சனி, 7 டிசம்பர், 2013

நான் நினைவிழக்கும் தருணம் .!

பாட்டியின் கைகளால் சுடப்படும் அப்பம் ...
அம்மாவின் சேலையால் தலை துவட்டும் போது..
அப்பாவின் தோளில் ஏறி இருந்த பொழுதுகள் ..
அண்ணனின் கைகளால் முதல் வாங்கிய அடி ..

அக்காவின் கை பிடித்து கோயில் போன காலம் ..
தங்கையை வெருட்டி அழவைத்த நேரம் .
தம்பி என்னை கண்டால் ஓடி ஒழிந்த நிமிடம் ..
ஒரு ரொட்டியை எட்டா பிரித்த சமயம் ..

விலகி போன உறவு கதறி அழும் கணம்
காதல் என்னை கலங்கடித்த கணப்பொழுது ..
முதலில் அவளை தாவணியில் பார்த்த படம் ..
கோயிலின் வடக்கு வீதி மேளசமா  இனிமை ...


சாண்டிலியன் கடல்புறா வர்ணனனை ..
மெருவிரலால் தடவி மட்டி எடுத்த கடல் ..
இசையில் மயங்கி ஒன்றிப்போன சங்கீதம் ..
முதல் சினிமாவில் இருட்டில் தடவிய கதிரை ...

எல்லாம் நினைவிருக்கு எனக்கு ஆனால் ..
உன்முகமே முதல் இருக்கு மனதில் ..
நீ என்னை தேரடியில் கடந்து போனபோது
மொத்தமாய்  மறந்து போனேன் பெண்ணே .


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக