ஞாயிறு, 22 ஜூன், 2014

மகனதிகாரம் ..2

9
நீ செய்யும் குழப்படி பார்த்து ....
அப்படியே பேரனை போல என ...
அப்பத்தா சொல்கையில் எனக்குள் ...
ஓடும் ஒரு இனம் புரியா உணர்வு ..
மகனே .

10
எனது சாப்பாட்டு தட்டில் ..
இருக்கும் அப்பளத்தை எடுக்க ..
நீ அம்மாவிடம் அனுமதி கேட்பது ..
பயமா ...மரியாதையா என தெரியாமல் ..
நான் மகனே .


11
நீ கேட்டு அம்மா கொடுக்காவிட்டால் ...
நீ நின்று பார்க்கும் முறைப்பு பார்வை ...
அதைகானும் அம்மா அப்படியே நீ ....
உன் அப்பா போல கோவத்தில் என ..
சொல்லும்போது நமக்குள் ஒரு ...
திமிர் வந்துதான் போகுது
மகனே ..

12
அம்மா அடிச்சுட்டா என முறைப்பாடு ...
கேட்டுட்டு நான் அம்மாவை ஒரு தட்டு ...
அதை பார்த்து நீ சிரிக்கும் சிரிப்பில் ..
தொலைந்து போகிறது எனது துன்பம் ...
மகனே .

13
துள்ளி குதித்து விளையாடு ..
அப்பா மேல் வேணாம் மகனே ..
தரையில் என்கிறேன் சிரிக்கிறான் .
கண்களை சிமிட்டி என் மகன் .

14
அப்பா தூங்கிட்டு இருக்கிறார் ...
கூச்சல் போடாமல் விளையாடுங்கள் ..
பிள்ளைகளை அதட்டி வைக்கும் அம்மா ..
தன் கணவன் உறக்கம்.. தனக்கு முக்கியம் ..
மனைவிக்கு ....மகனே .

15
உன் நடையில் ......
என் தாத்தாவின் மிடுக்கு ....
உன் பேச்சில் .... என் அப்பாவின் சாயல் ...
உன்னில் என்னைக்காண...
உன் மகன் வரும்வரை ...
காத்திருப்பேன் மகனே .

16
உழைத்த களைப்பில் ..
முதுமையின் பிடியில் ..
மனம் சோர்த்து போகையில் ..
என் தோளில் கை போட்டு ...
என்னப்பா யோசினை என்று ...
என் மகன் கேட்கையில் தான் ...
நிமிர்த்து பார்க்கிறேன் என் விதை ...
விருட்சமா  நிப்பத்தை வியப்புடன் ....
நான் .
மகனதிகாரம்..!

1 கருத்து: