வியாழன், 8 ஆகஸ்ட், 2013

அன்றாடம் ..!

மேய்ந்து கொண்டு இருந்த மாடுகள் திடீர் என
 தலையை நிமிர்த்தி மேல பார்த்து
தங்களுக்குள் பேசிவிட்டு கிழக்கே நடக்க தொடங்கின 
வேகமாக மிக மிக வேகமாக

கருமேகம் வடக்கு திசையில் சுழன்று மேலுருளும்
 காட்சி அமாவாசை இருளை நினைவு படுத்த
 மாடுகள் வரிசையாய் நடந்தவண்ணம் இருந்தது
 பட்டியை திறந்து விட்டுபரமர் வானத்தை பார்த்தபடி

மிக் 27 தாழபறக்க அவரவர் பக்கத்தில் இருக்கும்
 மரங்களுக்குள் பாதுகாப்பை தேட
அண்ணாந்து பார்த்து சைக்கிள் ஓடி
 வேலியுடன் மோதியவனும் கிடங்கில் விழுந்தவனும்

தங்களுக்குள் சிரித்து விட்டு தம்பாட்டில் 
அலுவல்களை தொடர
 ஒலியின் ஓசைகேட்டு என்ன என இனம் 
கண்டு மக்கள் வீடு போவதும்
மாடு மழைவருவது முதலே தெரிந்து
  பட்டி திரும்புவதும்

வன்னியின் அன்றாட வாழ்க்கை ஆகிப்போனது மக்களுக்கும் மாக்களுக்கும்
பொல்லாத காலம் ஓய்ந்து பொழுதுடன் நிழல்வீச
 எல்லா ஆயாசம்களும் தீர்த்து சனம் எதிர்காலம் தேடி
ஏரும் கலப்பையுமாய் ஆ நல்லம் வசந்தம் இனியாவது வரட்டும் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக