வியாழன், 4 டிசம்பர், 2014

வாழ்தலின் சோகம் ...!

நாள்கள் நெருங்கிறது ..
நினைவெல்லாம் நாட்டை நோக்கி ..
சிறகுகள் இருந்தும் பறக்க முடியா ..
பறவைகள் எல்லாம் கூட்டில் ..

அமைதியா வேடிக்கை பார்க்கிறது ..
தன் எஞ்சிய குஞ்சுகளை காப்பதா ...
இல்லை இழந்த குஞ்சுக்கு ஒளி ஏற்றவா ..
சிறகுடைந்த குஞ்சுக்கு உணவு தேடவா ..

என்ன செய்வேன் சிறு கூட்டில் நான் ...
உணவு தேடி போன என்னவன் வரும்வரை ..
கொஞ்சம் கீச்சிட்டாலும் பக்கத்தில் உள்ளவர் ...
கூண்டோடு பிடிங்கி எறிவர் அல்லவா ...

எனக்கு ஏது நிரந்தர கூடு இவ்மண்ணில் ..
பாலையில் ...வீரையில் ..பனையில் என்று ...
மாறி மாறி தங்கிய களைப்பு இன்னும் போகவில்லை ..
மீண்டும் ஒரு கூடு பின்னும் எண்ண இல்லை ..

இருக்கும் கூண்டில் இருப்பவரை வளர்த்து விட்டால் ..
தனிமரத்தில் நான் மட்டும் உறங்கி கொள்வேன் ...
இங்குதான் பட்டமரமும் ...எரிந்த மரமும் அதிகம் ...
என் மரணமும் தனிமையில் இருக்கட்டும் ...

எவரும் தேடார் என்னவென்று அறியார் ...
புதிர்களுடன் புதினமா போவேன் நான் ..
இருபவர்கள் நினைவுடன் வாழட்டும் ...
ஒருநாள் என் துணை வந்து உரக்க பாடும் ...

என் மரணகீதம் அனைவருக்கும் கேட்க்கும் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக