சனி, 29 ஜூன், 2013

வட் இஸ் திஸ் .! வெரி நைஸ் ..!

நாட்டில இருத்து படாத துன்பம் எல்லாம் பட்டு பிறந்ததில் தொடங்கி இடம் பெயர்த்து மாறி மாறி குடிசை போட்டு கரையான் புற்றிலும் பாம்பு புற்றிலும் கரப்பான் பூச்சியுடனும் வாழ்க்கை நடத்திய எமக்கு வெளிக்கிட்டு வெளிநாடு வந்து ஒரு ஐந்துவருடம்  போயிட்டா நாங்க காட்டுற அலப்பாரை இருக்கே தாங்கமுடியாது பாருங்கோ மாக்கிலதான் உடுப்பு போடுவம் சப்பாத்து போடுவம் விலைஉயர்த்த போன்தான் பாவிப்பம் பொரும்பாலும் தமிழை தவிர்ப்பம் தெரியுதோ தெரியாதோ இங்கிலுசுதான் கதைப்பம் நோ ..யெஸ் ..யா .சோ .வெள்ளையைவிட நாங்கதான் அதிகமா பாவிப்பம் பாருங்கோ .

இப்படி ஒரு குடும்பம் நமக்கு பக்கத்தில் இருக்குறாங்க வந்த நாட்டில வதிவிட உரிமை பெற்று விட்டு அவங்க படுற பாடு வெயில் வந்தா ஒ வெரி காட் எண்டு ஏசியை கட்டிபிடிச்ச படி பிறந்தது 37 டிக்கிரி வெயிலில இங்க 15டிக்கிரி முடியவில்லையாம் எப்புட்டு கொழுப்பு விட்டில சோறும் கோழியும் வெளியில போனா பிஸ்ஸாவும் .கேப்சியும் வாழ்நாள் பூரா இதுதான் சாப்பிடுறம் என்கிற பில்டப்பு வேற அவங்க வெளிக்கிட்டு பாரிஸ் வந்தாங்க இங்கின தமிழ் கடைவேற கூடுதலா இருக்கு சரி வாங்க எண்டு கூடிபோனா இங்கபாருங்க கத்தரிக்கா ஐயோ முருங்கைகாய் எண்டு மனுஷரை கடுப்பாக்கிறது

இவங்க பிறத்தது இது எல்லாம் பார்க்கவே இல்லையாம் சின்ன யாழ்ப்பாணம் மாதிரி இருக்கு பெடியள் எல்லாம் ஊருல நிண்டதுமாதிரி அங்க அங்க நிக்குதுகள் எண்டு விடுப்பு விஞ்ஞானம் வேற தேத்தண்ணி கடைக்கு போனா வடையை காட்டி வட் இஸ் திஸ் என்பதும் சாப்பிட்டு முடிய உங்க சாப்பாடு வெரி நைஸ் என்பதும் தமிழனுக்கு தமிழன் பண்ணும் மிக பெரிய கொடுமை

என்னதான் சீனை போட்டாலும் சிலதை கண்டால் வாய் ஊறும் அப்பம் சாப்பிட ஏலாதா எண்டு வெட்கத்தை விட்டு கேட்டு வாங்கித்தான் சாப்பிட வேணும் சாப்பாட்டில கடைசியா ரசம் தரமாடினாமா எண்டு கேட்கும்போது நமக்கு ஒரு மனசுக்க சிரிப்பு வரும் அப்படியே கையாள குலைச்சு அமுக்கும் போது அடையாள அட்டைதான் மாறியுருக்கு நாங்க மாறாவில்லை என்பது நினைவில் வந்து போகும் தருணங்கள் அவை தமிழ் கடை பக்கம் வந்தனியள் நாலு பொருளை வாங்கி போங்கோவன் எண்டு கூட்டி போனால்

நேர ஊர் கருப்பருசி ஊர் வெங்காயம் முருங்கைகாய் நெக்டோ சோடா எல்லாம் வாங்கி முடிய கேட்பங்கள் பாருங்க சாமி படத்துக்கு பட்டு விபூதி  சரி  எல்லாம் வாங்கி கொண்டு வெளிக்கிட முதல் கேட்டன் ஊர் பக்கம் போகவில்லையா எண்டு சொன்னங்க பதில் அங்க போக ஆசைதான் தம்பி
அம்மா என்னும் வீட்டுக்கு கொமட் கட்டவில்லை அதல இன்னும் போற பிளான் வரவில்லை எண்டு வீரை மரமும் பாலை மரபக்கமும் ஒதுக்கிய எமக்கு கொமட் ஒரு கேடு முழங்கால் சில்லு இருக்க நோகுமாம் இங்க பண்ணுற வேலை கொமட் கழுவுற வேலைதான் எதுக்கு இவளவு சீன் எண்டுதான் விளங்க வில்லை எல்லாத்துக்கும் ஆங்கில விளக்கம்தமிழ் கூட இப்ப கொஞ்ச்சம் கொஞ்சம் தான் வருகுது ஆங்கிலத்தை அழாகா கதைத்தாலும் பருவாயில்லை அதையும் கொண்டு குற்றுயிர் ஆக்கி முடில நம்மாள

ஓகே சொல்லி வெளிக்கிட்டு போட்டு வாறன் எண்டு போவங்க 2 மணித்தியாலம் கழிச்சு போன் வருகுது தம்பி போலிஸ் மறிச்சு வைச்சுஇருக்குறான் எண்டு நானும் என்ன எது எண்டு பதறி கேட்க சோதிக்கும்போது விபூதி பைய எடுத்துட்டான் போலிஸ் உடைச்சு மனத்து பார்த்துட்டு வாயில வேற போட்டு சாப்பிட்டு  வட் இஸ் திஸ் வெரி நைஸ் எண்டு கேட்கிறான் நமக்கு சிரிப்பு தாங்க முடில நிங்களே சொல்லுங்க அவங்க எப்படி விபூதிக்கு இங்கிலிஷ் விளக்கம் கொடுத்து இருப்பாங்க ஓவர் சீன் உடப்புக்கு கூடாது


எங்க போனாலும் நாங்கள் தமிழர் என்பது எமக்கு எப்பவும் நினைவில இருக்க வேணும் உயர பறந்தாலும் ஊர் குருவி பருந்தாகாது .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக