வெள்ளி, 26 செப்டம்பர், 2014

ஈழ தாகம். .!

வாழும் வயது அது பார்த்தீபா ..
வண்ணங்கள் கோடி உண்டு உலகில் ..
எண்ணங்கள் சுமந்து நீயும் ..
எம்மைப்போல் வாழ்த்திருக்கலாம் ..
திண்ணமாய் நீர் எடுத்த முடிவு ..

கொள்கையின் பற்றும் பிணைப்பும் ..
இலக்கினில் கொண்ட உறுதியும் ..
எம்மைப்போல் மாறுது இருந்ததால் ..
மரணித்து எம் மனங்களில் நிறைந்தாய் ..

விடுதலை போரில் நாம் இழந்திருக்க கூடா புலி ..
உன்னைப்போல் அரசியலின் தீர்க்கதர்சி எவர் ..
மக்கள் புரட்சி வெடிக்கட்டும் என்று அன்று...
சொல்லிப்போன உன் வாய்மொழி இன்று ..
வெடித்து நிக்கு ஐநா முன்றலில் கூட்டமா ...

பார்த்தீபன் என்னும் விடிவெள்ளி எம்மை ..
ஈழம் என்னும் நாடு நோக்கி அழைக்கும் ..
தாகம் என்னும் சொல் இனி திலீபன் ஆகும் ..
தவித்து வந்தது எமக்கு கண்ணீர் ..

தாகத்துகே தாகம் எடுத்தது நீர் ..
தாகத்தை தவிர்த்து இருந்த பொழுது ..
தாகத்துக்கு தெரியுமா உனக்கு இருப்பது ..
ஈழ தாகம் என்று திலீபா.