வியாழன், 7 நவம்பர், 2013

சதுரங்கம் .!

போரியலின் அடிப்படை
படைகளின் அணி ஒழுங்கு
தகமைகளின் நெறி வழி
ஒரு சிறந்த போரியல் ஆசான் ..


ஆரம்பிப்பவன் சிப்பாய்
ஆனால் கட்டளை பீடம் அரசன்
நோக்கம் எல்லாம் தன் தலைவனை
காப்பது மட்டுமே சூழ்சி வலையில் இருந்து ..

இத்தனைக்கும் படையை ஒழுங்கு
படுத்தி பகையை நிலைகுலைய
செய்வதும் வைப்பதும் ராணியாம்
உதவிக்கு மந்திரி நெடுக்க வழிநடக்க ..

முன்னேருவோர் வீழ்வார் என தெரியும்
ஆனாலும் அடுத்த கணம் நிலையை பலப்படுத்தி
பதில் தாக்குதல் நடக்கும் இறப்பு பெறுமதி
வீழ்ந்தவர் பொறுத்து கணிக்கப்படும் ...

ஆனாலும் சதுரங்கம் வாழ்க்கையின்
மிக சிறந்த ஆசான் போரியலின் ஆசிரியன்
களங்களை மாற்றி அமைக்கும் வல்லமை
தந்திரங்களை உடைத்து வெளி வரும் கெட்டித்தனம் ..

காப்பு தாக்குதல் திறன்களை கற்று கொடுக்கும்
கருப்பு வெள்ளை காய்களில் எவ்வளவு இருக்கு
நாம் படிக்க இருக்கு இன்னும் அதிகமா
ஒவ்வரு நகர்வும் நில் கவனி முன்னேறு ...

வேவுபுலி ..!

நீர் பகைஅருகில் போகும்போது
பாம்புகளும் நடுங்கும் பாதைதனை விடும் ..
கம்பி பட்டு முள்வேலிகள் பூமாலையாய்  தெரியும் ..
எதிரியின் மண்ணரன் சிறு புற்றாய் இருக்கும் .

கந்தகப்பொதி புத்தக்பைபோல இருக்கும்
சுடுகோல் எழுதுகோலாய் இருக்கும்
கைக்குண்டு அழி ரப்பர் ஆகமுன் நிங்கள்
அதிகாலை மீண்டும் வந்திடுவீர் ஓய்விடம் ...

மச்சான் நீ எனக்கு பூசிவிட்ட கரி போகவில்லை
நாளை உனக்கு பூசுறன் கரி எண்ணை கலந்து
கழுவினாலும் போகாது காய்ந்தாலும் போகாது
பருவாயில்லை மச்சான் வெடிவிளுந்தா போயிடும் ...

டேய் நான் பக்கத்தில் உள்ளவரை ஒரு ரவை ..
உன்னை நெருங்கா வேங்கையா கொக்கா ..
என்று நீ கட்டி என்னை அணைத்த கணம் நினைவில் ...
கண்கள் கண்ணீரை தூவுதடா உன் மேல் என்
பாசக்கார தோழா..sad.png
1002457_561110620609791_343191837_n.jpg


நானும் அப்பாச்சியும் .!

எனது சிறுவயது முதல் என்னை அதிகமா நேசித்த மனிதர்களில் எனது அப்பாச்சி  முன்னணியில் உள்ளார் அம்மாவை விட அவர் மேல பாசம் அன்பு கொள்ளை பிரியம் எனக்கு ஒரு நெடியெனும் என்னை காணமல் இருப்பது அப்பாச்சிக்கு எதோ தொலைத்து விட்ட சோகம் இருக்கும் எங்க போட்டான் இன்னும் காணவில்லை சுற்றிக்கொண்டு வருவான் ஆளை காணம் செக்கல் பட்டுடு விளக்கு வைக்கும் நேரம் ஆகுது இவனை காணம் என தனியா விட்டின் திண்ணையில் இருந்து கதைப்பார் .

அம்மா பேசியபடி இருப்ப அவன் வருவான் நீங்க வந்து தேத்தண்ணிய குடியுங்க எங்க போகபோறான் எங்காவது பெடியலோடா நிப்பான் இப்ப வந்திடுவான் என்று சொன்னாலும் அப்பாச்சி கேளாது நாலுதரம் ரோட்டுக்கு வந்து எட்டி பார்க்கும் சிலவேளை அப்பொழுதுகளில் நான் வருவேன் ......'என்ன கிழவி ரோட்டில யாரை சயிட் அடிக்கிற என்று கேட்படி ' ஓம் ஓம் எனக்கு இப்பதான் 18 ஆள் பிடிக்கிறன் நீ எங்க உலாத்திட்டு வாற என்று என் பின்னாடி வருவார் போய் முகத்தை கைகாலை கழுவிட்டு வீடுக்குள்ள வா நேரம் கேட்ட நேரம் வாறது பேய் பிசாசுடன் என்று புறுபுறுப்பு நடக்கும் .

சரி சரி கிழவி உனக்கு கதை கூட புட்டை போடு என்று சொன்னா ஓம் மாப்பிளை நீ வைச்ச ஆள் நான் சாப்பாடு போடுறன் பொறு என எனக்கு பதில் சொல்லி  குசினிக்கு போகும் கிழவி கறிச்சட்டி திறந்து பார்த்து ஏண்டி பிள்ளை குழம்புக்க ஒண்டையும் காணம் என்று அம்மாவிடம் கேள்வி போகும் அம்மாவோ கிடக்கிறது போட்டு கொடுக்க சாப்பிடுவன் என்று சொல்லுவா கிழவி கேட்காது உடனம் ஒரு முட்டை பொரியும் அவ்வளவு வேகமும் வேலைக்கு பஞ்சி படாத ஆளும் அப்பாச்சி மண்வெட்டிய தூக்கினா அவ்வளவு காணி புல்லும் செருக்கிதான் வைப்பா மனவலிமையும் உடல் வலிமையையும் உள்ள ஆள் அப்பாச்சி ....

காலமும் நேரமும் வேகமாக நகர உறவுகள் சொந்தங்கள் பிரிவுகள் என சுழற்ச்சி முறையில் வர அதுக்கு நாங்களும் விதிவிலக்கா என்ன அதில் தப்பி போக o/L எடுக்கிற நேரம் போராட்டம் என்னும் பாதையில் போயிட்டம் சிறிது காலம் மனம் பெரும் கஷ்டம் ஏக்கங்களை சுமந்தாலும் நண்பர்கள் வேலைகள் என நாட்கள் நகர அப்பாச்சி இரவுகளில் நினைவில் எப்படியும் வருவார் என்னை அறியாமல் என் கண்கள் நீரை விட்டபடி இருக்கும் கிழவி இப்ப என்ன செய்யும் சாப்பிடுதா அல்லது கோயில் குளம் என்று திரியுதா சொல்லாமல் வந்திட்டன் தேடியிருக்கும் அன்று பூரா என மனதில் ஒரு ஓரமா வலி இருக்கும் இன்னும் சிறிது காலம் எப்படியும் பார்க்கலாம் இப்ப என்ன வேற நாட்டுக்கா போயிட்டன் என்று மனதை தேற்றி உறக்கம் தழுவும் ...


காலம் உருண்டு ஓட வெளியில் போய் வரும் சுழலும் எனக்கு அமைய ஒருநாள் இரண்டு வருடம் கழிந்து இருக்கும் வீட்டுக்கு போகிறேன் அங்கு அவர்கள் இல்லை பக்கத்து வீட்டு ஆண்டி சொன்னா அம்மா ஆக்கள் இப்ப இன்னாரின் காணியில் வீடு போட்டு இருக்கினம் என்று சரி எனகூறி அங்கு போனா கிழவிதான் முன்னுக்கு இருக்கு மேட்டர் சைக்கிளை கிழவிக்கு நேர விட்டுக்கொண்டு போக அசையாமல் கிழவி இருக்கு என்னன்னா எப்படி இருக்குற குரலில் யாரு என பிடித்த கிழவி அழுது குளறி கூப்பாடு போட்டு தனது ஆதங்கத்தை கொட்டி தீர்த்து நிண்டிச்சு சரி சரி விடு விடு இப்ப என்ன நான் உனக்கு முன்னுக்கு நிக்கிறன் எதுக்கு அழுகிற விடு தேத்தண்ணி போடு எங்க அம்மா என்று கேட்டபடி நான் அமர .....

அம்மா தங்கச்சிய கூப்பிட போயிட்ட எதோ பாடம் படிக்க போறவள் அந்த வாத்தியார் விட்டுக்கு பொழுது படுகுது அதுதான் கூட்டி வர போறா சரி மகனே நீ இப்படி கறுத்து இருக்குற வளத்திட போல கிடக்கு இப்ப எனக்கும் கண் பெரிசா தெரியிறது குறைவு என்று கூற ஓம் நான் முதல் நல்ல வெள்ளைதானே சும்மா இருண அப்பர் எங்க இப்பவும் தண்ணி அடிக்கிறவரா குழப்படியா உன்ர மகன் என்றவுடன் இல்லை நீ போனப்பிறகு குறைவு கவலைதான் அவனுக்கு தடி வளர்த்தபடி இருக்குறான் யாரோ இண்டைக்கு வயல் வெட்ட கூப்பிட்டது போல போயிட்டான் வருவான் இப்ப என் நீ போகப்போறியா மகனே கொஞ்சநேரம் இரு அம்மாவும் அப்பாவும் வந்திடுவினம் தங்கச்சி வேற உன்னை பார்க்க ஆர்வமா இருக்குறாள் இல்லையென நேரம் போகுது நான் எட்டி பார்த்திட்டு போவம் என்று வந்தனான் இனி இங்கால வேலை அடிக்கடி வந்து போறன் யோசிக்காமல் இரு நல்ல சாப்பிடு மருந்து எடு கண்ணுக்கு ஓம் ஓம் நாளைக்கு கட்டையில போற எனக்கு இதுகள்தான் குறை .........

வீட்டுக்குள் ஓடி சென்று தனது பையில் இருந்து ஒரு 200ரூபா கையில தந்தா எதாவது வாங்கி சாப்பிடு மோனே உடம்பை பாரு எங்க இருந்தாலும் நீ நல்ல இருப்ப எனக்கு நம்பிக்கை இருக்கு தங்கச்சி உன்னை நம்பிதான் இருக்குறாள் அவளை பாரு நான் இண்டைக்கோ நாளைக்கோ வாழ்த்து முடிச்சிட்டன் நீங்க வாழுற பிள்ளைகள் இன்னும் நிறைய இருக்கு பார்க்க என கட்டி அனைத்து முத்தம் இட்டு கண்கலங்கி நிக்கும் கிழவியின் கண்களை பார்த்து பேசும் அளவு நான் இல்லை என் கண்களும் நீ நிறைந்து இருந்ததால் சரியன போட்டு வாறன் அம்மா வந்தா சொல்லு சிலவேளை அடுத்த கிழமை வருவேன் போட்டு வாறன் ...........


காலம் வேகமா போக சமாதான  காலம் வர நாட்டை விட்டு வெளியேறி ஐரோப்பா வந்தா இங்கயும் தனிமை வாட்டி எடுக்கும் சில காலம் அப்பாச்சிக்கு ஒரு போனை போட்டு ஒரு நிமிடம் கதைத்தா எதோ ஒரு சுமை இறங்கிய மாதிரி இருக்கும் கிழவி அங்க கதைக்கும் வேகம் இங்க கேட்கும் 'எண்டா மோனா அங்க எதோ காட்டு கொடுப்பினமாம் உனக்கு தந்திட்டங்களா ' என்று கேட்கும் வேகம் இங்க உள்ள பக்கத்து வீட்டுக்காரனுக்கு கேட்கும் ...இல்லையென அதுக்கு கனகாலம் வேணும் என்று சொன்னா ஆ அது எப்படி அவன்ட மகனுக்கு கொடுத்தவங்கள் இவனட மகனுக்கு கொடுத்தவங்கள் எண்டு எல்லா விபரமும் கிழவி எடுத்து விடும் நாட்டில இருந்த படி அப்படி விசாரிப்பு வெளிநாடு பற்றி அங்க ...


ஒருநாள் இப்படித்தான் வேலைக்கு போயிட்டு வந்து இருக்க  போன் வந்துது என்னன்னா சொல்லு சும்மா எடுத்தனான் இரவு பூரா ஒரே கனவு அதுதான் உனக்கு எதாவது உடம்பு சரியில்லை என்று யோசிச்சன் அதுதான் கேட்பம் என்று சொன்னா இல்லை அப்பாச்சி வேலை ஒன்றுக்கு போறனான் இங்க தேத்தண்ணி கடையில் கோப்பை கழுவுற வேலை சரியான சனம் இண்டைக்கு சாப்பிட வந்தது அதுதான் வேலை கூட களைச்சு போனன் என்று சொல்ல (அண்டைக்கு அடி அமவாசை ஊருல எல்லோரும் விரதம் எனக்கு தெரியாது ) உடனம் கிழவி சொல்லிச்சு உனக்கு பகிடி இண்டைக்கு ஆடி அமவாசை எல்லாரும் விரதம் யாரு தேத்தண்ணி கடைக்கு வரபோறான் சாப்பிட என்று உடனம் பதில் வந்துது எனக்கு சிரிச்சு முடில ...


யோவ் கிழவி இங்க வெள்ளைக்காரன் உனக்கு ஆடி அமவாசை பிடிக்கிறான் விரதம் இருந்து எண்டு ஒரு கத்து கத்தினான அதுக்கு பிறகுதான் கிழவிக்கு விளக்கிச்சு ஓம் நான் ஊர் நினைவில சொல்லி போட்டன் சரி விடு நேற்று போன் அடிக்க யாராவோ ஒரு வெள்ளைகாரி கதைச்சால் யாரு அவள் உனக்கு தெரியுமா என்று அடுத்த கேள்வி அனே அது என்னுடைய போன் நிப்பாட்டி கிடந்தா அப்படி சொல்லும் இப்ப உனக்கு இந்த ஆராய்ச்சி எல்லாம் நானும் உனக்கு கால் பண்ணினா சிலநேரம் 'உப அனத்த பிச்சி சாரிய கருணாகர லலித் பசுவ அவ தாணுவ ' எண்டு சொல்லுது நானும் கருணாவை பஸ்சில வைத்து பிடிச்சிட்டங்கள் எண்டு குழம்பி போயிட்டன் உடனம் கிழவி உனக்கு இந்த நக்கல் நளினத்துக்கு மட்டும் குறையில்லை சாப்பிட்டு படு இங்க எனக்கு காசு ஓடுது வைக்கிறன் என்று சொல்லி கட் பண்ணிட்டு போயிட்டா ...

இப்ப அப்பாச்சியின் கழுத்தில ஒரு சாம்சுங் கொழுவி விட்டு கிடக்கு அக்கம் பக்கம் எல்லாம் நடமாடும் டெலிக்கொம் இப்ப அப்பாச்சிதான் நம்ம ஊரில ...