வியாழன், 7 நவம்பர், 2013

சதுரங்கம் .!

போரியலின் அடிப்படை
படைகளின் அணி ஒழுங்கு
தகமைகளின் நெறி வழி
ஒரு சிறந்த போரியல் ஆசான் ..


ஆரம்பிப்பவன் சிப்பாய்
ஆனால் கட்டளை பீடம் அரசன்
நோக்கம் எல்லாம் தன் தலைவனை
காப்பது மட்டுமே சூழ்சி வலையில் இருந்து ..

இத்தனைக்கும் படையை ஒழுங்கு
படுத்தி பகையை நிலைகுலைய
செய்வதும் வைப்பதும் ராணியாம்
உதவிக்கு மந்திரி நெடுக்க வழிநடக்க ..

முன்னேருவோர் வீழ்வார் என தெரியும்
ஆனாலும் அடுத்த கணம் நிலையை பலப்படுத்தி
பதில் தாக்குதல் நடக்கும் இறப்பு பெறுமதி
வீழ்ந்தவர் பொறுத்து கணிக்கப்படும் ...

ஆனாலும் சதுரங்கம் வாழ்க்கையின்
மிக சிறந்த ஆசான் போரியலின் ஆசிரியன்
களங்களை மாற்றி அமைக்கும் வல்லமை
தந்திரங்களை உடைத்து வெளி வரும் கெட்டித்தனம் ..

காப்பு தாக்குதல் திறன்களை கற்று கொடுக்கும்
கருப்பு வெள்ளை காய்களில் எவ்வளவு இருக்கு
நாம் படிக்க இருக்கு இன்னும் அதிகமா
ஒவ்வரு நகர்வும் நில் கவனி முன்னேறு ...

2 கருத்துகள்:

  1. வணக்கம் யோகு அருணகிரி....இன்று தாங்களின் வலைத் தளம் வ்ந்தேன்அழகாய் இருக்கிற்து . எழுத்து தெளிவான கறுப்பு மை கொண்டு எழுதினால் இன்னும் அழகாய் இருக்கும். பாராட்டுக்கள். தொடர்ந்து எழுதுங்கள். நிலாமதி அக்கா

    பதிலளிநீக்கு