சனி, 29 ஜூன், 2013

அட பாவமே .!

பாரிஸ் வந்து பலவருடம் ஆகிட்டு இன்னும் முசு ..சவாவுடன் வாழ்க்கை சிரிச்சு கையை காலை காட்டி ஓடுது வெளியில நிண்டு பார்க்குறவனுக்கு அவன் நல்லா பிரஞ்ச்சு கதைப்பான் என்கிற எண்ணம் வரும் நாங்க கண்ணாடி ரூமில நிண்டு செய்யும் கைஅசைவு ஒரு கோலிவுட் பட டைரட்டர் கணக்கா அக்ஷன் போட்டு கதைப்பம் காரணம் சைகையிலதான் நம்ம பாசையே கதைக்குறம் என்பது எப்படி புரியும் வெளியில் நிக்கும் நபருக்கு

இப்படியே ஊரை பேய்க்காட்டி கொண்டு திரியிற நமக்கு ஒரு சூப்பர் மாக்கெட் வேலை சரி எவளவோ பண்ணிட்டம் இதை சமாளிக்க மாட்டமா எண்டு தலையை ஆட்டி எனக்கு வேலை தெரியும் மொழி அத்துப்படி எண்டு உள்ள போயாச்சு முதல்நாள் தொடக்கம் நாலுநாளா மைக்கில எவனை கூப்பிட்டாலும் என்னை கூப்பிடும் நினைவு பாய்த்து பறத்து போய் முன்னாடி நிப்பன் அவள் சொல்லுவாள் உன்னை இல்லை அவருதான் கூப்பிட்டது எண்டு அப்ப ஒரு சிரிப்பு சிரிப்பும் பாருங்க அது எப்பவும் வராது

இப்படியே போனா என்ன ஆகும் எண்டு நினைத்து வெட்கத்தை விட்டு மெதுவா பேச்சு கொடுக்குறது சிலரக்கு இதைதான் சொல்லவாறான் எண்டு விளங்கி ஓகே எண்டுவான் சிலர் விளங்கவில்லை எண்டுவான் அப்ப நமக்கு கோவம் வந்திடும் அவனை பேசுவம் (துவா கொம்பரம் அறியான்)உனக்கு ஒண்டும் விளங்காது எண்டு பிரான்சுகாரனுக்கு வகுப்பு எடுப்பம்  அப்படி தள்ளாடி நிண்ட நமக்கு ஒருத்தி வந்தால் தேவதை போல (மிகுதி வர்ணிப்பா சாண்டிலியன் புத்தகத்தில படியுங்க தேன்கிண்ணம் ..செவ்விதழ் அப்படி )நான் வணக்கம் சொன்னாலும் கிழ குனிவாள் அப்புட்டு வெட்கம் பிள்ளைக்கு நான் வேற அமிதாபச்சன் மாதிரி (நோ கொமன்ஸ் )இப்படியே ஒரு ஆறுமாதம் போட்டுது

நானும் கட்டக்கூடிய எல்லா சினிமாவும் காட்டி பார்த்தன் பாலா படம் முதல் கொண்டு சங்கர் படம் வரை ம்ம் ஒண்டுக்கு அசையுது இல்லை ஓகே கடைசியா எனக்கு தெரிஞ்ச அறிச்ச முடித்த முழு பிரான்ச்சையும் பாவிச்சன் அவா கண்டுக்கவே இல்லை ஓகே இனி இவளோட ஒரு வணக்கம் வைக்க கூடாது எண்டு ஒரு மிக கடினமான முடிவுக்கு வந்தன் அதன் படி செயல் படித்தி கொண்டு இரண்டு கிழமை சுமார போட்டுது மூனாவது கிழமை வேலைக்கு போய் நானும் வேலையுமா நிக்குறன் அந்த பிள்ளை என்னை அடிக்கடி பார்க்குது எனக்கு செம கடுப்பு பேசும்போது பேசவில்லை இப்ப என்ன பார்வை வேண்டி கிடக்கு என்கிட்ட ஆதங்கம்

அப்புறம் நான் என்ன பேசினாலும் விளங்கி கொள்ளும் ஒருவன் வந்தான் அவன்தான் பின்னேரம் கடைக்கு பொறுப்பு அவன் கேட்டன் நீ என் அவாக்கு வணக்கம் சொல்லுவது இல்லை அந்த பிள்ளை தன்னிடம் சொல்லி கவலை படுகுது எண்டு சொன்னான் நம்ம மனசில ஆயிரத்தி ஒரு பட்டம் பூச்சி பறக்குது சரி போடா மாதவா எண்டு சொல்லிட்டு நான் அவனுக்கு விளக்கம் சொன்னேன் அவக என்னுடன் கதைப்பது இல்லை வேலைக்கு வந்து ஆறுமாதம் ஆகுது வணக்கம்
சொன்னால் கிழ பார்க்குது எப்படி நான் கதைப்பான் எண்டு கேட்க அவன் சொன்னான் பாருங்க ஒரு தகவல் அப்படியே தலை சுற்றி வேட்கா போத்திலில போய் பிடிச்சு நிண்டன்

அப்படி என்ன சொன்னான் எண்டு கேளுங்கோ


அவளுக்கு பிரஞ்சுமொழி சரியா தெரியாது அதாலதான் அவா எவருடனும் அதிகம் பேசுவது இல்லை எண்டு அட பாவமே நீ என் இனமா இதை முதலே சொல்லி தொலைக்க வேண்டியது தானே இருவரும் சைகையில் கதைத்து இருக்கலாம் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக