ஞாயிறு, 9 நவம்பர், 2014

சொல்லிடுவன் ..!! (முகடு)

கொஞ்சம் மங்களான பொழுது சூரியன் அப்பொழுதுதான் குளக்கரையின் முடிவில் மீனுடன் பேசிக்கொண்டு இருந்தான் தலையில் கொஞ்ச விறகு கட்டைகளை சுமந்தபடி மணியக்கா வேகமா குளக்கட்டின் விளிம்பில் நடந்தபடி இருந்தார் .... மேச்சலுக்கு போன லட்சுமி வீடு வரமுன் போகவேணும் என்னும் வேகம் மட்டும் மணியக்கா கண்களில் குடிகொண்டுள்ளது தான் போக கொஞ்சம் சுணங்கினாலும் களனி தண்ணியை தட்டி ஊற்றி முற்றம் எல்லாம் சேறா ஆக்கி போடுவாள் என்று சேலை தலைப்பை இழுத்து செருகிக்கொண்டு நடந்தாள் மணி ...

அந்த அந்திசாயும் பொழுதுதான் கண்ணனுக்கு பிடிச்ச பொழுது குளக்கரை ஆலமரம் எப்பொழுதும் தனியா வந்து இருத்து ரசிப்பது அவனுக்கு ரொம்ப பிடிக்கும் தனிமையில் இருக்கும் பொழுதுகளில் அவனின் சிந்தனை எல்லாம் எதிர்காலம் எப்படி அமையும் என்பதே ..ஆனால் அவன் அருமையா கவிதை எழுதுவான் அவன் தனது பாட கொப்பிகளில் கடைசி பக்கம் கிறிக்கி இருக்கும் கவித்தைக்கு அவனுடன் படிக்கும் பெண் தோழிகள் அடிமை எனலாம் ...

மணியக்காவின் வேகமான நடை கொஞ்சம் மெதுவா ஆகி தனது கண்களை குளக்கரை ஆலமரம் நோக்கி விட்டார் யாரு அது இந்த செக்கள் பொழுதில் இதில் இருப்பது என்று யோசிச்சபடி கண்ணனின் சைக்கிளை விறகு சுள்ளிகளின் முடிவுகள் தட்டியபடி ஒரு ஒலியை எழுப்ப கண்ணன் பாய்த்து சென்று சைக்கிளை ஒரு கையால் பிடித்து சரி பருவாயில்லை போங்கோ அக்கா என்கிறான் ..

மணியக்கா சிறு மூளை பொறி தட்டுது இவன் இந்தநேரம் இங்கின இருக்கிறான் அவருக்கு தெரியாது அவன் தினம் இந்தநேரம் இங்கு இருப்பவன் என்று கண்ணன் யோசிச்சான் சரி முடிச்சுது சும்மாவா சொல்லிடுவா இப்ப நேர்ல வேற கண்டிடா சொல்லமால் விடுவாவா ....இல்லை அவா அப்படியான ஆள் இல்லை என்றவாறு தன் மனத்தை தேற்றிக்கொண்டு குளத்தின் வடக்கு அலைகரை நோக்கி தன் பார்வையை திருப்பினான் ...

மணியக்கா போவது திரும்பி ஒருக்கா பார்ப்பது என்று ஆழ்த சிந்தனையில் இடதுகரையால் இறங்கிகொண்டு இருந்தார் ...இந்தநேரம் பார்த்து மங்கையும் ஊரில இல்லை இவன் கண்ணன் எப்ப ஊருக்கு வந்தது என்றுகூட மணிக்கு தெரியாது எல்லாமே குழப்பம் மணிக்கு ஏனெனில் கண்ணனின் அம்மா மேட்டுக்குடி கொஞ்சம் ஜாதி திமிர் அதிகம் கண்ணன் இங்கின நின்றால் எவளையாவது விரும்பி தொலைப்பான் என்று அவர் அவனை பட்டணம் அனுப்பி இருந்தார் .....
கண்ணன் எதிர் பார்த்தது போல அவள் தான் வந்துகொண்டு இருத்தாள் கட்டில் இருந்து எழும்பிய கண்ணன் தேவி நில்லு கொஞ்சம் பேசணும் என்று வழிமறிக்க அவளே தன் இரட்டை பின்னலில் ஒன்றை எடுத்து முன்னாடி விட்டபடி போனாள் ...தேவி சொல்லிடுவன் என்று அன்று நீ சொல்லிட்டு போனது பொய்யா ஏன் இப்படி என்னை கஸ்படுத்திர சொல்லு அல்லது சொல்லிடு உன் முடிவை என்று சினிமா கதாநாயகன் கணக்கா வசனம் பேசி முன்னாடி போனான் கண்ணன் ....

விறகை தலையில் இருந்து சரித்து தரைக்கு போட்டாள் மணி அப்படியே சேலை தலைப்பை எடுத்து முகத்தை துடைத்தபடி அங்கும் இங்கும் சுற்றி ஒரு பார்வை வைத்தால் லட்சுமியை காணம் எங்க போட்டாள் இன்னும் வீடு வராமல் காலையில் பால் வேற கொடுக்க வேணும் வாத்தியார் வீட்டுக்கு என்று முணுமுணுப்பு செய்தபடி வேலி ஓரம் கண்களை விட்டாள் மணி ..
இன்னும் நீ முடிவு சொல்வதா இல்லை தேவி நான் திரும்பி போகவேணும் அதுக்குள்ளே சொல்லிடு என்று அவளின் துப்பட்டாவில் கைகளை மெதுவா உணர விட்டான் அவள் பட்டென துப்பட்டாவை இழுத்து தோள்களில் போட்டபடி உங்களுக்கும் எங்களுக்கும் ஆகாது தெரியும் எல்லே பிறகு எதுக்கு திரும்ப திரும்ப வந்து நின்று கேட்கிறியள் சொல்லுங்க என்று கூறி முடிக்க ...
மணியக்கா குளக்கட்டில் ஏறவும் நேரம் சரியா இருந்தது அட பாவி பயல் அப்பன் கண்டால் கொண்டு போடுவான் எல்லே எதுக்கு இந்த தினவெடுத்த வேலை என்று எண்ணிக்கொண்டு அவர்களை கடக்க கண்ணன் சொன்னான் மணியக்கா இந்த பிள்ளையை ஒரு முடிவு கேட்டு சொல்லுங்க நான் கண்ணாலம் கட்டி பட்டணம் போறதா இருக்கு இவா வந்தா நான் நாளைக்கு கூட்டி கொண்டு பட்டணம் போயிடுவன் என்ன ஏது என்று கேட்டு சொல்லுங்க அக்கா ....
எண்டா அப்பு இந்த உயிர் என் உடம்பில உயிர் இருக்கிறது உனக்கு பிடிப்பு இல்லையா நான் லட்சிமியை தேடிவந்தா இங்க மூதேவி குறுக்க நிக்கு என்று பட்டும் படாமல் சொல்லிட்டு அவர்களை கடந்தார் மணியக்கா ...


பார்த்திங்கள் தானே சொல்லிடு என்று கேட்டிங்கள் இதுக்கு என்ன சொல்லப்போறியல் என்று விடுகதை போட்டால் தேவி ..எனக்கு தெரியும் அவா இப்ப வீட்டுக்கு போய் சொல்லத்தான் போறா அதுதான் நானே முன்னம் சொல்லிட்டன் என்று கண்ணன் அவளின் கண்களை உற்று பார்த்தான் அவளின் கண்ணில் மெதுவா காதல் எட்டி பார்த்தது இருவர் கண்ணிலும் சூரியன் கீழ் இமைகளில் இறங்கிக்கொண்டு இருந்தார் ..
எப்படியும் அவள் காதலை சொல்லிடுவாள் .

1 கருத்து: