வியாழன், 18 ஜூலை, 2013

அறியா வயது ..!

வெட்டி கதை பேசி வெண்ணிலா ஒளியில் என் வீட்டு முற்றத்தில்
அக்கம் பக்கம் உள்ளவர் எல்லாம் சேர்ந்து இருந்து
பக்கத்துவீட்டு நிலவும் நானும் ஓரமாய் விடுப்பு கேட்டு
தெரித்த சினிமா தெரியாத அரசியல் போன கோயில்
என வண்ண வண்ண கலர் பூசி கதை பேசி இருந்த காலம்

விஜயகந்தும் அர்ஜுனும் இந்தியாவை காப்பது போல்
எமக்கு ஒரு ராம்போ இருந்தா நாடு விரைவா கிடைக்கும் என
எமக்குள் ஓடும் என்ன ஓட்டம் தலைகால் புரியா சந்தோஷம்
பக்கத்து வீட்டு பெடியள் எல்லாம் நல்லவங்கள் இல்லை நிலா
நானே உனக்கு எல்லாம் செய்யும் யோக்கியன் என பொய்பேசி


அறியாத வயது அதில் ஆயிரம் கதைசொல்லி மனதுக்குள் பூரித்து
நமக்குள் ஒரு உலகம் ஏற்படுத்தி வண்ணத்து பூச்சி போல
இறக்கை விரித்து திரிந்த காலம் அது வெட்டை வெளியும்
பூவரசம் மரநிழலும் இலைகளில் சுருட்டிய பீப்பியும்
கொடுத்த சந்தோஷம் எப்பொழுதும் மனதில் இருக்க

ஒருநாள் இரவு என் நிலா வரவில்லை கேள்வியது மனதில்
எல்லோரும் சிரித்து இருக்க நான் மட்டும் சோகமாய்
ஒரு கட்டத்தில் முடியாமல் போக கேட்டுவிட்டேன் நிலா
அம்மாவிடம் உங்களுடன் ஏன் நிலா வருவது இல்லை என்
வீட்டுக்கு இப்பொல்லாம் என ஆதங்கத்தை

அவள் பெரிய மனுசி ஆகிட்டாள் அக்கம் பக்கம் இரவில்
போகக்கூடாது காத்துகருப்பு படுமாம் அதுகும் எனக்கு
புரியல எதுகும் எனக்கு விளங்கவில்லை நேற்றுவரை என்னுடன்
இருந்து கதை பேசியவள் எப்படி பெரியவள் ஆனால் நான் மட்டும்
சின்னவனா இருக்க மீண்டும் விடைதெரியா கேள்வியுடன் உறக்கத்துக்கு

மூன்றுகிழமை கடந்திருக்கும் பார்க்கவே முடியாதா என என்
மனம் ஏங்கி இருக்க ஒருநாள் காலை என் வீட்டு வேலியோரம்
நின்றிருந்தால் என் நிலா என் கண்கள் ஆயிரம் கேள்வியுடன்
அவளை பார்க்கக் அவள் கண்கள் ஓராயிரம் ஏக்கத்துடன் என்னை
பார்க்க சிறுவயது குறும்பும் விளையாட்டு தனமும் ஒரு புரிதலாய்
எம்முள் மாறியிருக்கு என என் மனம் கதைசொல்லிச்சு எனக்கு

இலைமறை காயாய் இளையவர்களுக்கு சொல்லிக்கொடுங்கள்
வாழ்வின் மாற்ற விநோதத்தை பல கேள்விட்டு விடைகிடைக்கும்
என்னை போல நல்லவர்க்கு (நோ பேசக்கூடாது )உங்களையும் சேர்த்து
புரிதல் அறிதல் தெரிதல் எல்லாம் ஒரு ஆவல் .

1069240_4500581852461_1424594751_n.jpg

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக