும் ,உறுதியும் ,கொள்கை பற்றும் பிரபாகரன் என்னும் ஒரு மனிதனுக்கே இருந்தது ,இனி நீங்கள் அவரை உதாரணமாக கொண்டு நடக்க முனையவேண்டும் அதை விட்டு நாம் தான் ஈழ மீட்ப்பர்கள் எங்கள் பின்னாடி வாருங்கள் ,நாம் சொல்வதை கேளுங்கள் ,நாம் எதிர்ப்பவனை எல்லாம் எதிர்த்து நில்லுங்கள் என கட்டளை இடுவதை நிறுத்தினால் நல்லது ...

முன்னாள் போராளிகளாக இருந்தாலும் சரி ,தளபதிகளாக இருந்தாலும் சரி இனி நீங்கள் மக்களில் ஒருவர் ,ஆகவே மக்களுக்கு என்ன தேவையோ அதை செய்ய முனைய வேணும் அதை விட்டு, இப்படி செய் அப்படி செய் என புலம்பெயர்த்து இருந்துகொண்டு நாட்டில் உள்ளவனை மேய்க்கா எத்தனிப்பது பிழையான சிந்தனை .....

அரசியல் போராட்ட வழிகளில் இன்னும் ஒரு பத்து வருடத்தில் ,இதே ஐநா எமக்கு சாதகமா மாறலாம் அதுக்காக இன்னும் உழைக்க வேண்டிய தேவை இருக்கு ,அதை விட்டு அவன் பிழை, இவன் பிழை, அவனை ஆதரி , இவனை ஆதரி ,நாம் சொல்வதை கேள் என்று, அதி உச்ச தேசியவதிகளாக காட்ட நினைப்பவர்கள் நிறுத்த வேண்டிய காலம் இது ....

ஒன்றில் இணைத்து கூட்டு வேலை செய்யுங்கள்,அல்லது ஒதுங்கி ஓரமா இருங்கள் குட்டையை குழப்பி விட்டு வேடிக்கை பார்க்காமல் ,அங்கு துடிப்பது தமிழர் என்னும் மீன்கள் தான் என்பது உங்களுக்கு நன்கு தெரியும் ...
யார் குற்றியாவது அரிசி ஆகட்டும் .

வலி மிகு தருணம் .

மீட்டுக்கொண்டே இருக்கிறேன்
இசையை அல்லா நினைவை
பழையவை தான் ஆனாலும்
அவை விட்டு போன வடுக்கள்
சாகாவரம் பெற்றவை .....

இசை அறிந்து பாடல் சொல்வோம்
ஒரு வயது காலம்
இரைச்சல் வைத்து விமானம் எதுவென
சரியாக சொன்ன காலம் அது
சன்னங்களின் சத்தம் கேட்டு என்ன
வகை ஆயுதம் என கணித பொழுதுகள் ...

இன்று கிண்ணத்தில் விழும் துளி சத்தம்
வெளியில் அடைமழை என சொல்லும்
எண்ணிய எண்ணத்தில் இரத்தம்
இன்னும் உடலில் இருக்குதாம்
சிறு துண்டு குண்டு ...

தாங்கி தாங்கி வலிகளை சுமந்து
தாங்காது என அறிந்தும் வலிமை பெற்று
தங்களுக்கு வாழும் காலம் வந்த போது
தங்களுக்கு வாழ்வில்லாமல் போனதே
இன்னும் துயர் சுமந்து .

வெள்ளி, 14 ஆகஸ்ட், 2015

ஓர் பேரிழப்பும் அதன் உளவியல் தாக்கமும் ... அஞ்சரன் முகடு சஞ்சிகை

வித்தியாவின் இழப்பு என்பதற்கு அப்பால் ,அதில் இருந்து குடும்பம் மீண்டு வருவதும் அல்லது அவள் நினைவில் மண்டு போவதுமாக ,நித்தம் நித்தம் கண்ணீரும் சோறுமாக அவள் பேச்சும் குறும்பும் விளையாட்டு சீண்டலும் என்று ஒரே ஆரவாரம் ,சிரிப்பொலியுடன் இருந்த வீடு இன்று பெரும் சோக முகில்களை தாங்கி இருண்டு எப்பொழும் விம்மி வெடிக்கும் கனத்த இதயத்துடன் ,அன்பான அவளது குரல் இல்லாது செவிகள் இனிமையான ஒலிகளை கூட கேட்க மறந்து கிடக்கிறது ...........
இவற்றுக்கு எல்லாம் அப்பால் அந்த கொடும் துயரின் பிடியின் இறுக்கத்தில் இருந்து தளர்வுகள் வரும் போது எல்லாம் ,சுற்றி உள்ள சமூகம் சரி இணையங்கள் ஊடகங்கள் என்று ஏதாவது ஒன்று ,அந்த ரண வேதனையை மீண்டும் பெரும் ஈட்டி கொண்டு தாக்குவது சொல்லனா துன்பம் ......
தங்களுக்குள் எழும் சுய இன்ப கேள்விகளை வித்தியா என்னும் பிஞ்சின் மீது எறிவதும் கானது என்று அவள் குடும்பம் மீதும் அள்ளி தெளிப்பது கூட ஒரு சில மனிதர்களுக்கு பேரின்பத்தின் திளைப்பை கொடுகிறது போலும் ......
பெற்ற பிள்ளையை பெரும் போரின் பிடியிலும்,பொருளாதார கஷ்டத்தின் மத்தியிலும் தன் நோய் இயலாமையை கூட பொருள் படுத்தாது கட்டைக்கனக்காக சைக்கிள் மிதித்து தந்தை பெரும் கனவுடன் வளர்த்த மகளை ஆளாகி தேவதைபோல் அலங்கரித்து ,தன் சுமைகளை ஒற்றை ஆளா அவள் சுமப்பாள் பாரு என்று செருக்குடன் வாழ்த் அந்த தாய் தந்தை மனநிலை எப்படி துடிக்கும் பதைக்கும் என்று கூட அறியாத சில மூடர்கள் அவர்களை பெரும்பாலும் மனிதர்களாகவே எடுக்க கூடாது ,பிள்ளையின் பிரிவின் ஊடாக உங்களுக்கு வீடு தந்ததாம் காசு தந்ததாம் என்று நலம் விசாரிக்கும் சாட்டில் விடுப்பு கேட்கும் தருணங்கள் உலகில் இவர்களும் வாழ்கிறார்கள் என்றே சாபிக்கும் ....
ஒரு நாள் பொழுது ஓயாது ஒலிக்கும் தொலைபேசியில் ,எவர் அன்பு விசாரிக்க எடுக்கிறார் ,எவர் வம்பு அளக்க எடுக்கிறார் ,எவர் வழக்கின் போக்கை கேட்க எடுக்கிறார் என்று குழம்பியே தொலைபேசியை கையில் எடுக்க வேண்டிய ஒரு பதட்டமான மன சூழலை உருவாக்கி விடுகிறது இந்த நல்ல மனிதர்கள் வேஷம் போடும் அயோக்கியர்கள் கேள்விகள் .........
சங்கங்கள் ,அமைப்புகள் ,நிறுவனங்கள் எல்லாம் உணர்ச்சி பெருக்கில் வித்தியா குடும்பத்துக்கு உதவி செய்கிறோம் என்று அவளின் இறுதி நாள்களில் ஒலிவாங்கி முன் ஓலம் இட்டுவிட்டு போய் விட்டார்கள் .....
அவர்களின் ஓலங்களில் சிக்கி தவிப்பது என்னமோ அவளின் குடும்பமே ,ஊருக்கும் பேருக்கும் புகழுக்கும் வசித்து விட்டு போனவர்களுக்கு தெரியாது ,சுற்றி இருந்து விடுப்பு பார்க்கும் சமூகம் சீட்டு கணக்கு போல் இதை எழுதி வைக்கும் அல்லது மனப்பாடம் செய்யும் என்று .......
அங்கிருத்து இவ்வளவு வந்ததாம் ,இங்கிருத்து இவ்வளவு வந்ததாம் ,அவர் கொடுத்ததாம் இல்லை இவரும் சேர்த்து கொடுத்ததாம் கிட்டத்தட்ட நல்ல காசு வந்திருக்கும் என்று பேசும் ,மனிதர்களாக உலாவும் விஷ ஜந்துக்கள் அறியமாட்டார் அவர்கள் நாளை என்ன சமைப்பார்கள் என்று .......
நித்தம் அவள் பிரிவு கொடுக்கும் வேதனையை விட இந்த பரிகசிக்கும் மனிதர்கள் கொடுக்கும் வலி மிக கொடியது ,வித்தியா குடும்பம் அன்றும் இன்றும் இருக்கும் நிலை ஒன்றுதான் மறுத்தால் இப்பொழுது வித்தியா இல்லை என்பதே தவிர மற்றும்படி அவர்களின் வாழ்க்கை சம ஓட்டமே ,யாழில் ஒரு வாடகை வீட்டுக்கு கூட சிரமப்படும் நிலையில் இருந்துகொண்டு வந்த லட்சங்களை என்ன செய்வார்கள் இவர்கள் என்று பின்னாடியே சுற்றும் பேய்களை என்னவென்று சொல்வது ......
வீடுதரலாம் என்று சொல்பவர்கள் நேரில் போனால் ,ஓ நீங்க வித்தியா குடும்பமா பொலிஸ் கேஸ் விசாரணை என்று ஆக்கள் அடிக்கடி வந்து போவீனம் அதாலால் உங்களுக்கு வீடு தருவது எங்களுக்கு கடினம் என்று சொல்லும் போதும் நாம் இவர்களை நினைத்து கவலை கொள்வதா இல்லை வித்தியாவை நினைத்து கண்ணீர் விடுவதா அதன் மன அழுத்தம் உளைச்சல் எத்தகையது .....
நீதியை கேட்கும் கேட்க போராடும் அல்லது போராடுறம் என்று சொல்பவர்கள் முதலில் ,சம தர்மம் ஊடக தர்மம் கொண்டாவது நீதிக்கு வாய்ப்பு கொடுங்கள் ,நீங்கள் போடும் புகழ் தேடிய வெளிச்சத்தில் வித்தியா என்னும் மெல்லிய ஒளி தெரியாமல் போய் விடும் மனிதநேயத்தின் பெருமான்களே ....
நீங்கலாக வந்து கைகளை கொடுத்து விட்டு ,இதில் எனக்கு எந்த இலாபமும் வாராது எதுக்கு மினக்கேடுவான் என்று நினைத்து ,பொய்களை பலிகளை உதிர்த்து விட்டு ,உங்கள் சித்து விளையாட்டுகளை காட்டி விட்டு நீங்கள் போய் விடுவீர்கள் அடுத்த வருமானம் நோக்கி ஆனால் நாம் அதே திண்ணையில் இருந்து நீங்கள் எங்களுக்கு உதவி என்னும் பெயரில் பெரும் உபாதை கொடுத்ததை நாம் யாரிடம் சொல்லி அழுவோம் ...
ஆகவே மன அழுத்தத்தின் உச்சிக்கு செல்லும் வேளைகளில் ,குற்றம் இழைத்தவர்களை கூட மன்னிக்கலாம் ஆனால் இந்த வீம்பு பேசி விசரை கிளப்பும் மூதேவிகளை கொன்று போட்டால் என்ன என்று மனம் சிலவேளை சந்நிதம் ஆடுவது தவிர்க்க முடிவதில்லை ........
கண்களில் கண்ணீரும் இன்றி இருக்கும் அவர்களை விட்டு விடுங்கள், உங்கள் உதவிகள் என்னும் முள்கள் கொண்டு கீறி கிழிக்காது ,சமூக நீதிகளே.

திங்கள், 8 ஜூன், 2015

யார் நல்லவன்.

யார்  நல்லவன் ...
சிறுகதை (நன்றி முகடு சஞ்சிகை)

மச்சான் டி சொல்லு இதில போட்டு டக்கென்று வாறன் என்று சொல்லியபடி கைபேசியின் திரையில் கைகளை அழுத்தியபடி நடந்தான் ரமேஸ் ,உள்  மனதில் இன்றாவது அரைவாசி  தந்தால் நல்லது வாங்கி  அப்படியே அனுப்பி போடலாம் அப்பாக்கு வேற ஒப்ரேஷன் இருக்கு ,முதல் மாறிய வட்டி காசு வேற கொடுக்க வில்லை திரும்பியும் கேட்டால் எப்படி தருவீனம் என  எண்ணிக்கொண்டு வேகமா நடந்தான் இரயில் நிலையம் நோக்கி .......

இவன் என்னடா  வேலை  முடிய வாடா ஊருக்கு  காசு  போடணும் என்னிடம் விஸா  இல்லை  நீதான்  போட்டு தரனும் என்று சொல்லிப்போட்டு  ,டி  சொல்லு  வாறன் எண்டுட்டு  எங்க போறான்  இவன் என தனக்குள்  கடுப்பாகியபடி  நகுலன் வீதியை அலுப்பா  பார்த்தான் ,வரட்டும் வரவிட்டு டி  குடிப்பம் இப்ப வெளியில நிப்பம் ஏரியாவில்  என்ன  நடக்கு  என்று பார்த்தபடி  என்று   நகுலன் நினைக்க ,அண்ணே நீங்க  வடகாடா என்று ஒருவன் கைகளை  கொடுக்க ஏவியபடி  கேள்வியை கேட்டான் .....

இதில்தானே வாறன்  என்று  சொன்னான்  எங்க  போயிட்டான் என்று மீண்டும் அவன் இலக்கத்துக்கு தொடர்பை கொடுத்தான்  ரமேஸ் ,எதிராளி  அழைப்பில்  வர அண்ணே எங்க நான் கதவுக்கு  கிட்டவா  நிக்கிறன் நீங்க எங்க ,ஓம் தம்பி இந்தா வந்திட்டன்  ரயில்  கொஞ்சமா  சுனங்கிட்டு அதுதான் என்று  வேகமா  வந்து  கைகளை  கொடுத்தார் கஜன் பிறகு எங்கவாது டி  குடிப்பமா என்றபடி கேள்வியை  தொடுக்க .....

நகுலனின்  அழைப்பு  மீண்டும் எங்கடா  நிக்கிற  வருவியா  நான்  போகவா என்றது ,இல்லடா  பொறு  பொறு   ஒரு  ஐந்து  நிமிடத்தில்  வாறன் ஆள் வந்திட்டு இப்ப வாறன் என்று துண்டித்தான்  அழைப்பை ,பிறகு  கஜன் அண்ணே எப்படி  சுகம் கனகாலம் கண்டு ,நான் போன் அடித்தால் கூட  எடுப்பதில்லை  நீங்கள் இல்லையோ  இருக்கோ போனை எடுத்து  கதையுங்கோ அண்ணே அதில என்ன வந்தது என்று  சொல்லிக்கொண்டு சேர்த்து  நடந்தான் ரமேஸ் .........

உனக்கு தெரியும்  தானே  சீட்டுக்காரன் சுத்தி  போட்டான் அதுதான் உண்ட காசு  தரமுடியவில்லை  உனக்கும் கஷ்டம்  ,விஸா  வேற இல்லாமல்  வேலை  செய்கிற காசு அதுதான் எனக்கு  மனசு  கஷ்டமா  போயிட்டு  காசு  கையில  கிடைக்க  கால் பண்ணுவம் என்றுதான்  நான்  எடுக்கவே  இல்லை  இவ்வளவு  நாளும் பிறகு அப்பாக்கு  சுகமா உடல் நிலை .......

நகுலனிடம் கைகளை கொடுத்தவன் உங்களை அங்க  கண்டிருக்கிறன் நீங்க  இன்னாரின் பெடியன்  தானே என்று  விளக்கம் கேட்க தொடங்கினான் ,ஓம்  நீங்க யாரு  என்று எனக்கு  சரியாய் தெரியவில்லை அதுதான் குழப்பம் என்றான் நகுலன் ,அட  தம்பி நீங்க அப்ப சின்ன பெடியல் நாங்க  உங்கட தோட்டத்துக்கு வேலைக்கு வரும் போது  களுஷான் கூட  இல்லாமல் விளையாடிக்கொண்டு  இருந்த ஆள் நீ அண்ணன்  எல்லாம் ,அப்பா அம்மா எல்லோரும் சுகமா அக்காக்கு  கலியாணம்  முடிஞ்சுதா என்று எல்லாம் ,எதோ உரிமை  உள்ளவர் போல கேள்விகள் கேட்டார் அவர் ........

ரமேஸ் உனக்கு அவனை தெரியாது தானே நான் சீட்டு போட்டவனை ,இல்லை கஜன் அண்ணே நீங்க  சொல்ல கேள்வி ஆளை கண்டதில்லை எவ்வளவு காசு கனபேருக்கு  கொடுக்கணும்  போல அப்படியா என்றான் ,ஓம்  தம்பி நாலு  சீட்டுக்கு  மேல எனக்கு  இரண்டு  சீட்டுக்காசு கடைசியா  எடுப்பம் என்று விட்டன் அது  ,எல்லாம்  போயிட்டு இப்ப என்ன  பண்ணுறது அவனை காணவும் இல்லை இப்ப போன்  நம்பர் வேறு மாற்றி போட்டான் என ஆதங்கப்பட்டபடி  மூச்சு விடார் கஜன் ......
நகுலன் கேட்டான்  நீங்க கன   காலம்  வந்து  ,என்ன வேலை  செய்யுறிங்க வீடு எல்லாம் வாங்கியாச்சே என தொடுக்க, இல்லை  தம்பி இப்பவும்  ஒரு  சீட்டுக்காசு வாங்கிற  அலுவலாத்தான்  வந்தனான் இந்த வாறன் என்றான்  ஆளைக்காணம்  போனையும் கானம் ,ஓ பெரிய சீட்டா  சின்ன  சீட்டா  ,இல்லை  சின்ன  சீட்டு தான் அது  எப்பவோ  முடிச்சு  போயிட்டு இன்னும் காசு தரவில்லை தம்பி இழுக்கிறான் வைத்து சுத்து மாத்து வேலை போலத்தான் கிடக்கு ,என்ன  செய்கிறது மெதுவா தான் வாங்கி  எடுக்கணும் ,ஊரா சண்டைக்கு போக இங்க தெரியுமா தானே எவனும் நல்லவன் இல்லை தம்பி கவனம் கொடுக்கல் வாங்கல் எல்லாம் ........
இப்படியே பேசிக்கொண்டு  கஜனும் ரமேசும் நகுலன்  நிக்கும் கடையடிக்கு  கிட்டவா  வர ,கஜனின் முகம் மாறியது  தம்பி  ரமேஸ் இதில இருக்கிற  கடையில்  டி  குடிப்பம் எதுக்கு அங்கின  தூரமா போவான் என்றார் ,இல்லை அண்ணே காசு அனுப்ப விஸா உள்ள பெடியன் அங்கதான் நிக்கிறான் அதுதான் நான் அங்க போகிறேன் என்றன் ரமேஸ் .....

நல்லா பேசிக்கொண்டு இருந்த நகுலன் திடீர்  என்று அவசரமா சரி  அண்ணே நேரம் போட்டுது அவசரமா போகவேணும்  சந்திப்பம் என்று கைகளை கொடுத்து விட்டு வேகமா சந்தியை கடந்து போனான் ,என்னடா நிண்டவாக்கில போறான் ஒரு  பிளேண்டி  கூட  குடிக்காமல் என்று மனதுக்குள் அலுத்துக்கொண்டார்.....
ரமேசுடன் போனால் அவரிடம் மாட்டவேனும் என்ன பண்ணுறது என்று யோசிச்சபடி கஜன் மனம் இன்றி கால்களை மெதுவா வைத்தான் ,காசு வேற கொண்டுவரவில்லை இவன் நான் காசு கொண்டுவந்திருப்பன் அனுப்பலாம் என்றுதான் வாரான் இதில வேற அந்தாள் நிக்கு எல்லாம் சிக்கலா  போகபோகுது  ,என்ன பண்ணலாம்  என்று மனதில் வேகமா கணக்கு போட்டான் கஜன் ......

கடையடிக்கு வந்த ரமேஸ் சுற்றி சுற்றி பார்த்தான் எங்கடா போயிட்டான் இவன் போன் கூட  அடிக்கவில்லை என்று சலித்துக்கொண்டு கைபேசியை எடுத்தான் ,அப்பொழுது அடேய் கஜன் நீ  உயிரோடு இருக்கிறியா என்றபடி ,எட்டி  கஜனை பிடித்தார் சோதியர் விடுங்க அண்ணே கையை என்று தட்டி விட்டான் கஜன் ,என்ன ஏது  என்று  புரியாமல் முழி பிதுங்கி  நின்றான் ரமேஸ் ,நான் ஒன்று வேணும் என்று செய்யவில்லை அந்த வடகாட்டு நகுல் தான் சீட்டு  ஏமாற்றி போட்டான் அவனை சோதியர் அதுதான் பிரச்சினை நீங்க  என்னுடன் பிடித்த  சீட்டு  தரமுடியாமல்  போனது ......
டேய் அவனோ அவன் இப்பத்தான் இதில  என்னோட கதைச்சுக்கொண்டு நிண்டவன்  டக்கென்று  கையை கொடுத்திட்டு போட்டு வாறன் என்று  சொல்லிட்டு இந்தபக்கமா ஓடினான் ,எனக்கு தெரியாது அவன் தான் என்று  அல்லது  ஆளை பிடிச்சு வைத்திருப்பனே என்றார் சோதியர் ...

ஐயோ அண்ணே அவன் தான் நகுலன் எனக்கு காசு போடவந்தவன் விஸா  உள்ள  பெடியன் ,இதில  நிண்டவன் என்று  சொன்னான் ரமேஸ் அட  ஊரில அவன் அப்பனின்  பெயர் விலாசம்  என்ன இவன் இங்க இப்படி ஊரை  ஏமாற்றி திரியுறான் நல்லவன் போல அல்லவா இப்ப பேசிட்டு இருந்தான் சே .....

கஜனுக்கு நகுலன் கொடுக்கணும் ,சோதியருக்கு  கஜன் கொடுக்கணும் இரண்டும் நடக்கணும் என்றால் நகுலன் கஜனுக்கு கொடுக்கணும் ,என உள்ளார  யோசினையில் ஆழ்த்தான் ரமேஸ் காலமுன் சூழலும் ,வேகமா பணக்காரன் ஆகணும் என்னும் வேகமும் எப்படி எல்லாம் சுய கவுரவத்தை  விட்டு  ஏமாற்ற பண்ணுது மனிதரை ,இங்கு யார்தான் நல்லவர்கள் எல்லோருக்கும் பின்னுக்கு ஒரு பெரும் கதை இருந்துகொண்டே  இருக்கும் போல ஐரோப்பா வாழ்வின் சூழ்ச்சிமம் அதுதான் ஆக்கும் என எண்ணியபடி ரமேஸ் கஜனை பார்த்தான் ........

தம்பி கோவிக்காத வேலை சம்பளம் செக் கொடுத்தனான் விஸாக்காரன் இன்னும் காசு தரவில்லை இண்டைக்கு கொண்டுவந்து தாரன் என்றவன் ,அதுதான் நான் உன்னை வரச்சொன்னனான் பொறு அவனுக்கு அடிப்பம் என்று அடுத்த சம்மாட்டி அடியை தலையில் இறக்கினார் கஜன் ....

எதிர் முனையில் அழைப்பு கொடுக்க நேரடியா தொலைபேசி நிறுத்திவைக்கப்பட்டுள்ளது சிறுது  நேரத்தின் பின் முயற்ச்சிக்கவும் என கூறி  அணைந்தது தொடர்பு .