செவ்வாய், 29 ஜூலை, 2014

இலக்கை நோக்கி நடந்த வேளை ..!

எருக்களை வாசமும் ..
எருமையின் சத்தமும் ..
பாதை கடந்து போகையில் ..
கூடவரும் நாயுருவியும் ...
கால்களை கண்டவுடன் ..
வெட்கப்படும் தொட்டா சிணுங்கியும் ..
மெதுவாக குற்றி கூடவரும் ..
நெருஞ்சி முள்ளும் ..
ஆற்றுப்படுக்கையில் கோலம் போடும் ..
மணலின் ஜாலத்தை குழப்பி ..
நடக்கும் கால்களின் அடியில் ..
சிதைந்து கிடக்கும் நத்தை ஓடும் ..
எட்டி பிடித்து ஏறுவதுக்கு ..
கைகள் பற்றி பிடிக்கும் வீரை மரவேர் ..
சரசரக்கும் சருகு இலைகள் ..
அதுக்குள் வசிக்கும் சாரைப்பாம்பு ..
என் காலடி சத்தத்தில் எழுந்து ஓடும் ..
பெருச்சாளியும் ..சிறு பூச்சியும் ...
நிசப்த்தம் கலைத்து விழிக்கும் ..
சிறுவான் குரங்கு கூட்டமும் ..
காட்டி கொடுக்காது அமைதி ..
காக்கும் ஆள்காட்டி பறவையும் ..
கூடவே வரும் என் நிழல் ..
என் முன் தெரியமுன் நான் ..
போய் சேரவேண்டும் இலக்கு நோக்கி ..
விடிந்து விட்டால் மறைப்பு தேவை ..
தெரிந்து விட்டால் அறிந்து விடுவார் ..
ஆகையால் சற்று ஓய்வு எடுப்போம் ..
சூரை பற்றைக்குள் நாம் ..
தோழனின் விழிப்பில் எம் ..
அசதி உறக்கம் விழி மூடும் .


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக