செவ்வாய், 22 ஜூலை, 2014

ஒரு நாள் தீர்க்கப்படும் ..!

விளையாட்டா விளையாட சின்னவர்கள் ...
பொம்மை கேட்டனர் ..
கொடுக்கப்பட்டதோ பொம்மை துப்பாக்கி ..
ஆண்டுகளா பல சிறார் விளையாடி போன ..
அதே குருதி தேய்த்த பழைய துவக்கு ..
இதை வைத்திருந்தவன் இறந்து போய் ..
ஒருவருடமும் இல்லை அப்ப நாலு வயது ..
அப்பொழுது இவன் பிறந்து இருந்தான் ..
இவன் அருகில் நான் இருக்கும்போதே ..
அவன் வெளியில் விளையாடியபடி நின்றான் ..
டும் என சத்தம் வந்தால் ஓடி வரும் அவன் ..
அன்று மட்டும் வரவில்லை ஏனோ ..
சீறி வந்த ஏவுகணைக்கு தெரியுமா ..
அவன் ஆசைப்பட்டது பொம்மை..
துவக்குக்கு என்று ..
ஏவுகணை ஏவுறவன் பார்வையில்..
அவன் தீவிரவாதி...
ஆனால் அவனுக்கு பொம்மை மேல் ..
தீராத காதல் வியாதி ...
பிஞ்சா கருகி விழும்போது மனம் ..
துண்டா வெடித்து போவதை யார் அறிவர் ..
அதிகாரம் ..ஆளுமை ..திமிர் ..
அடக்கி ஆளும் திறன் ஒன்றினையும் ..
இடமே கொலைக்களம் ஆகும் இடம் ..
கேட்டால் நீதி காப்பு என்பார் தாங்களா ..
நாங்கள் செய்தால் அநியாயம் என்பர் ...
மேடையை போடுவர் ...மேசையை போடுவர் ..
சட்டென முடிவெடுப்பார் சடுதியா செய்வர் ..
பட்டென படையனுப்பி பஞ்சாயத்து வைப்பர் ..
பாவிகளை கொன்றுவிட்டு படத்துக்கு ..
போஸ் கொடுப்பர் பன்னாடு படை என்பர் ..
பணியாரம் சுட்டவனை சுட்டுவிட்டு ..
தீவிரவாதி தலைவர் என்பர் ...
பணமும் ..சூழ்ச்சியும் வைத்து ...
அப்பாவி உயிர்களை எடுப்பவரே ..
ஒருநாள் உங்கள் உயிர் போகும் ..
அதுவும் சிதறித்தான் போகும் என ..
இன்று பொம்மையுடன் விளையாடும் ..
சின்னவன் சொல்லியபடியே ஓடுகிறான் ..
சட சட சட என தன் துப்பாக்கிக்கு ..
வாயால் உயிரோட்டம் கொடுத்தபடி ...
அவன் ஈழத்தவனா இல்லை பலஸ்தீன ..
சிறுவனா என பார்த்தபடி நிக்கிறார் ..
உலக சண்டியர்கள் கூட்டமா .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக