திங்கள், 8 ஜூன், 2015

யார் நல்லவன்.

யார்  நல்லவன் ...
சிறுகதை (நன்றி முகடு சஞ்சிகை)

மச்சான் டி சொல்லு இதில போட்டு டக்கென்று வாறன் என்று சொல்லியபடி கைபேசியின் திரையில் கைகளை அழுத்தியபடி நடந்தான் ரமேஸ் ,உள்  மனதில் இன்றாவது அரைவாசி  தந்தால் நல்லது வாங்கி  அப்படியே அனுப்பி போடலாம் அப்பாக்கு வேற ஒப்ரேஷன் இருக்கு ,முதல் மாறிய வட்டி காசு வேற கொடுக்க வில்லை திரும்பியும் கேட்டால் எப்படி தருவீனம் என  எண்ணிக்கொண்டு வேகமா நடந்தான் இரயில் நிலையம் நோக்கி .......

இவன் என்னடா  வேலை  முடிய வாடா ஊருக்கு  காசு  போடணும் என்னிடம் விஸா  இல்லை  நீதான்  போட்டு தரனும் என்று சொல்லிப்போட்டு  ,டி  சொல்லு  வாறன் எண்டுட்டு  எங்க போறான்  இவன் என தனக்குள்  கடுப்பாகியபடி  நகுலன் வீதியை அலுப்பா  பார்த்தான் ,வரட்டும் வரவிட்டு டி  குடிப்பம் இப்ப வெளியில நிப்பம் ஏரியாவில்  என்ன  நடக்கு  என்று பார்த்தபடி  என்று   நகுலன் நினைக்க ,அண்ணே நீங்க  வடகாடா என்று ஒருவன் கைகளை  கொடுக்க ஏவியபடி  கேள்வியை கேட்டான் .....

இதில்தானே வாறன்  என்று  சொன்னான்  எங்க  போயிட்டான் என்று மீண்டும் அவன் இலக்கத்துக்கு தொடர்பை கொடுத்தான்  ரமேஸ் ,எதிராளி  அழைப்பில்  வர அண்ணே எங்க நான் கதவுக்கு  கிட்டவா  நிக்கிறன் நீங்க எங்க ,ஓம் தம்பி இந்தா வந்திட்டன்  ரயில்  கொஞ்சமா  சுனங்கிட்டு அதுதான் என்று  வேகமா  வந்து  கைகளை  கொடுத்தார் கஜன் பிறகு எங்கவாது டி  குடிப்பமா என்றபடி கேள்வியை  தொடுக்க .....

நகுலனின்  அழைப்பு  மீண்டும் எங்கடா  நிக்கிற  வருவியா  நான்  போகவா என்றது ,இல்லடா  பொறு  பொறு   ஒரு  ஐந்து  நிமிடத்தில்  வாறன் ஆள் வந்திட்டு இப்ப வாறன் என்று துண்டித்தான்  அழைப்பை ,பிறகு  கஜன் அண்ணே எப்படி  சுகம் கனகாலம் கண்டு ,நான் போன் அடித்தால் கூட  எடுப்பதில்லை  நீங்கள் இல்லையோ  இருக்கோ போனை எடுத்து  கதையுங்கோ அண்ணே அதில என்ன வந்தது என்று  சொல்லிக்கொண்டு சேர்த்து  நடந்தான் ரமேஸ் .........

உனக்கு தெரியும்  தானே  சீட்டுக்காரன் சுத்தி  போட்டான் அதுதான் உண்ட காசு  தரமுடியவில்லை  உனக்கும் கஷ்டம்  ,விஸா  வேற இல்லாமல்  வேலை  செய்கிற காசு அதுதான் எனக்கு  மனசு  கஷ்டமா  போயிட்டு  காசு  கையில  கிடைக்க  கால் பண்ணுவம் என்றுதான்  நான்  எடுக்கவே  இல்லை  இவ்வளவு  நாளும் பிறகு அப்பாக்கு  சுகமா உடல் நிலை .......

நகுலனிடம் கைகளை கொடுத்தவன் உங்களை அங்க  கண்டிருக்கிறன் நீங்க  இன்னாரின் பெடியன்  தானே என்று  விளக்கம் கேட்க தொடங்கினான் ,ஓம்  நீங்க யாரு  என்று எனக்கு  சரியாய் தெரியவில்லை அதுதான் குழப்பம் என்றான் நகுலன் ,அட  தம்பி நீங்க அப்ப சின்ன பெடியல் நாங்க  உங்கட தோட்டத்துக்கு வேலைக்கு வரும் போது  களுஷான் கூட  இல்லாமல் விளையாடிக்கொண்டு  இருந்த ஆள் நீ அண்ணன்  எல்லாம் ,அப்பா அம்மா எல்லோரும் சுகமா அக்காக்கு  கலியாணம்  முடிஞ்சுதா என்று எல்லாம் ,எதோ உரிமை  உள்ளவர் போல கேள்விகள் கேட்டார் அவர் ........

ரமேஸ் உனக்கு அவனை தெரியாது தானே நான் சீட்டு போட்டவனை ,இல்லை கஜன் அண்ணே நீங்க  சொல்ல கேள்வி ஆளை கண்டதில்லை எவ்வளவு காசு கனபேருக்கு  கொடுக்கணும்  போல அப்படியா என்றான் ,ஓம்  தம்பி நாலு  சீட்டுக்கு  மேல எனக்கு  இரண்டு  சீட்டுக்காசு கடைசியா  எடுப்பம் என்று விட்டன் அது  ,எல்லாம்  போயிட்டு இப்ப என்ன  பண்ணுறது அவனை காணவும் இல்லை இப்ப போன்  நம்பர் வேறு மாற்றி போட்டான் என ஆதங்கப்பட்டபடி  மூச்சு விடார் கஜன் ......
நகுலன் கேட்டான்  நீங்க கன   காலம்  வந்து  ,என்ன வேலை  செய்யுறிங்க வீடு எல்லாம் வாங்கியாச்சே என தொடுக்க, இல்லை  தம்பி இப்பவும்  ஒரு  சீட்டுக்காசு வாங்கிற  அலுவலாத்தான்  வந்தனான் இந்த வாறன் என்றான்  ஆளைக்காணம்  போனையும் கானம் ,ஓ பெரிய சீட்டா  சின்ன  சீட்டா  ,இல்லை  சின்ன  சீட்டு தான் அது  எப்பவோ  முடிச்சு  போயிட்டு இன்னும் காசு தரவில்லை தம்பி இழுக்கிறான் வைத்து சுத்து மாத்து வேலை போலத்தான் கிடக்கு ,என்ன  செய்கிறது மெதுவா தான் வாங்கி  எடுக்கணும் ,ஊரா சண்டைக்கு போக இங்க தெரியுமா தானே எவனும் நல்லவன் இல்லை தம்பி கவனம் கொடுக்கல் வாங்கல் எல்லாம் ........
இப்படியே பேசிக்கொண்டு  கஜனும் ரமேசும் நகுலன்  நிக்கும் கடையடிக்கு  கிட்டவா  வர ,கஜனின் முகம் மாறியது  தம்பி  ரமேஸ் இதில இருக்கிற  கடையில்  டி  குடிப்பம் எதுக்கு அங்கின  தூரமா போவான் என்றார் ,இல்லை அண்ணே காசு அனுப்ப விஸா உள்ள பெடியன் அங்கதான் நிக்கிறான் அதுதான் நான் அங்க போகிறேன் என்றன் ரமேஸ் .....

நல்லா பேசிக்கொண்டு இருந்த நகுலன் திடீர்  என்று அவசரமா சரி  அண்ணே நேரம் போட்டுது அவசரமா போகவேணும்  சந்திப்பம் என்று கைகளை கொடுத்து விட்டு வேகமா சந்தியை கடந்து போனான் ,என்னடா நிண்டவாக்கில போறான் ஒரு  பிளேண்டி  கூட  குடிக்காமல் என்று மனதுக்குள் அலுத்துக்கொண்டார்.....
ரமேசுடன் போனால் அவரிடம் மாட்டவேனும் என்ன பண்ணுறது என்று யோசிச்சபடி கஜன் மனம் இன்றி கால்களை மெதுவா வைத்தான் ,காசு வேற கொண்டுவரவில்லை இவன் நான் காசு கொண்டுவந்திருப்பன் அனுப்பலாம் என்றுதான் வாரான் இதில வேற அந்தாள் நிக்கு எல்லாம் சிக்கலா  போகபோகுது  ,என்ன பண்ணலாம்  என்று மனதில் வேகமா கணக்கு போட்டான் கஜன் ......

கடையடிக்கு வந்த ரமேஸ் சுற்றி சுற்றி பார்த்தான் எங்கடா போயிட்டான் இவன் போன் கூட  அடிக்கவில்லை என்று சலித்துக்கொண்டு கைபேசியை எடுத்தான் ,அப்பொழுது அடேய் கஜன் நீ  உயிரோடு இருக்கிறியா என்றபடி ,எட்டி  கஜனை பிடித்தார் சோதியர் விடுங்க அண்ணே கையை என்று தட்டி விட்டான் கஜன் ,என்ன ஏது  என்று  புரியாமல் முழி பிதுங்கி  நின்றான் ரமேஸ் ,நான் ஒன்று வேணும் என்று செய்யவில்லை அந்த வடகாட்டு நகுல் தான் சீட்டு  ஏமாற்றி போட்டான் அவனை சோதியர் அதுதான் பிரச்சினை நீங்க  என்னுடன் பிடித்த  சீட்டு  தரமுடியாமல்  போனது ......
டேய் அவனோ அவன் இப்பத்தான் இதில  என்னோட கதைச்சுக்கொண்டு நிண்டவன்  டக்கென்று  கையை கொடுத்திட்டு போட்டு வாறன் என்று  சொல்லிட்டு இந்தபக்கமா ஓடினான் ,எனக்கு தெரியாது அவன் தான் என்று  அல்லது  ஆளை பிடிச்சு வைத்திருப்பனே என்றார் சோதியர் ...

ஐயோ அண்ணே அவன் தான் நகுலன் எனக்கு காசு போடவந்தவன் விஸா  உள்ள  பெடியன் ,இதில  நிண்டவன் என்று  சொன்னான் ரமேஸ் அட  ஊரில அவன் அப்பனின்  பெயர் விலாசம்  என்ன இவன் இங்க இப்படி ஊரை  ஏமாற்றி திரியுறான் நல்லவன் போல அல்லவா இப்ப பேசிட்டு இருந்தான் சே .....

கஜனுக்கு நகுலன் கொடுக்கணும் ,சோதியருக்கு  கஜன் கொடுக்கணும் இரண்டும் நடக்கணும் என்றால் நகுலன் கஜனுக்கு கொடுக்கணும் ,என உள்ளார  யோசினையில் ஆழ்த்தான் ரமேஸ் காலமுன் சூழலும் ,வேகமா பணக்காரன் ஆகணும் என்னும் வேகமும் எப்படி எல்லாம் சுய கவுரவத்தை  விட்டு  ஏமாற்ற பண்ணுது மனிதரை ,இங்கு யார்தான் நல்லவர்கள் எல்லோருக்கும் பின்னுக்கு ஒரு பெரும் கதை இருந்துகொண்டே  இருக்கும் போல ஐரோப்பா வாழ்வின் சூழ்ச்சிமம் அதுதான் ஆக்கும் என எண்ணியபடி ரமேஸ் கஜனை பார்த்தான் ........

தம்பி கோவிக்காத வேலை சம்பளம் செக் கொடுத்தனான் விஸாக்காரன் இன்னும் காசு தரவில்லை இண்டைக்கு கொண்டுவந்து தாரன் என்றவன் ,அதுதான் நான் உன்னை வரச்சொன்னனான் பொறு அவனுக்கு அடிப்பம் என்று அடுத்த சம்மாட்டி அடியை தலையில் இறக்கினார் கஜன் ....

எதிர் முனையில் அழைப்பு கொடுக்க நேரடியா தொலைபேசி நிறுத்திவைக்கப்பட்டுள்ளது சிறுது  நேரத்தின் பின் முயற்ச்சிக்கவும் என கூறி  அணைந்தது தொடர்பு .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக