புதன், 30 ஏப்ரல், 2014

ஒரு மிஸ் கால் விபரீதம் ..(உண்மை கதை )

குறிப்பா புலம் பெயர்த்த ஈழ மக்கள் உங்களுக்கு இது உதவும் எவர் முதல் சொல்வது நம்ம கௌரவம் என்னாகும் மரியாதையை போயிடும் என்னும் சில அற்ப விசயங்களுக்கு பயந்து நீங்கள் உங்களுக்கு நடந்த இப்படியான சம்பவத்தை மறைத்து இருக்கலாம் ..

ஆகவே விழிப்பாய் இருங்கள் மோசடிகள் பல கோணத்தில் பல மாதிரி நடக்கு அதில் இதுவும் ஒன்று ஓகே பிரச்சினைக்கு வருவம் ..

(கற்பனை பெயர் அனைத்தும் )
வீட்டு தொலைபேசி அதிகாலை 5.30 மணிக்கு உறக்கத்தை கிழித்து அலறி தனது குரலை தயார் செய்கிறது நிசப்தம் உறக்கத்தை வேண்டி நிக்க தொலைபேசி தொந்தரவு கொடுக்கிறது  மனதில் யாரா இருக்கும் என எண்ணியபடி எட்டி போனை எடுத்து காதினில் கொடுக்கிறாள் ஜெசி மறுமுனையில் ..
ஹலோ ..ஹலோ .
இவள் ..ம்ம் யாரு நிங்க எங்கிருத்து ..
என்னை தெரியாதா வடிவேலர் காணியில் இருந்தம் இடம் பெயர்த்து ரதியின் தங்கை நான் நீங்க யாரு ?சுரேஸ் அண்ணை இல்லையா என எதிர்கேள்வி வைக்கிறது நாட்டில் இருந்து வந்த அந்த குரல் ..
இவள் இல்லை எனக்கு ஊர் தெரியாது நான் முன்று வயதில் இங்கு வந்தவள் சிலவேளை சுரேசுக்கு உங்களை தெரியும் போல அவர் வேலைக்கு போயிட்டார் வந்த பிறகு சொல்லுறன் நம்பர் இதுதானே அவர் உங்களுக்கு பின்னேரம் கால் பண்ணுவார் அக்கா ...
ஓம் பிள்ளை அவன் எங்களோட ஊரில நல்ல மாதிரி எங்களுக்கு ஒரு வழியில் அவர் மச்சான் இப்ப எப்படி இருக்குறான் உங்களை கலியாணம் கட்டி இருக்குறானா எப்ப நடந்ததது என குசல விசாரிப்புக்கள் தேனான கதையுமா நீண்டது அந்த உரையாடல் ..

வேலையில் நிக்கும் போது சுரேசின் கைபேசி பல முறை அலறி அடக்கியது வேலையின் சுமை எடுத்து பார்க்கும் அளவுக்கு அவனுக்கு நேரம் இருக்க வில்லை வேலை முடிந்து உடையை மாற்றியவன் முதல் வேலையா கைபேசியை எடுத்து தொடுதிரையில் கைகளை வைத்தான் இலங்கை நம்பர் அதிர்ச்சி அடித்தவன் அவசரமா அந்த நம்பருக்கு கால் பண்ணி யாரு என்று வினாவ முதல் தடுமாற்றம் எதிர் முனையில் ..

பின்னர் தங்களை தயார் படுத்தி மீண்டும் இணைப்பு கொடுக்க படுகுது ஹலோ ஓம் நிங்க சுரேஷ் அண்ணைதானே எப்படி சுகம் என்னை தெரியுமா நான் வினிதா  ரதியின் தங்கை நீங்கள் அடிக்கடி எங்க வீட்டு பக்கம் முன்னம் வந்து போவியள் கரணுடன் என தன்னை அறிமுக மிக நீண்டதா கொடுக்க .....குழப்பத்தில் சுரேஷ் எனக்கு தெரியவில்லை நான் அப்படி ஒரு இடத்திலும் இருக்க வில்லை நீங்க நினைக்கும் சுரேஷ் நான் இல்லை வேறு யாராவது இருக்கலாம் நம்பர் மாறி கால் பண்ணிட்டியல் போல ...

இல்லை இல்லை நிங்கள்தான் உங்களுக்கு இன்னார் தம்பி இவர் மச்சான் அவர் பெரியப்பா இன்ன இன்ன இடத்தில் இருக்கினம் இப்ப சமயத்தில் கூட உங்க உறவு முறையில் ஒருவர் மரணம் அடைத்தார் என சுரேஷ் பற்றி அனைத்தையும் புட்டு புட்டு வைத்தால் எதிர் முனை அந்த மர்ம பெண் ...

இவனுக்கு ஒரே குழப்பம் தனது பழைய நினைவுகளை ஒருமுறை கிளறி எடுத்து தான் சட் அடித்த ஓவரு பிள்ளையா மீட்டி பார்த்து ஆராய தொடங்கியவன் சொன்னான் எதுக்கும் நான் நாளைக்கு காலையில் உங்களுக்கு கால் பண்ணுறன் பிள்ளை என்று இணைப்பை துண்டிச்சவன் மனதில் ஒரு இனம் புரியா தவிப்பு ஒருவேளை அவளோ இவளோ சே அப்படி இருக்காது எப்படி எனது சொந்தம் எல்லாம் சொல்லுறாள் தெரிஞ்சவள் தான் நாளைக்கு பிடிகிறன் யார் என்று என் அவளின் குரலும் பேச்சும் இவனை கொஞ்சம் அசைத்து விட்டு இருந்தது ..

வீட்டுக்கு வந்தவன் எதுவும் பேசவில்லை கைகால்கள் கழுவி விட்டு தொலைக்காட்சியை இயங்கு நிலைக்கு கொண்டுவந்தான் தேனீர் கொண்டுவந்த ஜெசி என்ன ஆச்சு ஒரு மார்க்கமா இருக்கிறியள் அது ஒன்றும் இல்லை சும்மா தான் வேற என்ன சமையல் மதியம் என வேறு பக்கத்துக்கு ஜெசியை திருப்ப முயற்ச்சி செய்தான் ..ஆனாலும் மனதில் ஒரு நெருடல் இவளுக்கு போன கதையை சொல்லுவமா வேணாமா இங்க வளர்த்தவள் எதாவது நினைப்பாள் வேணாம் பிறகு சொல்லுவம் என்று மனதை பூட்டினான் ..

காலையில் வந்த போன் கதையை சொல்லுவம் என வாய் எடுத்த ஜெசி அவர் வேலைக்களைப்பு  மூடு வேற சரியில்லை பிறகு சொல்லுவம் அல்லது அவியல் போன் எடுப்பினம் தானே என்று எண்ணியபடி அவளும் விஷயத்தை தனக்குள் அடக்கி விட அடுத்தநாள் பொழுது விடிந்தது ..சுரேஷ் மனதில் வெளியில் போய் அவளுக்கு ஒரு கால் பண்ணுவம் என்கிற எண்ணம் மேலோங்க கீழே வருகிறான் அவளின் நம்பருக்கு இணைப்பை அழுத்தியபடி ...

ஓ..நிங்கலா நான் போனை பார்த்தபடி இருந்தேன் எங்க எடுக்க காணம் என்று நினைக்க நீங்கள் போன் பண்ணுறியள் என மயக்கும் பேச்சுடன் தொடக்கிறாள் அந்த பெண் வேலையும் வீடுமா ஓட்டமும் நடையுமா இருந்த சுரேஷ்க்கு இது ஒரு புது அனுபவம் நக்கல்; நளினம்; பகிடி ;பம்பல்; என எல்லா விஷயமும் கதைக்க ஆரம்பிக்குது இருவருக்குள்ளும் ...இங்க ஜெசி பெரிதா வெளியில் போகாதவர் எங்க போனார் இவ்வளவு நேரம் காணம் என்று கைபேசியை எடுத்து சுரேசின் நம்பருக்கு கால் பண்ண வெயிட்டின்க் கால் காட்டுது ....

சிறிது நேரத்தில் வீட்டுக்கு வந்தான் சுரேஷ் எங்க கால் பண்ணினான் எடுக்காமல் எங்க நின்டியல் என ஜெசி கேட்க அது ஒன்றும் இல்லை அதில அவன் வந்தான் இவன் வந்தான் என்று பொய் சொல்ல முயற்ச்சி செய்து அதில் வெற்றியும் கண்டான் சுரேஷ் ...ஆ சரி எங்காவது வெளியில் போவமே என்று வழமையன பேச்சை கொடுத்தால் ஜெசி ..இல்லை எனக்கு தலை வலி நான் வெளியில் வரவில்லை நீங்கள் போறது என்றால் போயிட்டு வாங்கோ என்று சொல்லிட்டு தனது அறைக்கு போனான் சுரேஷ் ..

என்னாச்சு இவருக்கு இரண்டுநாளா முகம் சரியில்லை எது கேட்டலும் பதில் இல்லை என்று யோசினையில் ஜெசி ..கீஈஈஇர்ர்ர்ர்ர்  என சுரேசின் போனுக்கு வந்து விழுகிறது ஸ்கைப் ஐடி நம்பர் செய்தி பெட்டியில் உடனம் அதை எடுத்து தனது போனில் பதிந்து வைத்து விட்டு நாளைய பொழுதுக்காய் இவன் ஏங்கியபடி ..இப்படி பலநாள் போயிட்டு போன்கதை ..கடைசியில் பணம் வரை அனுப்பியாச்சு ...அவளுக்கு .

திடீர் என ஒருநாள் நமக்கு ஒரு போன் வருது நான் வேலையா நிக்கிறன் பிறகு எடுங்கோ என்று சொல்லிட்டு உடனம் வைச்சிட்டன் பின்னர் ஒரு செய்தி வந்துது நான் ஜெசி அண்ணா முடிந்தால் கால் பண்ணுங்க என்று இவள் ஏன் இப்ப கால் பண்ணுறாள் என்ன பிரச்சினை என்று குழம்பி வேலையாள் வெளியில் வந்தவுடன் கால் பண்ணினேன்....

ஓம் அண்ணா என்னடி என்னாச்சு என்ன விஷயம் என்று கேட்க சிலநாள் சுரேஷ் நல்ல இல்லை என்னுடன் எதுக்கு எடுத்தாலும் பாய்ந்து விழுகிறார் திடீர் என்று மாறிட்டார் ஏன் என்று எனக்கு விளங்க வில்லை ஒருநாள் ஒரு கால் வந்தது ஊரில இருந்து நான் அதை அவருக்கு சொல்ல மற்றந்திட்டன் அவியல் சிலவேளை இவருக்கு கால் பண்ணி எதாவது சொல்லிச்சினமோ தெரியாது ஆனால் அவ பிறகு வீட்டுக்கு கால் பண்ணவில்லை அதால் நான் அப்படியே விட்டுடேன் நீங்க ஒருக்கா கால் பண்ணி கேளுங்க என்ன என்று என சொல்லிவிட்டு கண்ணீருடன் வைத்தால் போனை ...

சரி என்று நானும் கால் பண்ணி விசாரிச்சான் அவன் என்னுடைய நல்ல நண்பன் என்பதால் எல்லாம் கதைப்பம் சுரேஷ் என்ன மச்சி எங்கையாவது மாட்டிட்டா நமக்கு ஒரு கால் பண்ணுறாய் இல்லை என்று வழமையான பேச்சுடன் தொடங்க அவனும் எப்படி மச்சி உனக்கு தெரியும் என்று எதிர்பாராமல் பதிலை சொல்ல நானும் அப்படியே தெரிஞ்சவன் போல என்னவாம் பார்ட்டி என்று மேல தொடர ஆதி முதல் அந்தம் வரை சொல்லி வைத்தார் நம்ம நட்பு ....

எதுவும் சொல்லாமல் நான் ஓகே மச்சி நாளை நேர்ல உன்னை சந்திக்க வேணும் நான் வேலை முடிய ஏரியாக்கு வா என்று சொல்லிட்டு போனை வைத்தேன் வைத்த கையுடன் ஜெசிக்கு போனை போட்டு சொன்னேன் அன்று வந்த போனை பற்றி சுரேசுக்கு நீ வரவிட்டு சொல்லு என்று ஆனால் அவன் எதாவது கதைத்தால் மவுனமா இரு வார்த்தைகளை விட்டு சண்டையில் இறங்க வேணாம் அம்மாடி என்று சொல்லிட்டு அடுத்த நாள் சுரேசை சந்திக்கிறேன் நான் ....

எப்படி மச்சான் டீஐ சொல்லு என்று சொல்லியபடி இருவரும் பேசிட்டு இருந்தம் அப்ப அவன் சொன்னான் மச்சி நேற்று கதைத்த விஷயம் ஜெசிக்கு தெரியும் போல முதலே அவள் வீட்டுக்கும் கால் பண்ணி இருக்கிறாள் இப்ப என்ன பண்ணுறது என்று எனக்கு விளங்க வில்லை எல்லாம் பெரிய சிக்கலில் போய் முடிய போகுது என்று ஒரு கலவரமா கதையை சொன்னான் நான் மனதில் சிரிச்சபடி ஆ ..அப்படியா உனக்கு காட்டு போட்டு கதைக்கும் போது எங்க போனது அறிவு காசு வேற அனுப்பி இருக்கிற .ஸ்கைப்பில கதைச்சு வேற இருக்கிற அவள் யார் என்று கூட தெரியாமல் ..

இல்லை மச்சி அவள் எங்களின் ஆக்கள் எல்லோரையும் தெரியும் என்று சொன்னால் நான் எதோ துரத்து உறவா இருக்கும் என்று நினைச்சன் இப்ப என்ன பண்ணுறது அவள் வேற கண்ட நேரம் எல்லாம் sms  பண்ணுறாள் மச்சி இவள் கடுப்பாக முதல் ஏதாவது பண்ணு என்ன சொல்லி சமளிக்க போறனோ ஆண்டவா என்றான்.

(இவ்வளவுக்கும் ஒரு வலுவான கரணம் ஒன்றும் இல்லை பாருங்கோ .
அதாவது நீங்கள் இணையங்களுக்கு கொடுக்கும் மரண அறிவித்தல்கள் மட்டுமே அதில் யாரு யாருக்கு மச்சான் மாமன் எங்க எங்க இருக்கினம் என சகல தகவலும் ஒரு குறுப்பு நாட்டில் இருந்து எடுத்து அதிலும் குறிப்பா தனியா பெடியளின் பெயர்கள் இருந்தா அந்த நம்பர் சேமிக்கபட்டு அவர்களை இலக்கு வைத்து மிஸ் கால் கொடுக்க படுகிறது ஆர்வ கோளாரில் மீண்டும் அந்த நம்பருக்கு கால் பண்ணி இவர்கள் விபரம் கேட்கும் போது அங்கிருந்து பெண்பிள்ளை ஒன்று இவர்கள் மனதை சலன படும் அளவு கதைத்து ஓரளவு பலவீனம் அறிந்து பின்னர் அது மிரட்டலுக்கு வழிவகுத்து கொடுக்குது ...

நீ ஸ்கைப்பில் பேசியது எல்லாம் எங்களிடம் இருக்கு காசு அனுப்பு அல்லது இணையத்தில் போடுவம் என்பதாக தொடருது அவர்களின் நடவடிக்கை ..)

சரி மச்சி இது எல்லாம் ஒரு பிரச்சினை இல்லை சிம்மை கழட்டு வேற சிம்மை போடு வீடு போன் நம்பரை மாற்று பிரச்சினை முடியுது எதுக்கு பயம் உனக்கு ஜெசி அப்படி முட்டாள் கிடையாது நீ நோமலா இரு வழமையா எப்படி உங்க பொழுது போகுமோ அப்படி மாறு இதை கனவா மறந்து போ என்று கூறி நடந்தேன் நான் ..

இவங்க எந்த ஏவா குறுப்போ பரம்பொருளே ..!

ஆகவே மரண அறிவித்தல்கள் கொடுக்கும் போது நிங்கள் நிரந்தரமா பாவிக்கும் தொலைபேசி இலக்கங்களை தவிர்ப்பது நன்று ..!
  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக