திங்கள், 22 ஜூலை, 2013

மீசை ..!

ஆணா பிறந்தால் ஒரு வயதுக்கு பிறகு
ஆரம்பிக்கும் அதீத ஆசை  மீசை
எப்பொழுதும் கண்ணாடியில் முகம் பார்க்க
உள்மன கேள்வியில் எழும் ஒரு ஆதங்கம்

எப்ப   வளரும் எப்படி வளரும்
நாம வளர்க்க  வேணுமா அதுவா வளருமா
தாடையை வழித்தா வருமா அல்லது
வந்தபின் வழிக்க வேணுமா

யாருடா கேட்கலாம் எப்படி கேட்கலாம்
அப்பா சேவ்செய்யும் பிளேட்டை ஆட்டை
போட்டு அடிவளவில் போய்நிண்டு  கண்ணாடி
இல்லாமல் கண்டபடி இழுத்து வெட்டுக்காயம்

இப்பொழுதும் போகவில்லை அடையலாம்
மீசையை முறிக்கிட்டு போறவனை பார்த்து
பொறாமை பெரிய இவரு எண்டு நினைப்பு
எங்களுக்கும் வளரும் எல்லே உள்மன களிப்பு

வளத்த பின் தெரித்தது பராமரிக்க பத்து ரூபா
கிழமைக்கு வேணும் எண்டு அதுவரை
மீசை  மேல் இருத்த ஆசையெல்லாம் குறைத்து
தடுக்கும் யோசனை தானாக வர மனதில்

காரணம் இருக்கு என்ன தோல்வி எண்டாலும்
கேட்கும் முதல் கேள்வி மண் ஒட்டவில்லை
என்னும்  பெரும் நக்கல் நையாண்டி அன்று
எடுத்த முடிவு திடமா நான்


வளர்ப்பது இல்லை இனிநான் மீசை
கிளின் சேவ் இனி எவர் சொல்வார் மண்
ஒட்டியதை பற்றி இவர்களுக்காய் நான்
தண்ணியில விழமுடியும் அதனால் போனது
என் ஆசை மீசை .

(முறிக்கிட்டு யாரவது கேள்வி கேட்ககூடாது என்னய்யா ஆமா )


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக