புதன், 30 ஏப்ரல், 2014

நானும் அப்பாச்சியும் 2 .!

grand+.jpgநான் செய்யும் குறும்புகளுக்கு அளவே இருக்காது அப்படி குழப்படி சிறுவயதில் ஒவ்வரு நாளும் காயம் இல்லாமல் இரத்தம் சிந்தாமல் வீடு போனது கிடையாது அப்படி விளையாடி வரும் காயங்களுக்கு மருந்து போட்டு விடுவதில் இருந்து சுடுதண்ணீ ஒத்தனம் கொடுத்து பழைய நிலைக்கு வரும்வரை கிழவி உறங்காது .சும்மா பஞ்சி  பட்டு படுத்து இருந்தாலே கிழவி குழற தொடங்கிடும் ஒருநிமிடம் சும்மா இருக்க மாட்டான் இன்னும் எழும்பாமல் படுத்து இருக்கிறான் என்ன எண்டு கேளண்டி மகளே என்று அம்மாவை நச்சரித்து எடுக்கும் .

மாதுளம் பழம் மரத்துக்கு மாதுளைக்கு அணில் கடிக்காமல் அங்கர் பை எடுத்து கட்டி விடுவா பழம் நல்லா முற்றிய பின் பை இருக்கும் பழம் இருக்காது நானு ஆட்டையை போட்டு பள்ளிக்கூடம் கொண்டு போயிடுவன் ,அந்த நேரங்களில் யாரவது பக்கத்துக்கு வீட்டு பெடியள் வந்து போனா முடிச்சுது கதை அந்த பெடிவந்தது புடுங்கி கொண்டு போட்டுது கள்ள பெடி வீடுவாசளுக்கு எடுக்க கூடாது என்று பழி அங்க விழும் நாம சோகமா குந்தி இருந்து கதை கேட்பம் ஓமன ஆச்சி அவன் வர நீ என்ன செய்தனி பார்க்காமல் என்று இன்னும் கொளுத்தி போடுறது நம்ம வேலை பாருங்கோ .

அப்பாச்சியின் கைவந்த கலை ஓட்டப்பம் சுடுவது ஒரு 20வருடமா நான் இன்னும் அப்படி ஒரு அப்பம் சாப்பிடவே இல்லை உடைச்ச சட்டியில் ஊற்றி சிரட்டையால் மூடி எடுக்க அந்த அப்பத்தில் பல நூறு ஓட்டை இருக்கும் நல்ல தேங்காய் பாலும் சீனியும் கலந்து அதில் தொட்டு சாப்பிடும் ருசி வாழ்வில் இன்றைய தலைமுறைக்கு கிடைக்காத ஒரு காலமா போட்டுது .என்ன சமையல் செய்தாலும் வாசனை நாலுவீடு தள்ளி மணக்கும் கைப்பக்குவம் உள்ள ஆள் ஆச்சி என்னமோ தெரியல்ல அளவான பாசமும் கூடிய அன்பும் கொட்டி கொடுபதால் எனக்கு சுவையா இருந்து இருக்கும் என்று இப்பொழுது தோன்றுவது உண்டு .

உள்ள பனைமரம் எல்லாம் ஏறி கிளி பிடிக்க நெஞ்சு எல்லாம் உரிச்சு கை எல்லாம் கீறி கிழிபட்டு வீட்டுக்கு வருவன் அம்மா கண்டா ஓட ஓட அடி விழும் என்கிற பயத்தில் வீடுக்கு புறத்தால் செக்கல் பொழுதில் வந்து பதுங்கி இருக்கிறது அப்பாச்சி கோயிலா வரும்வரை வந்தபின்தான் ஓடிபோய் அவா பின்னாடி நின்று பாதுகாப்பை தேடி ஆயிரம் பொய் எல்லாம் சொல்லி அம்மாவை சமாளிச்ச பின்னே வீட்டுக்கு உள்ளே போகலாம் இல்லது கிளுவம் தடி முறியும் முன்னாடி போய் மாட்டினா பாருங்கோ .அம்மா அடிக்கவேணும் என்று முடிவு எடுத்தா இரவு பாய்க்கு கிழே தடி முறிச்சு வைத்து இருப்பா படுக்கைக்கு போக எட்டி கையில பிடிச்சு சுற்ற தொடங்கினா கொப்பளம் வரும்வரை விழும்   என்று தெரியும் ஆச்சிக்கு எனக்கு வேவு பார்க்கிறது கிழவிதான் அட பெடி அம்மா தடி முறிச்சவா பின்னேரம் நீ இன்று எனக்கு அருகில பேசாமல் படு அங்க போன நான் பிடிக்க வரமாட்டன் என்று முதலே தகவல் தந்துடுவா .


நான் அடிக்கடி கிழவியின் சங்கிலி ...தோடு ..மோதிரம் .எல்லாம் நீனு செத்தா எனக்கு தானே என்று சொல்லுவன் இப்பவே ஒரு பேப்பர்ல எழுதி வை அல்லது மகனிட்ட சொல்லி வை என்று பகிடியா சொல்வது உண்டு அதுக்கு ஆச்சி சொல்லுவா நான் சாகிற காலம் நீ என்னை எப்படி பார்க்கிறாய் என்று பார்த்துதான் உனக்கு தருவன் அல்லது இல்லை என்று அப்படி அப்பாச்சி இறக்கும்போது 89 வயது கடைசி காலங்களில் கண் தெரியாமல் போயிட்டது குளிக்க தண்ணி நிறைத்து கொடுத்து, பேப்பர் வாசிக்கிறது; ஊர் புதினங்களை வந்து வக்கனையா சொல்லுறது ,எல்லாம் என்னுடைய வேலை அவியல் அப்படி இவையள் இப்படி அந்தபெடி அங்க நிக்கு யாரு யாரு கலியாணம் கட்டினம் யாரு தெருவில நின்று காதல் பண்ணினம் என்று கிழவிக்கு ஒன்றும் இல்லாமல் நான் வந்து சொல்லுவன் .

சிலவேளை தனிய இருப்பா வீட்டில் நான் வந்தா சத்தம் இல்லாமல் போய் மெதுவா சங்கிலியில் பிடிப்பன் என்ன செய்கிறா பார்ப்பம் என்று கிழவி சிரிச்சு போட்டு சொல்லும் உனக்குத்தான் கழட்டிக்கொண்டு போ என்று நான் பேசுறது இப்படி கள்ளன் வந்து செய்தா சத்தம் போடாமல் இப்படி சொல்லுவியா என்று அதுக்கு கிழவி சொல்லும் திருவாலி உன்னை தவிர எவனுக்கு என்னை தொடும் தைரியம் வரும் என்று ;யாருடைய மகள் என்று நினைச்ச என்று வீராப்பா சொல்லுவா .

சும்மா காச்சல் வந்தால் நான் அனுங்கி குனுங்கி கிடப்பேன் அண்ணன் சொல்லுவான் அவனுக்கு நெஸ்ட்மொட்  காச்சல் வந்திட்டு ஒன்று வாங்கி கரைத்து கொடுத்தா குளிசை போடாமல் மாறும் என்று நக்கல் பண்ணுவான் கிழவி தன்னிடம் உள்ள எல்லாம் புறக்கி செவினப் சோடாவும் .நெஸ்ட்மொட்டும் வாங்கி வந்து தலைமாட்டில் வைக்கும் உண்மைக்கும் இரண்டையும் கண்டால் கச்சல் போயிடும் எனக்கு :) பாசம் என்றால் என்ன என்று சொல்லி கொடுத்தவா ஆச்சி அப்படி வாழ்த்து காட்டி சென்றார் .


இப்பொழுது என்னுடைய கவலைகள் எல்லாம்  குடும்பம் என்றால் என்ன ?உறவு என்றால் என்ன ? அன்பை பரிமாறுவது எப்படி ...விட்டுகொடுப்பு ..புரிதல் ..நேசம் ..பாசம் என்று இப்பொழுது உள்ள தலைமுறைக்கு சொல்லி கொடுக்க அப்பாச்சிகள் ...அம்மம்மாக்கள் அருகில் இல்லையே திக்கு திசைகள் அற்று அனாதரவா வளர்த்து வரும் இளைய சந்ததி அப்பா அம்மாவைக்கூட வைத்து பார்க்குமா எதிர்காலத்தில் என்பது கேள்வி குறியே .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக