ஞாயிறு, 5 அக்டோபர், 2014

மீளா நட்புலகு வன்னி ..!

வன்னி மண்ணும் நட்புக்களும் என்பது எழுத்துக்களில் சொல்லவோ கண்முன் கொண்டுவரவோ முடியாத ஒரு அடன்பன்கொடி உறவுனலாம் ..
 
வழமையா வேலை வெட்டி இல்லாமல் சுற்றி திரியும் எமக்கு சாயங்காலம் ஆகிட்டாசைக்கிளை தூக்கிட்டு போறது  சந்தைக்கு பக்கமா ஒரு வீதி இருக்கு அதில் எல்லோரும் கூடி நிப்பது வழமை பம்மல் ...பகிடி ..சேட்டைகள் என்று போகும் அந்த இனிய சாயங்கால பொழுது ..
 
சந்தையில் வேலை முடிந்து நிக்கும் பெடியளும் அதில வந்துநின்று ஒரு குட்டி மகாநாடு நடக்கும் ஒரு ஓரமா போகும் போது கடைக்கண் பார்வை பார்த்து போகும் பெண்பிள்ளைகளும் என்ன இன்னும் நம்மாளை காணவில்லை என்று உள்மனதில் ஏங்கும் தோழனும் தூரத்தில் ஆளைக்கண்டால் கண்களால் ஆள் வருது என்று சொல்லும் பாலாய நட்பும் என்று அந்த பொழுதுகள் இனிமையானவை ..(காவல்துறை வந்தா ஆளுக்கு ஒரு பக்கம் போறது வேறுகதை ;) )
 
அப்படி ஒருநாள் நிக்கும்போது வழமையா அங்கு இறைச்சி கடையில்  வேலைசெய்யும் ஐயாவும் எங்களுடன் வந்து நின்று கதைப்பார் அப்படி ஒருநாள் கதைத்துக்கொண்டு நிக்கும்போது அவரின் உயர்தரம் படிக்கும் மூத்த மகள் அந்த வீதியால் வந்தால் வழமையா அந்த பிள்ளை வேறு வீதியால் போறது அப்பா நிப்பார் என்று அன்று வேறு ஒரு பிள்ளையுடன் வந்தார் ...
 
தூரத்தில் கண்ட தோழர்களுக்கு அவர் மகள் என்று தெரியாது எட்ட வரும்போதே எங்கடா இருக்கிறாள் இவள் ஒருநாளும் காணவில்லை நல்ல அழகான பிள்ளை என்று நக்கலை போட அவள் ஒருபார்வை பார்த்திட்டு போனால் பகிடி என்னென்றால் பக்கத்தில் நின்ற ஐயா தன் தாடையை பெருமையா தடவியபடி சொன்னார் பாருங்க ''அப்பன் அழகா இருந்தா மகளும் அழகாத்தான் இருப்பால் பெடியள்'' என்று ..
 
 
அவள் பார்த்தது அப்பருக்கு பெடியளோட என்ன அலுவல் என்றுதான்.... ஐயா அப்படி சொன்னதும் ஒருவர் முகத்திலும் ஈஆடவிலை என்ன செய்வது என்று ஒரு வியப்பு ..திகைப்பு வந்திட்டு ஆனால் அவர் சொன்னார் பெடியள் என்றால் அப்படித்தான் இதில் என்ன இருக்கு அப்படி பார்த்தா நான் உங்களுடன் நின்றதுதான் பிழை என்று சொல்லி எம்மை எல்லாம் ஒரு சகய நிலைக்கு கொண்டுவந்தார் ...
 
பிறகு ஒருநாள் தீபாவளி என்று அனைவரையும் வீட்டுக்கு அழைத்து எல்லோருக்கும் சாப்பாடு போட்டு தன் குடும்பத்தில் ஒருவராக எம்மை எல்லாம் ஆக்கி விடார் அன்றில் இருந்தது நாம் அவளின் அண்ணன் ஆகிபோனோம் அவள் எமக்கு தங்கையாகி போனால் எங்கு கண்டாலும் போனாலும் டேய் அண்ணன்களா வீட்டுக்கு போங்கடா என்று எம்மை சண்டைக்கு இழுப்பவளா இருந்தால் ...
 
 
வன்னியின் பெருமையும் ..உறவும் ..நட்பும் சாதி மதங்களை கடந்தது மனிதமா இருப்பதுக்கு எல்லோரும் எல்லோரையும் அரவணைத்து கூடி வாழ்த்ததே காரணம் எனலாம் ..
 
vanni-600x377.jpg

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக