புதன், 30 ஏப்ரல், 2014

ஒரு பொழுது ரயிலில் .!

வேலையின் களைப்பு வீடு செல்லும் வேகத்தில் ரயில் தரிப்பிடம் நோக்கி வேகமா வந்து கொட்டாவி விட்டபடி கடிகாரம் பார்த்தேன் இன்னும் இரண்டு நிமிடம் வந்திடும் ரயில் சுற்றும் முற்றும் யாராவது தெரிந்த முகம் நிக்கும் என்னும் நினைவில் கண்களை எல்லா திசையிலும் சுழற்றி பார்த்த படி மனதில் நாட்டு நிலவரம் செய்திகளும் வந்து வந்து போனது அப்பொழுது பெரும் இரைச்சலுடன் தரிப்பிடம் வந்து நின்றது ரயில் .

ஏறி நடுப்பக்கம் ஒரு சீட்டில் இருந்து விட்டால் எழும்ப வேண்டிய தேவை இருக்காது என்று எண்ணி முண்டி அடித்து இடம் பிடித்து அமர்த்தேன் பக்கத்தில் ஒரு ஆபிரிக்க நாட்டு இளையன் அவனின் காதுகளில் மாட்டி இருந்த மார்க்கான கேட்போனில் இருந்து வந்த பாடல் இரைச்சல் என் காதுகளுக்கு வண்டுகளின் சத்தமா கேட்டது ...அப்படியே தலையை நிமிர்த்தி முன்னாடி பார்த்தேன்  உதட்டு சாயம் பளபளப்பா இருக்க தனது நாவால் ஈரம் கொடுத்து தன்னை சிறிய கண்ணாடியில் ரசித்தபடி ஒரு வெள்ளை கண்களை சிமிட்டி புன்சிரிப்புடன் அமர்த்து இருந்ததாள் நானோ ரயிலின் கண்ணாடி ஊடக வெளி உலகை வெறித்து பார்த்தபடி சேர்வாய் தலை சாய்த்து குறைக்கண்ணில் இருக்கையில் ..

அப்பொழுது பின்னாடி இருந்து இருவரின் உரையாடல் என் காதுகளுக்கு அண்மையா கேட்டது .
உங்களுக்கு விஷயம் தெரியுமே அக்கா அவள் கலா வட்டிக்கு கொடுத்தவன் காசை கொடுக்காமல் கொண்டு ஓடிட்டான் அவளின் திமிருக்கு இன்னும் வேணும் ...
ஓ ... நானும் கேள்வி பட்டனான் இவர் நவத்தாரின் மனுசியும் அவாவும் நல்ல கூட்டு இருவரும் சேர்த்துதான் மாறி மாறி கொடுக்கிறது ..
ஒருக்கா நான் காசு மாறி கேட்டதுக்கு உங்கட மனுஷன் ஒரு வேலை தான் செய்கிறார் எப்படி வட்டி தருவியல் எண்டு கேட்டவள் இப்ப பார்த்தியே ....என தங்களின் ஆதங்கத்தை கொட்டி தீர்த்தபடி அவர்களின் பயணம் தொடருது .....

முன்னாடி ஒரு தொலைபேசி ...அம்மா என்று அழைக்காத உயிர் இல்லையே ...என்னும் பாடலுடல் எனது மனதில் ஆள் புதுசா வந்து இருக்கு வெளிநாடு இன்னும் அம்மா நினைவு போகவில்லை வந்த புதிதில் நானும் இப்படியான பாடல்கள் கேட்பது அதிகம் என்பதால் மனதில் ஊகித்தபடி இருக்க போனை எடுத்து ஹலோ என்கிறான் அந்த வாலிபன் ..

ஓம் அம்மா வா ..சொல்லுங்கோ கேட்குது ..
என்னம்மா செய்ய இப்பவும் ஒரு வேலைக்குதான் போய் கேட்டுட்டு வாறன் ....
ம்ம்ம் ..அப்படியா சொன்னவர் ....இன்னும் எனக்கு வீசா சரிவரவில்லை அம்மா ...

ஆ ஆ இல்லை இருக்கிற ரூமுக்கு காசு கொடுக்கவே சரியான கஷ்டம் எனக்கு அம்மா .
ஒ ...வட்டி காசோட திருப்பி தரலாம் எண்டு சொல்லுங்கோ எப்படியும் நான் இந்தமாதம் வேலை தேடி எடுத்துடுவன் ஒரு முன்று மாதம் பொறுக்க சொல்லுங்கோ அம்மா .
என்னது இல்லையாமா ...சரி மாமாவிடம் கேட்டு பாருங்கோவன் ..அதுசரி அவர் பேசுவார்தானே வந்த காசே இன்னும் கொடுக்கவில்லை ...
சரி அம்மா நான் இங்க சிநேகித பெடியளிடம் கேட்டு பார்கிறேன் நீங்க கவலை படவேண்டாம் எப்படியும் மீட்டு எடுக்கலாம் அழவேணாம் அம்மா என்ன ...
தங்கச்சி சுகமே ஓகே உங்களுக்கு காசு நான் பிறகு காட் போட்டு எடுக்கிறேன் அம்மா வையுங்கோ போனை என்ன ஓகே ஓகே கவலை படாமல் இருங்கோ என்ன ஓகே ஓகே ..

என்றபடி துண்டிக்கப்பட்டது அவனின் உரையாடல் நிமிர்த்து பார்க்கிறேன் அவனின் கண்களில் நீ நிறைத்து இருந்தது குனித்தபடி நின்று இருந்தான் கண்கள் உடைவது பிறருக்கு தெரியாமல் இருக்க உரையாடல் கேட்ட எனது மனமும் கலங்கி போயிட்டு ஏன்?எமக்கு மட்டும் இப்படி ஒரு வாழ்க்கை என எண்ணியபடி இருக்க இடதுபக்கம் ஒரு பெரிய சத்தம் ...

வாட் வாட்  பாய்ஸ்  வாட் வாட் பாய்ஸ்... என்னும் அழைப்பு மணியுடன் வேறு ஒரு தொலைபேசி காது மாட்டி கொலுவியபடி டேய் ..மச்சான் சொல்லு எங்க நிக்கிற ....
இப்ப ஒரு ஐந்து நிமிடத்தில் வந்திடுவன் நில்லு என்ன பெடியள் எல்லாம் வந்திட்டங்களா இஸ் பொட்டுக்கு ....என்னவாம் அவர் அவருக்கு ஒரு பொண்டு பிளான் இருக்கு இண்டைக்கு போடுறன் காதை பொத்தி ..கண்டா சொல்லு வாறன் சுள்ளான் என்று ....மச்சி இண்டைக்கு ஏரியாவை ஒரு ஆட்டு ஆட்டுறம் ஓகே ...
பிறகு அவள் என்னவாம் ......விடு மச்சி அவள் ஒரு மொக்கை பிகர் அவளுக்கு நீ ஏன் அலையிற விடு விடு ..ஓகே ரயிலில நிக்கிறன் நேர சந்திப்பம் என்ன வாறன் வை .

திரும்பி பார்த்தேன் இன்னும் பால் மணம் கூட மாறவில்லை பூனை முடிகளாக இப்பதான் எட்டி பார்க்கும் தாடையில் சில ரோமம் ஓங்கி ஒரு அடி அடிச்சா செத்து போடும் இம்புட்டு சீனை போடுது ..நாதாரி என்று நினைத்து கொண்டு இருக்க ...

சவா (நலமா )சொல்லுங்க அம்மா.... கொச்சை தமிழ் எப்படியும் இங்க பிறந்த பிள்ளை போல இருக்கு ஓம் நான் கிளாஸ் முடிச்சு அங்க போயிட்டு இருக்கிறன் (ரயில் போகும் இடம் வேறு பிள்ளை சொல்லும் இடம் வேறு ).....ஓகே சுவார் (பின்னேரம் )வந்திடுவன் மாம் ஓகே முத்தத்துடன் கட்பண்ண பட்டது அம்மாவின் அழைப்பு .....அப்படியே ம்ம் சொல்லு நீ மாம் கால் பண்ணினா எங்க நிக்கிற என்று கேட்டா நான் மாறி சொல்லுட்டு வாறன் மைக்டொனட் போவமே அங்கதான் எங்கட ஆக்கள் வாறது குறைவு அந்த மைக்கில் மேல்மாடி இருக்கு அங்க போவம் என்ன ...ஓகே ரயிலில் எங்கட ஆக்களும் இருகினாம் நான் போனை கட் பண்ணுறன் இறங்கி மேல வந்திட்டு ரின்க் பண்ணுறன் ஓகே ம்ம் ...

முடியை கொத்தி கொத்தி விட்டபடி கழுத்துக்கு சுற்றுவதை அரைவாசி முகத்துக்கு சுற்றியபடி தான் எதோ பெரிய கெட்டிக்காரி என்னும் நினைப்புடன் ரயிலின் கம்பியை பிடித்தபடி ஒரு 17 வயது இருக்கும் அந்த பிஞ்சு முகத்தில் ஒருவித வெட்க சிரிப்புடன் பயணம் செய்தது ..

இந்த ஒரு பெட்டிக்குள் இவ்வளவு மனிதர்கள் ஒவ்வெரு சோகத்துடன் ..சந்தோஷத்துடன் ..பயணங்கள் தொடர்வதை எண்ணி இறந்த காலத்தை அசை போட்டபடி எனது போனை எடுத்து ..கடவுள் ஏன் கல்லானார் மானம் கால்லாய் போன மனிதர்களாலே ...என்னும் பாடலை போட்டு கேட்டபடி எனது பயணம் தொடருது .....
rayil_1066656f.jpg

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக