வியாழன், 30 அக்டோபர், 2014

என் கவலை ..!

கையில் நெருப்பிருக்கு என்னிடம் ..
பற்றவைக்க தான் திரி இல்லை ..

ஆடைக்கடை முன் நின்று பார்த்தால் ..
ஆடை யாரு கொடுப்பார் இலவசம் ..

ஆயிரம் கேள்வி எழும் மனதில் ..
ஏதாவது ஒரு கேள்விக்கு பதில் வேணும் ..

என்னை துறந்து பார்க்க விரும்பி ..
அதுக்கான படிப்பை ஏன் நான் படிக்கவில்லை ..

வீழ்த்தவர் எல்லோரும் அரக்கராம் பூவியில் ..
அதுவும் தமிழாரம் வரலாற்றில் எப்ப மாறும் ..

ஆரியன் கொன்றது தமிழனை என்றால் ..
முருகன் வதைத்தது யாரை என்னும் கேள்வி ..

தமிழ் மொழியா அல்லது தனி இனமா ..
யாரு பிரித்தார் ஏற்ற தாழ்வை ..

ஆண்டாண்டு காலம் கடைபிடித்த எல்லாம் ..
நவீன யுகத்தில் மட்டும் எப்படி பிழையானது ..

என் பாட்டன் சிந்திக்கவே இல்லையா ..
எனக்கு மட்டும் எப்படி வந்தது சிந்தனை திறன் ..

கோயிலை வீட்டை கட்டிய அரசுகள் ....
ஏன்  இனத்தை மொழியை கட்டமைக்கவில்லை ..

மூணுநாள் முதல் வீட்டில் ஆடு வேண்டி கட்டினால் ...
சிறு பராயத்தில் எனக்கு தெரியும் தீபாவளி நெருங்குது என்று ..

சுற்றம் எல்லாம் பங்கு கொடுத்து கூடி இருந்த காலம் எங்கே ..
இப்ப மட்டும் பங்குகளா பிரிந்து போனோம் எதுக்காக இங்கே ..

விரதம் பிடித்தால் ஊரில் பெருமை இருக்கு ..
வெளிநாட்டில் மட்டும் ஏன் முடியாமல் போனது ..

கலாச்சார வளர்ச்சி என்று எம்மை நாமே அழித்தோம் ...
இதை நாமே மொழி இன வளர்ச்சி என்றோம் கூசாமல் ..

தேசியமும் தேசமும் சினிமாவை எதிர்ப்பதில் நிக்கு ..
இன்னும் சில காலம் நாம் எங்க நிப்பமோ பராபரமே ..

அழித்து விடு என்று வேல் கொடுக்க தாய் இருக்கா ..
ஆனால் வேல் வாங்க தான் மகன் இல்லை .

2 கருத்துகள்:

  1. நியாயமான கவலை. சில்லறைகள் குலுங்கும் பொழுது மௌனம் காப்பதும் ஒருவித ராஜதந்திரமே .கவிதைக்கு வாழ்த்துக்கள். தொடர்ந்தும் ஆழமான பார்வைகளை தொட்டுச் செல்லுங்கள் .

    பதிலளிநீக்கு
  2. என்ன செய்வது கோவணம் கட்டும் ஊரில் வேட்டி கட்டினால் பையத்தியக்காரன் போலத்தான் நாம் இப்போது.கவிதை அருமை சகோ.

    பதிலளிநீக்கு