ஞாயிறு, 5 அக்டோபர், 2014

உங்களிட்ட சொல்லாமல் விடுறதே ..!

நேற்று ஒரு சம்பவம் வேலை இடத்தில் நடந்தது எல்லோரும் சாப்பிட அமர்த்து இருக்கும்போது கண்டவர் ..காணாதவர் என்று வர அனைவருக்கும் மாறி மாறி வணக்கம் சொல்லிட்டு உணவை சூடாக்கி சாப்பிட தொடங்கும் நேரம் பார்த்து பக்கத்தில் இருந்த ஆளின் தொலைபேசி ..பார்த்த முதல்நாளா என்னும் பாடலுடன் ஒலியை எழுப்ப அனைவரும் சத்தம் வந்த திசையை நோக்கி பார்க்க சட்டென போனை எடுத்து  ஐந்து நிமிடம் கழித்து எடுக்கிறேன் வையும் என்று பதில் சொல்லி இணைப்பை துண்டித்தார் அவர் ...


அந்த போன் வந்த நேரம் தொட்டு அருகில் இருந்தவருக்கு முகம் மாறிட்டு சாப்பிடாமல் அவரை பார்ப்பதும் பின் சாப்பாட்டை பிசைவதுமா இருந்தார் அவரின் செயலை பார்க்கும்போது ஆள் செம கடுப்பா இருக்கு என்று மட்டும் விளங்குது ..சரி என்னதான் பிரச்சினை என்று கேட்டார் அந்த போனை எடுத்து பேசியவர் உடனம் கடுகடுத்த தொனியில் நீ என்று தொடங்கினார் நீ செய்வது ஒன்றும் நல்லா தெரியவில்லை யாரு இப்ப போன் அடித்தவள் ..எப்படி பழக்கம் ..இது என்ன புது பழக்கம் ..நீ கலியாணம் கட்டின ஆள் என்று அவளுக்கு தெரியாதா என்று சராமாரியா கேள்விகள் அவரை நோக்கி எழுப்ப போன் எடுத்தவர் சொன்னார் இங்க நோமல் நீங்க என் டென்ஷன் ஆகுரியல் வேலை பாருங்க அது என்னுடைய பிரச்சினை என்று ஒரு நக்கலா பதில் சொன்னார் ....

இவருக்கு கடும் கோவம் வந்திட்டு உடனம் எழும்பி போனவர் கொஞ்ச நேரம் செல்ல வந்து உண்ட போனை தா என்று வாங்கினார் அவரும் கொடுத்துட்டு இருந்தார் ..பிறகு பார்த்தா அவரின் வந்த போன் நம்பரை எடுத்து இவர் அழைப்பை ஏற்படுத்தினார்

எதிர் முனையில் ...

ஹலோ

இவர் ...வணக்கம் நீங்க யாரு 

போன் எடுத்தது நீங்க நீங்க சொல்லுங்க யாரு என்று ..

இவர் ..நீர் ஏன் மற்றவர் குடி கெடுக்க நிக்கிறீர் அந்த பிள்ளை பாவம் இவன் கலியாணம் கட்டி பிள்ளை வேற இருக்கு உனக்கு என்ன கதை வேண்டி இருக்கு அவன் கூட ..

ஹலோ ..மரியாதை யாரு யாரோட கதைத்தது இப்ப உங்களுக்கு என்னதான் பிரச்சினை ..

இஞ்ச பாரு பிள்ளை அது எல்லாம் அதர்மம் கடவுளுக்கு ஏற்காது இப்படி செய்யுறது தப்பு அதுக்கு எல்லாம் பேஸ்புக் தான் காரணம் என்று நினைக்கிறன் ...

அண்ணனே நீங்க யாரு ..யாரோட கதைக்கணும் உங்களுக்கு என்னதான் பிரச்சினை ..

அவனை நீ விட்டுடு அவன் குடும்பம் இருக்கு பிள்ளைகள் எல்லாம் சின்ன சின்ன ஆக்கள் உனக்கு தேவை என்றால் ..........................எங்காவது போறது .................நீ எந்த ஊர் ..யாற்ற மகள் ..என்று செமையா சண்டை போகுது ...

ஹலோ.. அப்படி எல்லாம் விடமுடியாது நான் அவரு கூடத்தான் வாழுவன் நீங்க என்ன பண்ண முடியுமோ பண்ணுங்க இங்க போன் எடுத்து வெருட்டுற வேலை எல்லாம் வேணாம் வையுங்க போனை என்று அதட்டலா கதைத்துபோட்டு போனை வைத்தார் அந்த பெண் ...

இந்தாள் அங்க போகுது இங்க போகுது சீ ..சீ .என்ன மனுஷர் இப்படி எல்லாம் வாழுறதே இதுக்கு தூங்கி சாகலாம் அல்லது ஓடுற மெற்றோ வழிய விழுந்து தொலைக்கலாம் ..

சரி என்னதான் பிரச்சினை என்று கேட்பம் என்று தனியா ஆளை அழைத்து ஏன் அண்ணே இவ்வளவு கோவம் என்னாச்சு ..

நீ இப்படி செய்யுறது எனக்கு பிடிக்கவில்லை நான் உன்னை அப்படி ஒரு நல்ல பிள்ளை என்று நினைக்க நீ ஏன் இப்படி குடும்பத்துக்கு ஏற்காத வேலை செய்யுற ..

இது என்ன இழவு நான் எங்க பிழை செய்தேன் ஆண்டவா என்னாச்சு உங்களுக்கு ..

இப்ப சாப்பிடும் பொது உனக்கு போன் அடிச்சது யாரு ..

மனுஷி ஏன் ..

இல்லை அவள் இல்லை உண்மையை சொல்லு ...

இது என்ன கொடுமை மனுஷிதான் வேணும் என்றால் வந்த நம்பருக்கு திருப்பி அடியுங்கோ இந்தாங்கோ என்று போனைக் கொடுக்க அந்த நம்பருக்கு இணைப்பு போனது ..மனுஷன் போன் பண்ணுறார் என்று நினைத்து ஓம் சொல்லுங்க என்று தொடங்கினால் அவள் இல்லை பிள்ளை நான் நவம் அண்ணை சும்மா எடுத்தனான் கனநாள் காணவில்லை அதுதான் சுகம் கேட்பம் என்று ..எப்படி இருக்கிற பிள்ளைகள் எல்லாம் சுகமே என்று கேள்விகேட்டு மழுப்பிட்டு தந்தார் நானும் ஓகே என்று சிரிச்சுட்டு போனை வாங்கி வைத்தேன் ...

இப்படியே பின்னுக்கு போனா குழப்பம் இங்கதான் தொடங்குது என் போன்  அழைத்த பொழுது என் மனைவியின் நம்பரை நான் லவ்வர் என்று அதில் குறிப்பிட்டு வைத்துள்ளேன் நாம் காதல் கலியாணம் என்பதால் என்னமோ அந்த பெயரில் இப்ப ஒரு நாலு வருடம் மேலாக இருக்கு அழைப்பு வரும்போது அந்த பெயர் திரையில் தெரிய எனக்கு பக்கத்தில இருந்தவர் எங்க குடும்ப நண்பர் நவம் அண்ணை அதை கவனித்து விட்டார் இவனுக்கு யாரு லவ்வர் ....எடுத்த போனை ஏன் கதைக்காமல் கட் பண்ணி பிறகு எடுக்கிறன் என்று வைத்தான் ..நான் பக்கத்தில இருப்பதாலோ என்று அவர் பலமாதிரி யோச்சிச்சு குழப்பி போனார் ..

அதனால் என் போனை வாங்கி வந்த நம்பர் எடுத்து தன் போனில் இருந்து அழைத்தார் இவர் என் மனுஷிக்கு தான் போனை போடுறார் என்று எனக்கு லையிட்டா விளங்க நான் வீட்டு போனுக்கு அடித்து ஆளை குழப்படி என்று நம்மளுக்கு சொல்ல அவளும் எகிறி கதைக்க இவர் நல்லா குழம்பி போனார் ..

சரி பாவம் மனுஷன் குழம்புது என்று நான் உண்மையை சொன்னேன் இப்ப அவர் எப்படி வீட்டுக்கு வாறது அந்த பிள்ளையை கண்டபடி பேசிப்போட்டன் சே ..முகத்தில் முழிக்க முடியாமல் பண்ணிட்ட நீ உன்ர விளையாட்டுக்கு நானே கிடைச்சேன் என்று பேசிட்டு போறார் ..

ஆகா நல்லது கெட்டது தெரியாமல் களத்தில் இறங்கினது அவரின் பிழை பாருங்கோ ...அவரின் நல்ல மனசை எண்ணி நான் பெருமைப்படுறன் எங்காவது கதைச்சுட்டு போறான் என்று இருக்காமல் நேரடியா கேட்டார் அதுதான் எனக்கு ரொம்ப பிடிச்சு போன விஷயம் ...

அவர் மேல் இருந்த மதிப்பும் ..நட்பும் இன்னும் இருமடங்கா கூடியது எனக்கு .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக