ஞாயிறு, 1 நவம்பர், 2015

அப்பத்தாவின் நினைவு குறிப்பில்.

ஊரில் வீடு  மேயும்  போது ஓலைகளை  அழகா  அடிக்கி   அடுக்கி ஈக்கால் கட்டி  கொண்டு  வருவார்கள் ,கீழே  நின்று ஓலை எடுத்து கொடுத்துக்கொண்டு #அப்பத்தா  மேச்சலை  கவனிப்பார் ,சிலவேளை  கொஞ்சம்  அதிகமாக  இடைவெளி  அல்லது  நீக்கல் தெரிந்தால் கீழே நிக்கும்  அப்பத்தா  சொல்லுவார் ,டேய் மோனோ அதுக்கு  இடையில் ஒரு  #கள்ளமட்டை  வையடா  என்று ....

சிறுவயதில்  இவைகள்  விளங்குவது இல்லை,  என்ன  "கள்ளமட்டை"  ,நல்ல  மட்டை  என்று  ,எல்லாம்  தென்னம்  மட்டை  தானே ,ஒருமுறை கேட்டபோது  விளக்கமா  சொன்னா  அப்பத்தா ....

படிமுறையா போய்க்கொண்டு  இருக்கும் மேச்சலில் இடையில் சிறு  நீக்கல்  தெரிந்தால் ,அதை மறைக்கவே  இந்த  "கள்ளமட்டை"  வைப்பது ,இந்த  "கள்ளமட்டை"  இந்த   நிரலில்  வராத  மட்டை   என்பதால் அதை  இப்படி  சொல்வது ,அதாவது மேல்மட்டைக்கு  கீழே  வைப்பதால் அவரு  ஒளிச்சு  இருப்பார் ,அதனால் அவர்  "கள்ளமட்டை"  ஆவார் ....

இவ்வாறு வாழ்க்கையில்  சிறு பிரச்சினைகள் வரும்போதும் ,குடும்பங்களில் சிறிய  பிரச்சினைகள் எழும்போதும் இடையில் நின்று  தூண்டி  விடாது ,பிரச்சினையை  பெரிதாக  போகவிடாது வீட்டில்  இருக்கும்  #அப்பத்தா போன்ற பெரியவர்கள் ,ஏதாவது  ஒரு  கதையை  நியாத்தை ,அதுக்கு  தேவைபட்டால்  ஒரு  பொய்யை  கூட  சொல்லி பிரச்சினை  மறைத்து  விடுவார்கள் ,ஆனால்  இப்ப  உள்ள  சமூகம்  அப்படி  இல்லை, இடையில்  "கள்ளமட்டை" வைக்க விடுவதில்லை  ,அப்படியே  வானம் தெரியட்டும்  என  விட்டு இறுதியில்  தலையில்  காக்கை  எச்சம் விழுந்த  பின்புதான் தாம் முன்னம்  அதை  தடுக்கவில்லை என யோசிக்கிறார்கள் ....

எனவே உறவுகளே சிறு பிரச்சினைகள்  எழும்போது வரும் போது ,நீங்களும் ஒரு  "கள்ளமட்டை"  வைக்கலாம் கதை வெளியில் போகாமல் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக