செவ்வாய், 20 ஆகஸ்ட், 2013

எங்கே போகிறோம் நாம் எங்கிருத்து வந்தோம் .!

நாம் வாழ்வும் பண்பாடும் கலாச்சாரம் என எமக்கான தனி அடையாளங்களுடன் வாழ்ந்த  இனம் இப்பொழுது பயணிக்கும் பாதை மிக கவலையானது எமக்கான அடையாளங்களை தொலைத்து நாம் என்ன லாபம் அடைய போகிறோம் ஒரு சாதாரண கைபேசியில் தொடங்கி வீட்டு கழிவறைக்கு போடும்  செருப்பு வரை என்னுடையது விலை மதிப்பாக இருக்க வேணும் என்பதே எமது எண்ணம் ஆகி இருக்கு கலக்சி போனில் அல்லது ஐபோனில் என்ன இருக்கு அதை பயன் என்ன பாவனை திறன் என்ன என்றுகூட அறியாது நான் மார்க்கான ஒரு போன் வைத்துள்ளேன் என்பதில்தான் என் கௌரவம் அடங்கி இருக்க என போகிறது வாழ்க்கை

வருமானத்துக்கு  மேலக செலவுகளும் பிழைகளுக்கு  நாங்கள் ஊரில பில்கேஸ் என நீட்டி முழங்கி கதைகள் சொல்லி  எங்கள சுயங்களை அவர்களுக்கு  விளக்காது ஒரு கனவு உலகத்தில் பயணிக்க செய்வதால் எமது வாழ்வியல் அழிந்து போகும் ஒழிய வேறில்லை வெள்ளைக்காரன் சுகமா கூப்பிட பெயர் பார்த்து வைப்பது முதல் போடும் உடுப்பு வரை அவர்கள் வாசனை  பத்துமாதம் சுமந்தவள் ஆசையாய் ஒரு பெயர் வைக்க முடியுதா.. பிள்ளைகளை எமது கலாச்சரம் பற்றி புரிதலை அறிதலை அவர்களுக்கு சொல்லி கொடுப்பது வெட்கமா படுத்து எமக்கு நாலு சபை சடங்குக்கு கூடி போனால் தமிழ் கதைக்க பஞ்சி படுவது தொடக்கி உறவுகளை நலம் விசாரிப்பது வரை போலியான பாவனை
நான் பார்த்தவரை அம்மா பக்கத்தில் இல்லாவிட்டால் அந்த பெண்பிள்ளை அழகா தமிழ் கதைக்கும் அதை கவனிக்கும் தாய் உடனம் அருகில் வருவர் வந்தவர் சொல்லும் கதை அவளுக்கு தமிழ் அவளவா வராது என்பதே
அழகா கதைத்த பிள்ளை  நடிக்க தொடங்கும் எதுக்கு இந்த வீண் பில்டப்பு எங்களை நாங்கள் உயர்வா காட்ட எவளவு கேவலமான வேலையும் சிரிச்ச படி செய்வம் பணம் உள்ளவர் பார்த்து உறவு முறை சொல்லி கொடுப்பது மற்றவர்களை கண்டுகொள்வது இல்லை பின்னாளில் பெண்பிள்ளைகள் உறவுமுறை தெரியாமல் காதல் வயப்படுவது பின்னர் தெரியவருவதும் வெளிநாடுகளில் அதிகமானதா இருக்கு உள்ளநாட்டு  தொடர்நாடகம் எல்லாம் பார்த்து பழகி அதிகமா மாமனை காதலிக்க தொடங்கி இருக்கு ஒரு தலைமுறை இது ஆரோக்கியம் ஆனதா
பத்து தலைமுறை வாழும் அராபியனும் ஆபிரிக்கணும் இன்னும் தன்னை காத்து மொழி காத்து உடைகாத்து நிக்க நாம் ஒரு தலைமுறை வரவில்லை பெயர் மாறி உடைமாற்றி தலைமுடி முதல்வரை மாறி நிக்கிறம் நாம் எங்கிருத்து வந்தம்

செல்லமாக கேட்டது எல்லாம் வாங்கிகொடுத்து கஸ்ரம் துன்பம் காட்டாது பிள்ளை வளர்த்து இரவு பகல் பாராமல் வேலை செய்து அடிமாடாய் தேய்த்து சிறுக சேர்த்த பணத்தில் கலியாணம் பண்ணி வைத்தால் கட்டி இரண்டு கிழமையில் வீடில் வந்து நிக்கு டிவைஸ் வேணும் என்று கரணம் சொல்வதுக்கு இல்லை கேட்பது வாங்கிதாறார் இல்லை அவரின் குடுப்பத்துக்கு அடிகடி காசு அனுப்புறார் என்பதே அதிக காரணமா இருக்கு அதுக்கு பெற்றோரும் ஒத்து ஊதுவது தான் கொடுமை

நாம் எங்கிருத்து வந்தோம் எங்கள் ஆணி வேர் என்ன எங்கள் கிளைகளின் பரப்பு விழுதுகளின் வலு இவைகளை சொல்லி வளர்க்காது ஒரு கற்பனை கலந்த கனவு உலகில் வாழ்த்து காட்டி நடித்து காட்டி எம் வேசங்களை சரியாய் போடுவரை நாடகம் தொடரும் ஒருநாள் எங்கள் முகமூடி கிழியும்போது எங்கோ போய் புதைக்க போகிறோம் எங்கள் நிஜ முகங்களை .

வேட்காவும்....விஸ்கியும் ..வியூட்டி பாலரும்..தான் எனது உலகம் வாழ்வியல் என என்று நாம் இறங்கினமோ அன்றே எம்மை எம்முள் தொலைத்து விட்டு பக்கத்தில் தேடிக்கிடைக்க போவது இல்லை சம்பளம் 30 யுரோ முகம் பேசியர் செய்ய 35 யுரோ ஐந்து யுரோ வட்டிக்கி  வாங்கி மேக்கப் போடும் சமூகம் ஆரோக்கியமானது இல்லை வெளிநடப்பை பார்க்கும் போது ஆதங்கம் தாங்க முடியவில்லை யாரிடம் சொல்வது அதுதான் இங்கின கொட்டி தீர்த்தம் மக்ளே.

இந்த மாதிரி சமூகத்தில் தான் வாழ்கிறோம் நாம் படம் கதை சொல்லும் .
1186041_4658373757160_289471402_n.jpg

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக