ஞாயிறு, 5 அக்டோபர், 2014

சங்கம் ..!

சங்கம் வளர்த்து தமிழ் வளர்த்த குடி ...
சங்கள் தொடங்கி வயிறு வளர்க்கிறது ..
மாதம் மாதம் கூடுகிறார் சேர்கிறார் ..
டீயும் ..வடையும் ..ரோலும் கட்டியபடி ..

ஒரு குடும்பம் அதில் நாலுபேர் நாங்களே ..
எல்லாம்  மாமன் மச்சான் சித்தப்பன் ..
நீ இன்று தலைவர் நான் நாளைய தலைவர் ..
எங்களுக்குள் எடுக்கும் தீர்மானம் இது ..

கணக்கும் இல்லை வழக்கும் இல்லை ..
கேள்விகேட்க பத்து ரூபா கொடுக்கணும் ..
பதில் சொல்ல செக் கொடுக்கணும் போல ..
சிட்டைகள் வந்து விழுகுது சிரமதான வேலையாம் ..
சீரழிந்து கிடக்கும் உறவு பாணுக்கு காசில்லாமல் ஊரில் ..

சீட்டு காசும் வட்டிகாசும் வெள்ளையா ஆகுது சங்கத்தில் ..
சின்னவீடு எல்லாம் பெரியவீடு ஆகுது லோனில் ..
சின்னக்கடை சூப்பர் மார்கெட் ஆனது ஊரான் காசில் ..
இதை கேட்கவும் காசுகட்டனும் சங்கத்தில் ..
என்னடா இது ஊருக்கு வந்த சோதனை ...

தெனிந்திய நடிகை வந்து ஆடினால் மேடையில் ...
கூடவே பாட்டுக்காரன் வேறையாம் செலவு யாரு ..
அதுவும் சங்கம்தான் அங்க சங்கரர் பிள்ளை பாலுக்கு அழுகுது ..
லட்சம் கொடுத்து நடிகை கூப்பிட்டோம் ...
சூப்பரான சிங்கர்களை அழைத்தோம் உங்களுக்கா ..

இல்லை அதிலும் இருக்கு உள் கூத்து ..
வாறதோ இரண்டு பேர் அவர்களுடன் வாறதோ ..
இருபது பேர் பின்னியில் வியாபாரம் கோடியில் ..
இதுக்கு சங்கம் ஒரு கை பிடியில் ..
நடிகனை கூப்பிடும் செலவில் ஊரில ..
நாகம்மைக்கு ஒரு கொட்டில் போட்டு கொடுக்கலாம் ..

திட்டம் எல்லாம் சேது சமுத்திரம் போல ..
அங்கிருத்து வெட்டினா எனக்கு இலாபம் ..
இங்கிருத்து வெட்டினா உனக்கு நட்டம் ..
எங்கிருத்து வெட்டுவே என்று பேசியபடி ..
இருக்கு எங்கிருந்தோ வந்தவன் கப்பல் விடுவான் ..

ஒரு கார் எடுத்து நாலாவது கியர் போட..
இடம் காணாது ஊர் முடிந்திடும் எல்லையில் ..
இதில என்னது உன்னது என்கிறார் கொள்ளையில் ..
இது எல்லாம் பார்த்தபடி இருக்கிறேன் படலையில் ..
தண்ணி வவுஷர் எப்பவரும் என்று வெய்யிலில் ..

சங்கம் எல்லாம் சங்கமம் ஆனது சந்தியில் ...
சங்கதிகள் பேசியபடி சங்கூதுபவன் இவன்தான் ..
சட்டத்தை கையிலெடு சடப் மவுத் என்று பூட்டு ....
சாட்சியும் இல்லை சண்டையும் இல்லை நாம் ..
சங்கம் வளர்த்து வயிறு வளர்ப்போம் வாரீர் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக